மேதா ஸூக்தம் – தமிழில்

வேதங்களில் வரும் மேதா என்ற என்ற பெண்பாற்சொல் உள்ளுணர்வு (intuition), அறிவு (intelligence), மன ஆற்றல் (mental vigor) ஆகியவற்றைக் குறிக்கிறது. இதிலிருந்தே தமிழில் மேதை, மேதைமை ஆகிய சொற்கள் வருகின்றன. அறிவையும் அதனால் விளையும் ஆற்றலையும் ஒரு சக்தியாக, தேவியாக போற்றுகிறது இந்த அழகிய வேதப்பாடல். வேதங்களில் இவ்வாறு போற்றப்படும் மேதா தேவி என்னும் தெய்வீக சக்தியே சரஸ்வதி, கலைமகள், பாரதி என்று ஒவ்வொரு இந்து இல்லங்களிலும் உள்ளங்களிலும் வழிபடப் பெறுகிறாள்…

View More மேதா ஸூக்தம் – தமிழில்

துர்க்கா ஸுக்தம் – தமிழில்

யஜுர்வேதத்தில் உள்ள பரம பவித்திரமான ஸூக்தம் இது. துர்கா என்ற சொல்லுக்கு கடக்க முடியாத, செல்லமுடியாத என்பது பொருள். துர்காணி – கடக்கமுடியாத ஆபத்துக்கள். அன்னை மகா பிரகிருதியும் ஆதி சக்தியுமானவள், அறியமுடியாதவள் என்பதனால் இச்சொல் அவளது திருப்பெயராக இலங்குகின்றது… ஜாதவேதஸ் எனும் அக்னிக்கு சோமத்தைப் பிழிந்து அளிப்போம். அறிவுருவான அவன் எமது பகைகளைப் பொசுக்கிடுக. எமது ஆபத்துக்கள் அனைத்தையும் போக்கிடுக கடலைக் கடக்கும் கப்பலென அக்கரை சேர்த்திடுக…

View More துர்க்கா ஸுக்தம் – தமிழில்

மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்

மித்ரன் ஒளியையும் உறவையும் நட்பையும் வளர்க்கும் வேத தெய்வத்தின் பெயர். சூர்ய தேவனுடைய கண்ணாக இந்தத் தெய்வத்தின் சக்தி கருதப்படுகிறது. இந்தியப் பண்பாடு மட்டுமின்றி, பண்டைய பாரசீகப் பண்பாட்டிலும் ஜராதுஷ்ட்ர மதத்திலும் மித்ர என்ற இதே பெயருடன் இக்கடவுளை வழிபட்டனர்… “சத்தியத்தின் ஒளியினாலும் கண்ணுக்குப் புலனாகும் ஒளியினாலும் அமரரையும் மனிதரையும் தத்தம் தொழில்களில் புகுத்தி பொன்மயமான தேரில் சுற்றி வருகிறான் ஸவித்ரு தேவன். உலகங்களையெல்லாம் நன்கு பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறான்”… ‘இமம் மே வருண’ என்ற இந்தப் புகழ்பெற்ற மந்திரம் தினந்தோறும் சாயங்கால சந்தியாவந்தனத்தில் உபஸ்தான (வேண்டுதல்) மந்திரமாக மேற்கு நோக்கி நின்று சூரியனைத் தொழுது கூறப்படுவது…

View More மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்

ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்

சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன் – வேற்றுமையற்றவன் – பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன் – சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன் -அறியவொண்ணாதவன் – சத்தியப்பொருளென அறியப்படுபவன்… அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான். பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது? அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம். அறிவோனை அறிவது எங்ஙனம்?…

View More ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்

கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

மன்யுவே எங்களிடம் வருக – வலியர்களிலும் வலியன் நீ – உனது நட்பான தவத்துடன் இணைந்து – எமது பகையை வென்றிடுக – நட்பற்றவர்களைத் துரத்துவோன் நீ – விருத்திரர்களை தஸ்யுக்களைத் துளைப்பவன் நீ – செல்வங்களை எமக்கு நல்கிடுக… கோபத்தின் தேவதையாக மன்யுவை வேதம் கூறுகிறது. ‘ருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்’ (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury),உணர்ச்சிகரம் (passion),பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும். மன்யு சூக்தம்ரி க்வேதம் பத்தாம் மண்டலம் 83வது சூக்தம், ரிஷி தாபஸ மன்யு. மொழியாக்கம் எனது…

