ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள் - மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்...: தினமணி கட்டுரை
ஏழாம் உலகம் - இரக்கம் கோரும் கொடூரங்கள்
By வெங்கட் சாமிநாதன்
Posted in புத்தக விமர்சனம் on 21 January 2010
Stats: பார்வை: 858 and 8 Comments

மனிதன் தன் சக மனித ஜீவனை எவ்வளவு கேவலப்படுத்துவதன் மூலம் தன்னையும் கேவலப்படுத்தக் கூடியவன், அது பற்றி பிரக்ஞையே இல்லாமல், பின் அதற்கு தார்மீக, அரசியல் சித்தாந்த ஜோடனைகளுடன் அலங்காரங்கள் செய்வான், அவன் எவ்வளவு ஆபாசமானவன் என்பது தெரியும்.

இந்து தாலிபானியம்…? - ஒரு எதிர்வினை
By ஓகை நடராஜன்
Posted in இந்து மத விளக்கங்கள், கலைகள் on 20 November 2009
Stats: பார்வை: 1,474 and 27 Comments

ஹுஸைனின் இந்த ஓவிய முறைமை அத்தகைய ஆன்மிகத் தேடலோ அல்லது வழிபாட்டு முறையோ எனக்கொள்ளும்படிக்கு ஜெயமோகனுக்கு எவ்வாறு தோன்றுகிறது? … இந்து மதத்தினரின் கண்டனத்துக்குள்ளாகும் ஒரு ஓவிய முறைமையை விடாப்பிடியாக செய்தே தீருவேன் என்று செய்பவர் வக்கிர மனத்த்தினர் தரும் மாபெரும் விலைகளுக்காக பொது நாகரிகம் கருதாத, மனித மன மரியாதையற்ற, கலை வியாபாரியாகவே இருக்க வேண்டும். அல்லது தன் மதத்தைக் காயப்படுத்தாமல் இந்து மதத்தினரைக் காயப்படுத்தி, தீவிரவாதிகள் குண்டுகளால் சாதிப்பதை தூரிகையால் சாதிப்பவராக இருக்க வேண்டும்.

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-2
By வெங்கட் சாமிநாதன்
Posted in இலக்கியம் on 19 March 2009
Stats: பார்வை: 633 and 5 Comments

இணையத்தில் பெறும் தகவல்களை யெல்லாம் தொகுத்து அவற்றைத் தன்னதாக, தான் அறிந்ததாக, தன் அனுபவமாக சந்தையில் வைப்பவர்கள் இவர்கள். இன்றைய தார்மீகச் சரிவின் விளைச்சல்கள். இருப்பினும் வெட்க உணர்வற்ற படாடோபங்கள் இவர்கள். இவர்கள் பெயரையும் நான் சொல்லவில்லை. எவரைச் சொல்வது? யாரை விடுவது?

டார்வின் - முருகன் வைத்த குட்டு
By அரவிந்தன் நீலகண்டன்
Posted in அறிவியல் on 18 March 2009
Stats: பார்வை: 1,302 and 6 Comments

மிகப் பெரிய அளவில் இந்துக்களும் பௌத்த சமயத்தினரும் உயிர்களின் தோற்றம் குறித்த டார்வினிய அறிவியலை ஏற்றுக்கொள்கின்றனர்….
அகந்தையேறிய சிருஷ்டிக்கடவுளை தமிழ்கடவுள் முருகன் தலையில் குட்டி அடக்கினார் என்று சொல்லும் புராணம். ஞானக் கடவுள் முருகன். பிரபஞ்ச சிருஷ்டியின் இரகசியம் பிரணவம் என்று அந்த இரகசியத்தைத் தகப்பன் சாமியாகச் சொன்னவர். பல வாசிப்புக்களை நாம் விரித்துக்கொள்ள சாத்தியங்களை தரும் தொன்மம் இது…

காடென்னும் கடவுள்
By சேதுபதி அருணாசலம்
Posted in சமூகம் on 14 March 2009
Stats: பார்வை: 674 and 14 Comments

சொந்த வீட்டில் எங்கள் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட மரங்களை இழந்ததற்காகச் சிறுவயதில் வருந்தாத நான், பெங்களூரில் சாலைகளை விரிவாக்குவதற்காகச் சாலையோர மரங்கள் வெட்டப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம் பெரும் வலியை உணர்கிறேன்… “எப்படியாவது இந்த மரங்களைக் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை!” என்று ஊர்மக்கள் அனைவரும் ஒரேகுரலில் சொல்கின்றனர். அய்யாசாமி மாவட்ட நிர்வாகத்துக்குக் கூட ஒரு புகார் மனு அளித்திருப்பதாகக் கூறுகிறார்.

நான் கடவுள்: பட விமர்சனம்
By விஸ்வாமித்ரா
Posted in சினிமா on 17 February 2009
Stats: பார்வை: 4,182 and 19 Comments

இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான தமிழ்ப் படம்…

தமிழ் சினிமாவில் கதாநாயகி மாடு மேய்க்கும் பெண்ணாக இருந்தாலும் கூடச் செக்கச் செவலென, தளதளவென்று, முடிந்தால் பஞ்சாப் தேசத்துக் கிளியாக இருப்பதும் தமிழ் சினிமாவின் முதல் இலக்கணங்களில் ஒன்று. தமிழுக்காக தன் மூச்சு, பேச்சு எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருக்கும் பாரதிராஜா, சீமான், சேரன் வகையறா அக்மார்க் திராவிடத் தமிழர்கள் கூட ஒரு கிராமப்புறத் தமிழ்ப் பெண் பாத்திரத்திற்குச் சுமாரான கரிய நிறமுடைய பெண்ணைக் கதாநாயகியாகப் போடத் துணிந்ததில்லை…

செய்திகள் மட்டுமே சித்திரமானால்…
By ஜடாயு
Posted in சினிமா on 31 January 2009
Stats: பார்வை: 886 and 4 Comments

மூலம்: ஜெயமோகன், ஆங்கிலக் கட்டுரை - மொழியாக்கம்: ஜடாயு
ஒரு பிரிட்டிஷ்-இந்தியத் திரைப்படம் (Slumdog Milliionaire) ஏன் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து மும்பையின் சேரி வாழ்க்கையைச் சித்தரிக்க வேண்டும்?… இந்தப் படைப்பாளிகளின் அடிப்படை தாகம் ஒன்று தான்: இந்தியாவைக் குத்திக் கேலி செய்தல்…



"));