நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை

மத்திய அரசு நாட்டுப்பசுவினங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி திட்டம் என்பது அரசின் எண்ணத்தில் நாட்டுப்பசுக்கள் பற்றிய சிறு எண்ணம் இருப்பதைக் காட்டுகிறது. பாராட்டுக்குரிய விஷயம் தான். உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதகங்கள் என்ன? தேவையான மாற்றங்கள் என்ன என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது… ஆண் எருமைகளையோ, சீமை மாடுகளையோ கொண்டு செல்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், நாட்டுப்பசுக்கள் வண்டி வண்டியாக கொலைக்கூடங்களுக்கு செல்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை… நாட்டுப்பசு என்பது மனிதன்-விவசாயம்-இயற்கை இம்மூன்றிற்கும் இடையிலான மிக முக்கியமான கண்ணியாகும். வெறும் பால் மெஷின், விவசாயப்பிராணி என்று பார்க்காமல், நேரடியாக நல்ல பால் பொருட்கள் மூலமும் மறைமுகமாக இயற்கை வேளாண்மைக்கு உதவுவதன் மூலம் நோய்கள் தவிர்ப்பு, மருத்துவ செலவினங்கள் தவிர்ப்பு, தேவையற்ற உர இறக்குமதிகள் தவிர்ப்பு, மனிதவளம் சேமிப்பு, சீமை மாடுகளுக்கு செலவாகும் மும்மடங்கு தீவன-நீர் சேமிப்பு, நோய் தாக்கு குறைவு என்று கணக்கிலடங்கா பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே நாட்டுப்பசுக்களை வாழ்வின், இயற்கையின் அங்கமாக பார்க்கும் பார்வை அரசுத்துறையினருக்கு வர வேண்டும்….

View More நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை

பசுமைப் புரட்சியின் கதை

அந்த நண்பர்  விவசாயி  மகன் .   அக் கணம்  நான்  அந்த  நண்பர் மீது  பொறாமைப் பட்டேன். ஒரே ஒரு கடி –   அதன் வழியே அக்காய் விளைந்த மண், அதன் பின்புலமான இயற்கை, மற்றும் விவசாய அமைப்பு, அதன் பகுதியான மனிதர்களின் உழைப்பு வியர்வை, அனைத்தையும் ருசிக்கும் அந்தப் பேரனுபவம், எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப் படாதது… நமது  வேளாண்மை வரலாற்றின் அனைத்துக் கூறுகள் மீதும், நேற்று இன்று நாளை  என அது  எதிர்கொண்டு  முன்னகர வேண்டிய  சவால்கள் மீதும்  கவனம் குவித்து, திறன்வாயந்த  அடிப்படை நூலாக  வந்திருக்கிறது சங்கீதா ஸ்ரீராம்  அவர்கள் எழுதிய ”பசுமைப் புரட்சியின் கதை”. நூலின் சில பகுதிகளை  கண் கலங்காமல் , குரல்வளை அடைக்காமல் கடக்க முடியாது… உலகப் போருக்கு  கண்டடையப் பட்ட  ரசாயனம் அம்மோனியா. உரமாக மாறி இங்கு வந்து குவிகிறது. ஓரினப் பயிரும், கைவிடப்பட்ட பயிர் சுழற்சி  முறையும் , கால்நடைகளுக்கான  தீவனப் பற்றாக்குறையும்,  கன ரக உழவு முறைகளின்  தாக்கமும்  எவ்வாறு  நமது  விவசாயத்தை மொத்தமாக சீர்குலைத்ததென்று  நூல் பல்வேறு ,தரவுகள்  வழியே சொல்லிச் செல்கிறது….

View More பசுமைப் புரட்சியின் கதை

பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு

விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள “பசுமை விவசாய தொழில்நுட்பங்கள்” என்ற இந்த நூல் நம்…

View More பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு

பன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்

பொதுவாக 60 காய்களைத் தரும் தென்னைகளில் கூட பிறகு 100க்கும் மேற்பட்ட தேங்காய்கள் காய்க்க ஆரம்பித்தன. ஏலக்காய் தோட்டங்களிலும் இதே முறையைப் பின்பற்ற ஆரம்பித்ததும் அங்கும் பசுமை தலைகாட்ட ஆரம்பித்தது. தோட்டங்கள், விவசாயப் பண்ணைகளின் ஓர் இன்றியமையாத அங்கமாக பசுப் பண்ணைகள், பன்றிப் பண்ணைகளை வைப்பதும்…

…கறி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்லோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்லோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்கு..

View More பன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்