Posts Tagged ‘ ஜெயலலிதா ’

அரசியல், நிகழ்வுகள்

நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்

நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்

இந்த எதிர்ப்பாளர்களின் முக்கிய நோக்கம், அணுமின் நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பதை எதிர்ப்பதல்ல; அங்கு அணுஆயுத உற்பத்தி நிகழாமல் தடுப்பதே... இதே 'நிலநடுக்கம்' கேரள அரசியல்வாதிகளால் பிராந்திய நலனுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அதை எதிர்ப்பவர்களும், இதே குழுவினர் என்பது ஒரு நகைமுரண்... கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் பலரும் இப்போது தங்கள் ஜாகையை முல்லைப் பெரியாறுக்கு மாற்றிக்கொண்டு முழக்கமிடத் துவங்கி இருக்கிறார்கள்... இப்போதைய தேவை, தமிழக எல்லை மாவட்டங்களில் அமைதியைத் திரும்பச் செய்வதற்கான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனிவான நடவடிக்கைகளே...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள், பொருளாதாரம்

சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு

சரிப்படுத்த வேண்டிய  தவறான முடிவு

திமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு,  திவாலாகும்   நிலைக்கு தள்ளிவிட்டது'' என்ற ஜெயலலிதாவின் கூற்று உண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார்? கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது?

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்

தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்

நான் யாரையும் மிரட்டவில்லை எனத் தொடர் பல்லவி பாடும் தயாநிதி மாறன், தொலை தொடர்பு இலாகா பெற்ற கதை சன் டிவியின் வளர்ச்சியில் மிரட்டல் படலம் எவ்வாறு நடைபெற்றது சேனலில் தனது ஆதிக்கம் எவ்வாறு ஏற்பட்டது தொடர்ச்சியாகச் செய்தியாளர்களிடம் தான் தவறு செய்யவில்லை எனச் சில சான்றுகளைக் காட்டி வாதாடுவதில் தயாநிதி மாறன் கில்லாடிதான். நியாயமாக எழும் சந்தேகங்களுக்குக் கூட இது வரை தயாநிதி மாறனோ அல்லது திமுகவின் தலைவர் கலைஞரோ முறையான விளக்கங்கள் கொடுக்கவில்லை.

மேலும் »

அரசியல், சமூகம், நிகழ்வுகள்

லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்

லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்

முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் போனதற்கான காரணத்தைத் தேடினால் “மாசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இவர்களுக்குப் பாதகமாக முடியும் என்பதால் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை” என்ற பதில் கிடைக்கும்.ஆகவே இந்த மசோதா சட்டமானால் இன்றைய நிலையில் செல்வி சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். இந்த ஷரத்து தற்போதைய தமிழக முதல்வருக்கும் ஆபத்தாக முடியும்.

மேலும் »

அரசியல், நிகழ்வுகள், நேர்காணல்

தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி

தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி

எதிரிக்கும் வேண்டாம்; துரோகிக்கும் வேண்டாம்... ஹிந்துக்களின் வாக்கு பாஜகவுக்கே! -ராம.கோபாலன் நிறுவனர், ஹிந்து முன்னணி.

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

தேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக

தேர்தல் களம்:  கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெறும் தலைகளிடையே, இரு கழகங்களின் பணபலத்திடையே, கொள்கையற்ற இரு கூட்டணிகளிடையே போராடுவது பத்மவியூகத்தில் அபிமன்யூ போராடுவது போன்றது தான். பாரத அபிமன்யூவுக்கு உதவிகள் தடுக்கப்பட்டன. ஆனால், தமிழக பாஜகவின் உதவிக்கு வந்திருக்கிறது பிற மாநில முதல்வர்கள் படை. எனவே, இந்த அபிமன்யூ களத்தில் சாதித்துக் காட்டுவான்.

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!

தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!

இப்படிக் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமா? . இந்த இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு? இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆளவேண்டுமென்பதற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரி இறைத்து, "ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி! அம்மா குடி!" என்று வீசுகிறார்களே, இதைத் தடுக்க வழியே இல்லையா? இந்த நாட்டில் நியாயம் உணர்ந்தவர்களே இல்லையா?

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை

தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை

கிழிந்த ரூபாய் நோட்டானாலும் வங்கியில் செலுத்துவதற்குரிய தகுதி கொண்டிருப்பது மதிமுக என்பதில் ஐயமில்லை. அதனால் தான் அன்புச் சகோதரி முதற்கொண்டு தானைத்தலைவர் வரை பலரும் வைகோவுக்கு மடல் எழுதி இருக்கிறார்கள். பிறருக்கு மடல் எழுத வேண்டிய நிலையில் இருந்த வைகோவுக்கு இந்நிலை ஏற்பட்டது ஏன் என்று பார்ப்பதும் அவசியம்.

மேலும் »

அரசியல்

தேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி

தேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி

திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையிலான ஊடலும் கூடலும் தேர்தல் காலத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டி, சுயமரியாதைச் சுடரொளியாம் கருணாநிதி நடத்திய அபத்த நாடகம் ஆளும் கூட்டணியின் முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்தியது... ஒரே நாளில், கருணாநிதிக்கு எதிரான மக்களின் மனநிலையை தனக்கு எதிரானதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை ஜெயலலிதா தவிர வேறு யாருக்கேனும் வாய்க்குமா என்பது சந்தேகமே... அல்லது, மக்கள் வெற்றி- தோல்வி பற்றிய எந்தக் கவலையும் இன்றிக் களம் காணும் பாஜகவை சிறிது திரும்பிப் பார்க்கலாம்...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிக மோசமான, ஊழல்மயமான, கீழ்த்தரமான அரசு என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்ட மன்மோகன் அரசுக்கு, இனிமேலும் தி.மு.க.வைக் காப்பது முடியாத காரியம் என்பது புரிந்துபோனது. ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கிலாவது காங்கிரஸ் வெல்ல வேண்டுமானால், ‘ஊழலை சகிக்க முடியாது’ என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காங்கிரஸ் புரிய வைத்தாக வேண்டும்

மேலும் »