ஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும் – 1

ஆகமங்களினால் நெறிப்படுத்தப்பட்டுள்ள இவ்வளவு வழிபாட்டு முறைகளும் எமது சமயத்தின் தந்தை வழி மரபு எனலாம். எமது கிராமிய வழிபாட்டு முறைகளான பொங்கல், குளிர்த்தி, மடை. படையல், காவடி, தீ மிதிப்பு, கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சிணம், சாமியாடல் யாவும் இவ்வாறான தாய்வழி மரபு வழிபாட்டு முறைகளாகும்.. சிவாகமங்களில் இவ்விதமான வேள்விகள் கூறப்படாவிட்டாலும் வேதவேள்விகளைச் சிவாகமங்கள் மறுதலிப்பது இல்லை. தமிழில் உள்ள தேவார திருமுறைப் பதிகங்களும் அவ்வாறே…

View More ஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும் – 1

கானக மக்களும் மலைக்கோயில்களும்

கானக மக்களும் மலைவாசிகளும் தமக்கென்று ஒரு தனிக்கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் இந்துக்களே அல்ல – இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துக்கள் காலனியம் கட்டமைத்த வரலாறு மூலமாக புகுத்தப் பட்டன. தமிழில் உள்ள சைவ, வைணவ பக்தி இலக்கியங்களை சாதாரணமாகக் கற்பவர்களுக்குக் கூட இந்த சித்திரிப்புகள் எவ்வளவு பொய்யானவை என்பது புரியும். “கானவர் தம் மாமகளிர்” என்கிறார் சம்பந்தர். மலைக்குறவர் இனங்கள் திருமாலின் பொன்னடி வணங்கும் காட்சியைப் பாடுகிறார் பெரியாழ்வார்..

View More கானக மக்களும் மலைக்கோயில்களும்

சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்

சைவத் தமிழ் நூல்களிலும் திருமுறைகளிலும் சைவ சித்தாந்தங்களிலும் வடமொழி மேன்மை போற்றப்படுகிறது. இவற்றை மதிப்பவர் வடமொழி பிடிக்காது என்றால் சாப்பிடுவதற்கு சாதம் வேண்டும் ஆனால் அரிசி பிடிக்காது என்று சொல்லும் சிறுபிள்ளைத்தனம் போன்றது… ஆரியந்தமிழோடு இசையானவன் என்றும் வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்றும் அப்பர் சுவாமிகள் ஆறாம் திருமுறையில் அடித்துக் கூறுகிறார். எமது சைவம் விரிவுபடுவதை விரும்புவோம். பிரிவுபடுவதை விடுவோம்..

View More சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்

அஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்

தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றிருந்த இவர், ஐம்பது வயதுக்குப்பின் தனது வழக்கறிஞர் பணியை விடுத்து, முழுநேரமும் தமிழ்ப்பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். சைவத்திருமுறைகளின் பல பகுதிகளை ஆங்கிலத்தில் நேர்த்தியாக மொழிபெயர்த்தது இவரது மாபெரும் பங்களிப்பாகும். வாழ்நாள் முழுவதும் தீராத ஆர்வம் கொண்ட படிப்பாளியாக விளங்கிய டி.என்.ஆர் அவர்களது இலக்கத்தில் அவர் வைத்திருக்கும் தனிப்பட்ட புத்தக சேமிப்பில் 50,000க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன…

View More அஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்

அஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

வேதநெறியும் தமிழ் சைவத்துறையும் (2009) என்பதில் தொடங்கி சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அவரது கட்டுரைகள் தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளன. ஐயா அவர்களின் கட்டுரை ஒவ்வொன்றும் அவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும், அவரது சைவசித்தாந்த ஞானத்தெளிவுக்கும், அவரது சிவபக்திச் சிறப்பிற்கும் சான்று பகர்வனவாக இருக்கும். திருமுறைகளைப் பேசுவதும் எழுதுவதும் மட்டுமல்லாது, இசைக்கவும் வல்லவர். ஆழ்ந்த கர்நாடக சங்கீத ரசனை கொண்டவர். பேராசியரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பும், தொடர்ந்து சைவ அன்பர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் கற்பித்து வந்தவர். .

View More அஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்

சம்பந்த பெருமான் தமது பதிகங்கள் ஒவ்வொன்றின் திருகடைக்காப்பிலும் அப்பதிகங்களை ஒதுவதால் ஆன்மாக்கள் பெற்றுய்யும் பலன்களை எடுத்துரைப்பார். பல பதிகங்களில், பயன்களை கூறினாலும், அவர் அருளிய நான்கு பதிகங்களில் மட்டும் “*ஆணைநமதே *” என்று திருகடைக்காப்பில் அருளிப்பாடுகின்றார்… நம்பியாண்டார் நம்பிகள் போல் அக்கால மக்களுக்கும் இவ்வார்த்தை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் தங்கள் பெயராகவே வைத்துக்கொண்டனர். பிரான் மலை கல்வெட்டில், இத்தன்ம சாசனத்துள் கையெழுத்திட்டவருள் ஒருவர் “ஆணை நமதென்ற பெருமாள்” என்று உள்ளது…

