Posts Tagged ‘ சைவம் ’

அறிவிப்புகள்

யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை

உலகம் முழுவதும் வாழும் சைவப் பெரியோர்கள், அடியார்கள் உதவியுடன் யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கட்டிடம் புனருத்தாரணம் செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளது. அடியார்கள் அனைவரும் இத்திருப்பணியில் பங்குகொண்டு குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டுமென கட்டிடக் குழு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறது.

மேலும் »

இந்து மத மேன்மை, சமூகம், பண்டிகைகள்

ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்

ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்

இந்த ஜீவநதியில் வந்து சேரும் உயர்வு தாழ்வு என்னும் கழிவுகளை இது பலவிதத்தில் கழித்துக்கொண்டே இருக்கிறது. ஜாதிகளின் உயர்வு தாழ்வுகள் பேதிக்கப்பட்டதாகவும் மற்றும் ஒருங்கிணைந்து ஒளிரும் ஹிந்து ஸமூஹத்தின் ஒரு முகமாகவும் பரிச்சயம் தெரிவிக்கும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட மற்றும் பார்த்து ரசித்த தக்ஷிண பாரதத்திலிருந்து உத்தர பாரதம் வரைக்குமாய் என் அனுபவங்கள்

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம், சைவம்

ஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்

ஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்

பிற சமயத்தார் சைவத்திற்குத் தீங்கு இழைக்கத் தொடங்கும் அவ்வப்போது, தம் வாக்கு வல்லபத்தால், அவர்களை வென்று சைவப் பயிர் வளர்த்த வைதிகசைவக் காவலர் அப்பைய தீட்சிதர்... ஊர்ணநாபி (சிலந்திப்பூச்சி) யானது எப்படி நூலைச் சிருட்டிக்கின்றதோ, பூமியிலெப்படிப் பல ஓஷதிகள் (தாவரங்கள்) உண்டாகின்றனவோ, மனிதன் மேனிமீது எப்படித் தலைமயிர் உடம்புமயிர் உண்டாகின்றனவோ அப்படியே பிரமமாகிய அட்சரத்திலிருந்து (அழிவிலாதது) யாவும் உண்டாகின்றன... சிவன் எளிய பூசைக்கே உளம் மகிழ்வான். அவனை மகிழ்விக்கப் பச்சிலையும் நீரும் போதும்.. '

மேலும் »

இலக்கியம், சமூகம், சைவம்

பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]

பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]

இப்புராணத்தில் பேசப்பெறும் அநேகமான அடியவர்கள், இல்லறத்தினரே என்பதால் பரவலாக எல்லா நிலைகளிலும் பெரியபுராணத்தில் காதல், திருமணம், திருமணவாழ்வு முதலியன பேசப்பட்டிருக்கிறது... மனுநீதிகண்ட சோழனின் வரலாற்றைப் பேசும் போது நீதிமுறைமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொருந்தும் என்று சேக்கிழார் புதுமை காட்டுகிறார்... இவற்றால் தமது காவியத்தை புரட்சிக் காவியமாகவும் சமுதாயக் காவியமாகவும் தெய்வச் சேக்கிழார் மாற்றியிருக்கிறார்.

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம், வைணவம்

வள்ளுவமும் வைணவமும்

வள்ளுவமும் வைணவமும்

வள்ளுவரை சைவரென்றும் சமணரென்றும் சொல்வாருண்டு. நீ ஏன் அவருடைய படைப்பில் வைணவக் கருத்துக்களைக் கண்டு தொகுத்து வள்ளுவமும் வைணவமும் என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று எழுதிண்டு வா, பாக்கலாம்" என்றார். எனக்கு திக் என்றது. இது ஏதுடா வம்பாப் போச்சே! வள்ளுவருக்கு நாயனார் என்று கூடப் பெயருண்டே? பேசாமே குறட்களை நெட்டுரு பண்ணிண்டு இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், தத்துவம்

