Posts Tagged ‘ தாந்திரீகம் ’

ஆன்மிகம், இலக்கியம், சைவம்

வள்ளிச் சன்மார்க்கம்

வள்ளிச் சன்மார்க்கம்

முருகன் வள்ளி மீது கொண்ட காதலை விளக்கும் திருப்புகழ் பாடல்களில் சிருங்கார ரசம் கொப்பளித்துப் பொங்குகின்றது... நற்பண்புகளையுடைய தம்பதியரிடையே அமைந்த நற்காமம் பத்தியாக, சிவ- சக்தி ஐக்கிய அனுபவமாக அமையும்...அவரவர்க்கு உகந்த மார்க்கத்தைக் கைக்கொண்டு ஒழுகி இறையருளைப் பெற வைதிகம்,இந்து தருமம் அனுமதிக்கின்றது... கந்த சஷ்டி விரதத்தை வள்ளி திருக்கலியாண மகோற்சவமாகக் கொண்டாடி..

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

போகியை யோகி எனல்

போகியை யோகி எனல்

உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பண்டிகைகள்

மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்

மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்

ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காக பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது... காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது... ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை.

மேலும் »

ஆன்மிகம், கவிதை, வேதம்

தேவி சூக்தம்

May 7, 2010
-
தேவி சூக்தம்

மானுடர் உண்பதும் காண்பதும் சுவாசிப்பதும் சொல் கேட்பதும் எல்லாம் என்னால். அதை அறியார் ஆயினும் அவர்கள் என் உள் உறைபவரே... மனதில் எண்ணம் உருவாகி அது சொல்லாகப் பரிணமிப்பது பற்றிய ஆழ்ந்த உளவியல் தத்துவம் அது. வாக்கு அல்லது மொழி நான்கு படிநிலைகள் கொண்டது என்று தந்திர சாஸ்திரம் கூறுகிறது. பரா என்பது வாக்கின் ஆதி நிலை ... கவிஞனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் ஏற்படும் ஆன்மிக பரவச நிலையிலேயே அத்தகைய கவிதை எழுகிறது. அது காலவெளியையும் கடந்து செல்கிறது.

மேலும் »

ஆன்மிகம், நிகழ்வுகள், நேர்காணல், பொது

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 3 (ராஜீவ் மல்ஹோத்ரா)

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 3 (ராஜீவ் மல்ஹோத்ரா)

சில வெளிநாட்டு குழுக்களால், இந்து குருமார்களை, குறிப்பாக தென்னிந்திய குருமார்களை ஒழித்துக் கட்டுவதற்காகத் திட்டமிடப் பட்டு 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப் பட்டுள்ளது... நான் பதிவு செய்த நேர்காணலில் இவை அனைத்தையும் விட்டுவிட்டு, மறுபடி அலைந்து திரியும் ஒரு சாதாரணத் துறவியாக ஆகத் தான் தயார் என்று நித்யானந்தா கூறினார்.. ஜடாயுவின் பின்னுரை - நித்யானந்தாவின் தற்போதைய நிலைமை கீதை கூறும் “யோக ப்ரஷ்டன்”, அதாவது யோகத்திலிருந்து தவறியவன் என்ற வரையறைக்குப் பொருந்தி வருகிறது என்று நினைக்கிறேன்.

மேலும் »

ஆன்மிகம், சமூகம், பொது

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 2 (ராஜீவ் மல்ஹோத்ரா)

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 2 (ராஜீவ் மல்ஹோத்ரா)

