Payday loans Cialis online
payday loans Car insurance

Posts Tagged ‘ சைவசித்தாந்தம் ’

இந்து மத விளக்கங்கள், சைவம்

“தன்பெருமை தான் அறியான்”

“தன்பெருமை தான் அறியான்”

நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு. [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், சைவம்

அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்

அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்

திருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும். [மேலும்..»]

சைவம்

வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

நாட்டார் வழிபாட்டு நெறிகளைப் பழித்து அழித்து ஒழிக்காமல் அவற்றைத் தழுவி ஏற்றுக் கொண்டு ஒருபெருந்தெய்வ வழிபாட்டினை அறிமுகப்படுத்தும் வைதிகநெறியின் ஆற்றலை உணர்ந்து போற்ற வேண்டும்... வேதத்தில் முதல்வனுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை விளக்கும் ‘அத்துவிதம்’ என்னும் பதத்திற்கு மெய்கண்டாரே உண்மையான பொருளை விளக்கியருளினார். மெய்கண்டதேவரின் திருவவதாரம் இந்திய தத்துவ ஞான வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், சைவம்

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4

பசு, பதி, பாசம் இம்மூன்றும் உள்பொருள்கள் எனப் பேசுவது சைவசித்தாந்தம்; சம்பந்தர் இந்தக் கலைச் சொற்களை வேதத்தினின்றும் எடுத்து ஆண்டார்... வைதிகர் என்னும் பெயர் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்குதல் பிற்காலத்தில் நேர்ந்து விட்டபிழை; வேதவழக்கை உடன்பட்ட அனைவரும் வைதிகரே. [மேலும்..»]