இந்து மதத்தில் தொண்டுள்ளம் போதிக்கப்படுவதில்லை; மாறாக பிற மதத்தில் தொண்டு (service) என்பது முக்கியமாக உள்ளது என்று நினைக்கிறார்கள். அல்லது நினைக்க வைத்துள்ளார்கள்.... இந்து மதம் படைப்பு முதற்கொண்டு கவனம் செலுத்தி, படைப்பின் கடைசியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை தினசரி கடமையாக விதித்துள்ளது... இந்து மதம் சொல்லும் தொண்டு அடியவர்க்கு அடியானாக, மிகவும் சாதாரணனாகத் தன்னை பாவித்துக் கொண்டு, இறைவன் புகழ் நிலைக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதே...
உலகம் முழுவதும் வாழும் சைவப் பெரியோர்கள், அடியார்கள் உதவியுடன் யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கட்டிடம் புனருத்தாரணம் செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளது. அடியார்கள் அனைவரும் இத்திருப்பணியில் பங்குகொண்டு குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டத்தை பூர்த்தி...