பாரதியின் சாக்தம் – 3

பாரதியின் சாக்தம் – 3

சக்தி வழிபாட்டைக் கூறவந்த சாக்தம் ஏன் வைஷ்ணவம், சைவம், சாக்தம் என்பனவற்றின் இடையே இருக்க வேண்டிய பரஸ்பர பாவங்களைப் பற்றிப் பேசுகிறது?... மகளிரைத் தேவியின் உருவங்களாகக் கண்டு வழிபடுவது என்பது விவேகானந்தரின் கருத்துப்படி அவர்களுக்குக் கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தன்னம்பிக்கை வளர்வதற்கான சூழ்நிலைகளை அமைத்துக்கொடுத்தல், வாழ்க்கையின் சரிநிகரான துணைவர்களாய் மதித்து நடத்துதல்... சக்தியைத் தாய் என்று போற்றும் தக்ஷிணாசாரம், துணைவி என்று கண்டு போற்றும் வாமாசாரம் இரண்டையும் ஒரே பாடலில் பாரதி இணைத்துப் பாடும் அழகு...

மேலும் »

இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், இலக்கியம், சைவம்

சிந்தனைக்கினிய கந்தபுராணம்

சிந்தனைக்கினிய கந்தபுராணம்

கந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன்.

மேலும் »

சமூகம், சைவம், நிகழ்வுகள், பொது

இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!

இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!

அச்சம் மீதூர தமிழர்கள் நிலை இருக்கையில், மாற்றுச் சமயத்தில் சேர்ந்து விடு என்று அருகாமையிலேயே ஆர்ப்பரிக்கும் குரல்கள்.. புத்தர் சிலைகள் சைவத் தமிழர் நிலப்பகுதியெங்கும் அமைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மளமளமென்று விகாரங்கள் எழுகின்றன.. இலங்கையின் பதினேழு மாவட்டங்களிலும் உள்ள சைவத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முதற்கட்டமாக 150 திருமுறை வேள்விகளை நிகழ்த்துகிறோம்.

மேலும் »

ஆன்மிகம், சமூகம், வரலாறு

சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2

சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2

“சிவ” எனுஞ் சொல்லைச் சொல்லுகின்றவன் சாதியிற் சண்டாளனாக இருப்பினும் அவனைக் காணின், அவனோடு கலந்து பேசுக, அவனோடு உறைக, அவனோடு உண்ணுக .. அடிமைப் பெண்ணின் மகனாகிய கச்சீவது என்பவன் ஆரிய வேதம் செய்த இருடிகளில் ஒருவனாக இருத்தலினாலும், அகத்தியரின் பத்தினி உலோபாமுத்திரை முதலாய பல பெண்கள் இருக்கு வேதத்தின் சில பாகங்களைச் செய்திருப்பதனாலும் சூத்திரரும் பெண்களும் வேதம் ஓதலாம் எனும் நியாயம் ஏற்படுகின்றது” என்று கூறுகிறார் பாம்பன் சுவாமிகள்.

மேலும் »

ஆன்மிகம், இசை, இலக்கியம்

காவடிகள் சிந்து பாடும் கழுகுமலை

காவடிகள் சிந்து பாடும் கழுகுமலை

”கருணை முருகனைப் போற்றி - தங்கக் காவடி தோளின் மேலேற்றி.... “ - காவடிச்சிந்து மெட்டுக்கள், படித்தவர், பாமரர் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. காவடிச்சிந்து என்றாலே நம் நினைவுக்கு வருபவர், அண்ணாமலை ரெட்டியார்... இங்கு கழுகுமலையில் கடலொத்த வீதிகள் காணப்படுகின்றன. அங்குள்ள கடைகளின் முன்பு முத்துப் பந்தல் போட்டிருக்கிறார்கள். அந்தப் பந்தலின் ஒளியினால் அஷ்ட கஜங்களுடைய தந்தங்களின் ஒளி கூட மழுங்கி விடுமாம்!

மேலும் »