இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்

இந்தியப் பிரதமராக மக்களின் பேராதரவுடன் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தாண்டி ஒளிக்கீற்றாகவே பார்க்கப்படுகிறார்… தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மூன்று முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் – இராணுவ மயமாக்கப் பட்ட சூழல், திட்டமிட்ட நிலப்பறிப்பும் குடியேற்றங்களும், மதமாற்றம்… முக்கியமான வரலாற்றுப் பிழை இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றாமலேயே அதற்குள்ளாகவே மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரமுடியுமென்று இந்தியா நினைத்தமை. அந்த அமைப்புக்குள் பகிரப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்தநேரத்திலும் மீளப்பெறக் கூடியவை… இலங்கை இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வுகளில் இலகுவானதும் அதிகபலப்பிரயோகம் இன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வு முழுமையான சமஷ்டி அமைப்பினை ஏற்படுத்துவதாகும். இதனை வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசு செய்வதற்கு மறுத்தால், இந்திய அரசு மற்ற இரண்டு சிக்கலான தெரிவுகளுக்கு செல்வது தான் பிரசினைக்கு தீர்வு காணும் வழிகளாக ஆகும்….

View More இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்

ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?

தனது கடும்போக்கு மூலம் ஜெயலலிதா என்ன உணர்த்துகிறார்? “ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்” என்ற ஒற்றை பிரசினையை மையமாக வைத்துத் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் உள்ள உறவு நிர்ணயிக்கப் படும் என்கிறாரா? இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்குக் கூட தங்களது அன்றாட வாழ்வாதார, சமூக, பொருளாதார பிரசினைகளைத் தாண்டி *மையமான* ஒற்றைப் பிரசினையாக இந்த விஷயம் இல்லை… தமிழகத்தின் மக்கள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களித்தது ஜெயலலிதா ராஜபட்சேக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பதற்காகவா என்ன?… தனக்குக் கிடைத்திருக்கும் ஜனநாயக பூர்வமான அதிகாரத்தை ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்கிறார்…

View More ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?

திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

தமிழர்கள் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழும் இந்தியாவின் நட்புநாடாக இலங்கையை மோதி மாற்றுவார். அதற்கான நோக்கமும், திட்டமிடலும், செயல் வேகமும், தகுதியும் ,வாய்ப்பும், ஆர்வமும் இன்று மோதி அவர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால் அவரைப் புரிந்துகொண்டு பாரதத்தின் புணர்நிர்மாணத்தில் தோள்கொடுக்க தமிழகம் தவறியது வேதனையான ஒன்று… மோதி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபச்சாவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததைக் காட்டமாக விமர்சிக்கும் தீவிர தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழருக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும் தவறான பாதையில் திருப்புகிறவர்கள். இதில் பலரது நோக்கம் வயிற்றுப்பிழைப்பு, இவர்களால் ஈழத்தமிழர்கள் பெற்ற நன்மை என்ன? ஒன்றுமே இல்லை…

View More திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

டெசோ: புதிய மொந்தையில் பழைய கள்!

எப்போதெல்லாம், தனக்கும் திமுகவுக்கும் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்னைக்காக உருகுவது…

View More டெசோ: புதிய மொந்தையில் பழைய கள்!