View More கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

மரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]

அவிழ்த்து விடப்பட்டு வழி காத்து நிற்கின்றன யமனின் இரு நாய்கள் – கருப்பும் வெள்ளையுமாய் – அவை தொடரவேண்டாம் உன்னை – இங்கு வா நீ – விலகிச் செல்லாதே – தொலைவில் மனதை விட்டு நிற்காதே…. ஊன் பொசுக்கி உண்ணும் அக்னி – துன்புறுத்தாதிருந்திடுக உன்னை – வானமும் பூமியும் காத்திடுக – கதிரோனும் நிலவும் காத்திடுக – எங்கும் நிறைந்த வெளி – தன் தெய்வசக்தியால் காத்திடுக…

View More மரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]

முண்டக உபநிஷதம்

இரு பறவைகள், இணைபிரியாத் தோழர்கள், ஒரே மரத்தில். ஒன்று கனிகளைத் தின்கிறது, மற்றொன்று தின்னாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது… சத்தியமே வெல்லும், பொய்மையல்ல – சத்தியத்தின் பாதையே தெய்வீக வழி – ஆசையடங்கிய ரிஷிகள் சென்றடைவதும் சத்தியத்தின் மேலாம் இருப்பிடமே… சொல் விளக்கங்களால் அடைவதல்ல அந்த ஆத்மா – மேதமையால் அல்ல, கேள்வியின் மிகுதியாலும் அல்ல – அதற்காக ஏங்குபவன் அதனையடைகிறான். அவனுக்கே தன்னியல்பை வெளிப்படுத்துகிறது ஆத்மா…. வலிமையற்றோன் அடைவதில்லை ஆத்மாவை – ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும் அடைவதில்லை – சரியான உபாயங்களால் முயலும் அறிவுடையோனது ஆத்மா பிரம்மத்தின் இருப்பிடத்தில் சென்றடைகிறது…

View More முண்டக உபநிஷதம்

புருஷ சூக்தம்

புருஷனே ஆகுதியாக வேள்வி செய்தனர் தேவர்கள் – வசந்தம் நெய்யாக, கோடை விறகாக, சரத்காலம் அவியுணவாக ஒரு வேள்வி… பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்… பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்தப் பாடல். புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான், ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான். முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல்… வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது…

View More புருஷ சூக்தம்

ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1

”அமுதம் அவன் நிழல் மரணமும் அவன் நிழல் – எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?…இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில் – பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும்நீராக இருந்தது – வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது – அதிலிருந்து மகத்தான தவத்தால் அந்த ஒன்று பிறந்தது… தேவர்களோ படைப்பிற்குப் பின்வந்தவர்கள் – அப்படியானால் அது எப்படி உருவாயிற்று? யாரறிவார்?”… சிருஷ்டி உண்மையில் எப்படி உண்டாயிற்று, யார் அதனை உருவாக்கிய கடவுள் என்ற ஆதிக் கேள்வியையே இந்தப் பாடல் போற்றுகிறது என்று வேத இலக்கியம் குறித்து எழுதிய நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். பிற்காலத்தில் வளர்ந்து செழித்த இந்திய தத்துவ ஞானப் பிரிவுகள் அனைத்தும் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளின் ஆரம்பப் புள்ளி இந்த சூக்தங்கள் தான்…

View More ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1

ஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1

அடியே, மனைவி கணவனை விரும்புவதனால் கணவன் அன்பிற்கு உரியவன் ஆவதில்லை. தன்னை (ஆத்மாவை) விரும்புவதாலேயே கணவன் அன்பிற்கு உரியவனாகிறான்… வீணை இசைக்கப் படும்போது அதன் பிரத்யேக அதிர்வுகள் புறத்தே உணரப் படுவதில்லை. அவை வீணையின் நாதத்தில் இணைந்துள்ளன. வீணையைப் பல்வேறு விதமாக இசைக்கும்போது எழும் ஓசைகளும் அவ்வாறே… வானுக்கும் மேலுள்ளதும், பூமிக்கும் கீழுள்ளதும், வானுக்கும் பூமிக்கும் இடையிலுள்ளதும், கடந்தவையும் நிகழ்பவையும், வருபவையும் ஊடும் பாவும் போல விரவியுள்ளதும் ஆகாசம் (வெளி)….

View More ஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1