ஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?

குற்றத்தைத் தடுக்கவோ, குற்றம் செய்தவனை தண்டிக்கவோ, இப்படிப்பட்ட ஆவணங்கள் இரகசியமாக, பிரதியெடுத்தோ, அல்லது திருடியோதான் மக்கள் பார்வைக்கு வரமுடியும். குற்றத்தை விசாரிப்பவர்களுக்கு அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மைதான் முக்கியமானதே தவிர, யார் கொடுத்தது, ஏன் கொடுத்தான், எப்படி எடுத்தான் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது நீதி பரிபாலன செயல்பாடுகளுக்கு எதிரானது. பொது நலத்துக்கும் எதிரானது; ஊழலை ஊக்கப்படுத்துவது போன்றது; ஊழல் வாதிகளைப் பாதுகாக்க விரும்புவது போன்றது…. இந்த நிகழ்வில், நிர்வாகம் தவறு நடந்திருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, தவறு செய்து தங்கள் பிள்ளைகளுக்கு திருட்டுத் தனமாக வேலைக்கு ஆர்டர் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தவறுக்கு வெளிச்சம் போட்ட கடைநிலை ஊழியர் ஒருவரை பழிவாங்கத் துடித்தது ஏன்? ஏனென்றால் நிர்வாகத்தின் உயர்ந்த பீடத்தில் இருப்பவர்கள் அறிந்தே இந்த தவறுகள் நடந்தன என்பதுதான்….

View More ஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?

லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2

ஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை என்றாகிவிட்டது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், புதிய ரேஷன் அட்டை, இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தொழில் உரிமம்,  வாகன ஓட்டுனர் உரிமம், பத்திரப் பதிவு,… என எதைப் பெற வேண்டுமாயினும், லஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது. இடையிடையே, ‘லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது’ என்று பத்திரிகைகளில் செய்தி வரும். முகத்தை மூடிக்கொண்டு புகைப்படத்தை தவிர்க்க தலையைக் குனிந்துகொண்டு போலீஸ் வேனில் ஏறும் ‘குற்றவாளிகள்’ அடுத்த சில மாதங்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்தும், எந்த அச்சமும் இன்றி கையூட்டு வாங்கும் அதிகாரிகள் பெருகிவிட்டார்கள். சொல்லப்போனால், லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கள்ள ஆடுகள் பெருகிவிட்டன. இதற்கெல்லாம் மாற்று என்ன? லோக்பால் சட்டம் வந்துவிட்டது. இதனால் என்ன லாபம்? லஞ்ச ஒழிப்பு சட்டம் இப்போதும் நாட்டில் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், லஞ்சம் ஒழியவில்லையே! எனவே, முதலில் லோக்பால் குறித்து மக்களிடையே முழுமையாக விளக்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும்.

View More லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2

லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு…

View More லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

தர்ம யுத்தம் வென்றது!

‘ராம்தேவுக்கு நேர்ந்த கதி ஹசாரேவுக்கும் ஏற்படும்’ என்ற காங்கிரஸ் தலைவர்களின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தில் இறங்கினார் ஹசாரே. உண்ணாவிரதம் துவங்கும் முன்னரே கைது செய்யப் பட்டார். அரசு வேறு வழியின்றி பணிந்த பின் தனது அறப்போராட்டத்தைத் தொடர்கிறார் [..] ஹசாரேவின் தர்ம யுத்தம் இறுதியில் வெல்வது நிச்சயம். ஜனலோக்பால் சட்டத்துடன் நின்றுவிடாமல், உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடான பாரதத்தைக் காப்பாற்ற, ஊழல் மயமான ஐ.மு.கூட்டணி அரசை வீழ்த்தவும் ஹசாரே முன்வர வேண்டும் [..]

View More தர்ம யுத்தம் வென்றது!