ஒரு சிறிய வட்டத்தினருக்காகவேனும் பாலுறவுடன் கூடிய தாந்திரீக முறைகளும் பரிசீலிக்கப் பட்டு, பாதுகாப்பாகக் கற்பிப்பதற்கு ஏற்றதாக ஆக்கவேண்டும் என்று அவர் நினைக்கிறார்..அவர் கண்டிப்பாக வெகுசில சீடர்களுடன் தாந்திரீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்றே நான் ஊகிக்கிறேன்... “உலகை ஒதுக்கும்”, “தப்பித்துச் செல்லும்” வழிமுறைகளைக் கடைப் பிடிப்பதை விட, சமூக விஷயங்களில் பிரசினைகளில் ஈடுபடுவது அவசியமானது என்ற கருத்தை அவரும் ஏற்றுக் கொண்டார்... என் அனுபவத்தில், வேறு எந்த இந்து ஆன்மிக குருவும், இந்த உலகளாவிய பிரசினைகளை இவ்வளவு ஆழமாகக் கற்றுப் புரிந்து கொள்ள இந்த அளவுக்கு நேரம் செலவழித்ததில்லை.

மேலும் »

ஆன்மிகம், சமூகம், நிகழ்வுகள், பொது

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 1 (ராஜீவ் மல்ஹோத்ரா)

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 1 (ராஜீவ் மல்ஹோத்ரா)

இந்து அமைப்புகளின் பலவீனங்கள் என்னென்ன என்று எதிராளிகளுக்குத் தெரிய வரும்போது, இதே போன்ற விவகாரங்களை மற்ற இந்து அமைப்புகளும் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும். இதனை ஒரு முன்னறிவிப்பாகவே கூறுகிறேன்... ஒரு விஷயம் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் அது அறிவியலே அல்ல, ஏனென்றால் அறிவியல் அபோதபூர்வமானது, ஒழுக்கவிதிகள் சாராதது... சிவ சூத்திரங்களில் உள்ள 112 ஆன்மிக சாதனை முறைகளில், 6 முறைகள் ஆணும் (யோகி) பெண்ணும் (யோகினி) இணைந்து புரியும் யோகம் பற்றிக் கூறுகின்றன.

மேலும் »

இந்து மத விளக்கங்கள், கலைகள்

இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினை

இந்து தாலிபானியம்…?  – ஒரு எதிர்வினை

ஹுஸைனின் இந்த ஓவிய முறைமை அத்தகைய ஆன்மிகத் தேடலோ அல்லது வழிபாட்டு முறையோ எனக்கொள்ளும்படிக்கு ஜெயமோகனுக்கு எவ்வாறு தோன்றுகிறது? ... இந்து மதத்தினரின் கண்டனத்துக்குள்ளாகும் ஒரு ஓவிய முறைமையை விடாப்பிடியாக செய்தே தீருவேன் என்று செய்பவர் வக்கிர மனத்த்தினர் தரும் மாபெரும் விலைகளுக்காக பொது நாகரிகம் கருதாத, மனித மன மரியாதையற்ற, கலை வியாபாரியாகவே இருக்க வேண்டும். அல்லது தன் மதத்தைக் காயப்படுத்தாமல் இந்து மதத்தினரைக் காயப்படுத்தி, தீவிரவாதிகள் குண்டுகளால் சாதிப்பதை தூரிகையால் சாதிப்பவராக இருக்க வேண்டும்.

மேலும் »

ஆன்மிகம், புத்தக விமர்சனம்

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)

உறவுமுறைகளின் கௌரவம் இப்படித்தான் பேணப்பட வேண்டும் என்பதில் நாம் மேலை நாடுகளைவிட கறாரான சமுதாயமே. என்றும் புராண உருவகங்களையும் நடைமுறை வாழ்க்கையையும் போட்டு ஒரு நாளும் யாரும் குழப்பிக் கொள்வதில்லை... ‘நம்மவர்’ - ‘மற்றவர்’ என்ற சமன்பாட்டின் தலையில் ஏற்றப்பட்டு ’நாம்’ அல்லாத ’மற்றவர்கள்’ சாத்தானைப்போலவே கருதப் பட வேண்டியவர்கள் என்ற மனப்போக்கு அடைந்த விபரீதம்.

மேலும் »