View More ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்

திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2

திருநாவலூர் சுந்தரர் மடம் அறநிலையத்துறை ஆவணங்களின்படி ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலின் கிளை கோயிலே. எனவேதான் 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் இணை ஆணையர் புது மண்டபம் கட்டுதல் என்றபடிக்கே உபயதிருப்பணி அனுமதி கொடுத்துள்ளார். இந்த உபயதிருப்பணிக்கு அறநிலையத்துறை 6 நிபந்தனைகளை கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக இரண்டாவது நிபந்தனை ஆகமவிதிப்படி செயல்படவேண்டும் என்பது. ஆனால் இன்று அத்தனை நிபந்தனைகளும் ஆள்பலம் அரசியல் பலத்தால் மீறப்பட்டிருக்கின்றது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அறமற்றதுறை… சைவவேடதாரிகள், ஆணவப்போக்கோடு, சுந்தரர் மடம் நிலைப்பெற கடந்த நூறு ஆண்டுகளில் காரணமாக இருந்த சிவாச்சாரியார்களை மிரட்டி ஒதுக்கியும், பாரம்பர்ய சைவ ஆதினங்களின் வழிகாட்டுதல் இல்லாமலும் தான்தோன்றித் தனமான திருப்பணியும் குடமுழுக்கும் செய்து விட்டிருக்கிறார்கள். இந்த சைவவேடதாரிகளின் இன்றைய செயல்பாடு சரிதானா? சைவதர்மமா? என்பதை சைவசமயத்தார்கள் சீர்தூக்கி சிந்திக்கவேண்டும்…

View More திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2

திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1

அக்காலத்தில் குருக்கள் நித்யபடி வாழ்க்கையே கஷ்டமானது. அந்த கஷ்டத்திற்க்கும் நடுவில், ஊருக்கு ஒரு குடியாக உள்ள குருக்கள் எல்லாம் சேர்ந்து திருப்பணி செய்வது அசாத்யமானது. ஆனால் ஸ்ரீ சுந்தரர் பெருமான் மீது கொண்ட பக்தியும் அன்பும், சுவாமி திருவருள் துணை ஒன்றையுமே நம்பிச் செய்தார்கள். அன்று அவ்விடத்தில் திருமடம் அமைக்கவில்லை என்றால், காலப்போக்கில் பல கோயில் இடங்கள் மாயமானது போன்று, ஸ்ரீ சுந்தரர் அவதார பூமியும் மயமாகி மறைந்தே இருக்கும். ஆனால், இன்றோ சுந்தரர் பூமியை அடையாளப்படுத்திய சிவாச்சாரியார்களை அவ்விடத்திற்கு வரவிடாமல் குண்டர்களை வைத்து மிரட்டும் சைவவேடதாரிகளை திருமுறை வியாபாரிகளை என்னவென்று சொல்வது? சிவாச்சாரியார்களை மிரட்டி வெளியேற்றி சுயநல லாபத்திற்ககாக, அடையாள அரசியலுக்காக திருப்பணி செய்யும் ருத்திராட்ச வேடதாரிகளை இறைவன் மன்னிக்கவே மாட்டார். இப்பொழுது நடைபெற்றுள்ள திருப்பணி பல உண்மையான சிவாச்சாரியார்களின் மனவேதனையில், மன துக்கத்தில் எழும்பும் ஒரு ஆகம விதியற்ற மாயக் கட்டிடம். ஒரு மரபிடம் இருந்து பிடுங்கி அவர்களை மிரட்டி வெளியேற்றி செய்யும் இந்த திருப்பணி கண்டிப்பாக இறை திருப்பணி அல்ல.. உண்மை சைவர்களின் பரவலான எதிர்ப்பையும் மீறி முற்றிலும் வேதாகம விரோதமாக ஒரு சமய, கலாசார அழிப்பு குடமுழுக்கு என்ற பெயரில் திருநாவலூரில் நடந்தேறியிருக்கிறது…

View More திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1

இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்

இறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன? இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா?… இராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் சம்பந்தர் கூறினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார் பாராட்டினார் எனலாம்…

View More இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்

சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை

பழ.கருப்பையாவின் அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் இந்தக் கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், சிவலிங்க வழிபாட்டையும், ஆதி சங்கரரையும், வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை… வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण – shiSHNaa) என்ற சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु – shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி… பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச் சைவர்கள் உணர்வார்கள். சைவ சமயக் குரவர்கள் போற்றிய மகத்தான மரபை, வெறும் சல்லிக்காசு அரசியல் லாபத்திற்காக அவதூறு செய்யும் பழ.கருப்பையா போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை உணருங்கள்…

View More சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை