புதிய பொற்காலத்தை நோக்கி – 17

சாக்கடைகளை சுத்தம் செய்தல், வீட்டுக் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் இவற்றைக் கையாளவும் பல நவீன எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இவற்றை நம் நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் போதிய கவனமும் வேகமும் காட்டப்படவே இல்லை… என் தேசத்தில் கையால் கழிவுகளைக் கையாளும் என் சகோதரர் ஒருவர் கூட இருக்கமாட்டார். என் தேசத்தில் எந்த மழைக்கும் இனி சாலைகளில் நீர் தேங்காது. என் தேசத்தின் ஆறுகளில் நன்னீர் மட்டுமே ஓடும். என் தேசத்தின் ஆறுகளில் நன்னீர் மட்டுமே ஓடும்…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 17

புதிய பொற்காலத்தை நோக்கி – 11

உலகம் முழுவதுமே எல்லாத் தொழில்களும் பரம்பரை வழியிலேயே கைமாற்றித் தரப்பட்டபோதிலும் பாரதத்தில் மட்டுமே அப்படி இருந்ததாகவே மெக்காலே கல்வி முத்திரை குத்தியது. ஐரோப்பாவிலும் நவீன பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகே கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்றாலும் பாரதத்தில் மட்டுமே கல்வி அனைவருக்கும் மறுக்கப்பட்டதாக அவர்கள் நம் வரலாற்றை எழுதிக் கொடுத்தார்கள். அதுவே இன்றைய அறிவுஜீவி, அரசியல் ஜீவி மட்டங்களில் மனனம் செய்யப்பட்டு முழங்கப்படுகிறது…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 11

புதிய பொற்காலத்தை நோக்கி – 10

எல்லாரும் எல்லா தொழிலையும் கற்றுக் கொண்டு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய பள்ளிக் கல்வி முறை அன்று உலகில் யாராலும் நினைத்துப் பார்க்கவே பட்டிருக்கவில்லை. எனவே இந்தியாவிலும் அது இருந்திருக்கவில்லை… அக மண முறையும், குல பந்தி – குல விருந்து முறையும் இயல்பான தேர்வாகவே இருந்திருக்கிறது. இந்துசமூகத்தில் மட்டும் கடைநிலையில் இருந்தவர்களும் இழிவான தொழிலைச் செய்தவர்களும் மேலேற முடியாமல் போய்விட்டது என்ற வாதத்தில் அர்த்தமே இல்லை. அவர்களுக்கான வெளிகள், உரிமைகள், அதிகாரங்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்திருக்கின்றன…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 10

தலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் பொம்மி நாய்க்கன்பட்டியில் 64 வயது வள்ளியம்மாள் இறந்திருக்கிறார். இறுதிச் சடங்குக்காக வழக்கமான பாதையில் எடுத்துச் செல்கையில் வேறு வழியில் கொண்டு செல்லுங்கள் அல்லது பிணத்தை வைத்து விட்டு ஓடுங்கள் என்று சொல்லி இஸ்லாமியர்கள் மிரட்டுகிறார்கள். கெஞ்சிக் கேட்டபோதும் இரங்காமல், பயங்கரமான ஆயுதங்களை வைத்து தலித் இந்துக்களைத் தாக்குகிறார்கள்.. இதன் பின் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள், பிணத்தை சுமந்து சென்ற ஏழை இந்து சகோதரர்களின் வீடுகளை தீக்கிரையாக்கியும், அவர்களின் வாகனங்களை உடைத்தும் இரவு மீண்டும் அப்பாவி தலித்கள் மீது தாக்குகிறார்கள். எப்போதும் சமூக நீதி, சமத்துவம், சகிப்பின்மைக்கு எதிரானவர்களின் எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டிருக்கும் எந்த அரசியல் தலைவரும் இதற்காக வாய் திறக்க வில்லை…

View More தலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை

பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்

20.1% பட்டியலின மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1% கூட அந்த மக்களின் வாக்குகளை பெற முடியாத பட்டியலின கட்சிகள்வரை பாஜகவிற்கு பட்டியலின மக்கள் வடமாநில பட்டியலின மக்கள்போல் ஆதவு அளித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் பல்வேறு பொய் செய்திகளை பரப்பிவருகின்றனர். பட்டியலின மக்களின் விரோதி பாஜக என்று திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் முறியடிக்கும்விதமாக தமிழக பட்டியலின மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிற மாநாடாகவும் லட்சம்பேர் சங்கமிக்கிற மாநாடாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. என் சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன். உங்கள் உதவிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்..

View More பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்

பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

பறையொலி கீழானதென்றும் பறை இசைப்போர் கீழானவரென்றும் கருதும் சமுதாயமாக நாம் இருந்திருப்பின் பறை இசை கலைஞர் இப்படி கம்பீரமாக இறை வடிவங்களுக்கொப்ப கோவில் மண்டபத் தூண் சிற்பத்தில் ஏன் காட்டப்பட வேண்டும்?… சுசீந்திரத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடந்த போது ஒரு தலைமுறைக்கு முன்னால் பட்டியல் சமுதாய மக்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக பெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே கோவில் தெருவில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வைத்து பாபா சாகேப் அம்பேத்கரின் பரிநிர்வாண நாள் குறித்த உரை நடைபெறுகிறது….

View More பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

நீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்

கண்டிப்பாக இது அனிதாவே முடிவு செய்திருக்க முடியாது. அவரை மூளைச் சலவை செய்திருக்கலாம். அல்லது இது ‘கொலை’யாக கூட இருக்கலாம். இன்று அனிதாவிற்காக குரல் கொடுக்கும் அத்தனை தமிழக கட்சிகளும் நினைத்தால் நீட்டில் தேர்வெழுதிய அத்தனை தலித் மாணவர்களுக்கும் தங்கள் சொந்த செலவிலேயே மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்திருக்க முடியும். அவ்வளவு மெடிக்கல் கல்லூரிகளையும், அவ்வளவு பணபலத்தையும் இந்த அரசியல்வாதிகள்தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்ய இவர்கள் என்ன தியாகிகளா? நீட் தேர்வில் பாதிக்கப்பட்டது இந்த திராவிட அரசியல்வாதிகள்தான். அதனால் திட்டம்போட்டு அனிதாவை பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வர பாஜக தமிழ்நாட்டில் முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதனால் பாஜகவை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடாக கூட இது இருக்கலாம். அதனால் அனிதா தற்கொலையில் சிபிஐ நீதிவிசாரணை வேண்டும். முதலில் திமுகவை விசாரித்தால் உண்மை வெளிவரலாம். வெளிவரும்… அனிதா சாவுக்கு ‘ஒரு தரப்பை’ கைநீட்டி வசைபாடும் முன் தயவுசெய்து இந்த
10 கேள்விகளுக்கு விடை தேட முயற்சி செய்யுங்கள்..

View More நீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்

‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

ஏதோ வழக்கமான சாதி பெருமை பேசுகிற ஒன்று என்பதைத் தாண்டிஅந்த ஃப்ளெக்ஸ் விளம்பரப் பலகையில் வேறு எதுவும் படவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஏதோ கிளறின…. எனவே பறையர் எனும் பெயரே சந்திர சேகரராக விளங்கும் சிவனைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது சந்திரசேகரராக சிவன் அளிக்கும் பரையோக, பரை போக, பரை அதீத நிலையில் நிலைப் பெற்றிருப்பவர், அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம்… இப்பெயர் இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது ஏமாற்று வேலை….

View More ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

பறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் ‘தலித்’ (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்… இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது… பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் அகமண முறை மூலம் பிராமணர்கள் சாதிப் பிரிவினையை எப்படி நிலை நாட்டியிருக்க முடியும் என்ற கேள்வி வருகிறது….

View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2

கொலை செய்த ஆதிக்க சாதியின் குற்ற உணர்ச்சியும் பயமுமே கொலையுண்ட சிறு தெய்வங்களை உருவாக்குகிறது என்பது அடக்கப்பட்ட மக்களின் பதிலடியை மலினப்படுத்திவிடுகிறது. கொன்றவர்களே தெய்வமாகவும் ஆக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களை சாதகமான கோணத்தில் பார்க்கும் அபாயத்தையே முன்னெடுக்கிறது. ஒரு சிறிய கேள்வியை இங்கு கேட்டுக்கொண்டாலே இந்தக் கூற்று எந்த அளவுக்குப் பிழை என்பது விளங்கிவிடும் – இளவரசனை வன்னியர்கள் தெய்வமாக்குவார்களா பறையர்கள் தெய்வமாக்குவார்களா?… தங்களுடைய சமரசமும் போர்க்குணமும் எப்படி விடலைத்தனமானதாக இருக்கிறதோ அதுபோலவேதான் திராவிடப் போர்வாள்களின் இத்தனை கால வீச்சுக்களும் இருந்திருக்கின்றது என்ற கண்டடைதல் உண்மையிலே மிகவும் அற்புதமானது. இதை விரிவாக வளர்த்தெடுத்துச் செல்லும் துணிச்சல் தர்மராஜ் போன்றவர்களுக்கு வாய்க்குமென்றால் தமிழகச் சூழலில் தலித் நலனுக்கு பேருதவியாக அது இருக்கும்….

View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2