திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்

அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் இன்றும் குழப்பம் தொடர்கிறது. திருவள்ளுவரின் காலம், ஜாதி, சமயம், பல்வேறு குறட்பாக்கள் எடுத்தாளும் நூல்கள், கருத்துகள், சர்ச்சைகள் என பல கோணங்களிலிருந்தும் வள்ளுவனையும் குறளையும் ஆராய்ந்து தொகுத்து எழுதப்பட்டுள்ள நூல் இது. நூலாசிரியர் ஜனனி ரமேஷ் மிகுந்த முயற்சியெடுத்து, பாடுபட்டு இதை உருவாக்கியிருக்கிறார். திருக்குறள் ஆர்வலர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நூல் இது.

View More திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்

திருக்குறளும் மஞ்ச்சூரியனும்

திருவள்ளுவர் தடாலென்று வானத்திலிருந்து குதித்து தடாலடியாக 1330 குறள் எழுதிவிடவில்லை. அவரது பண்பாட்டில், சூழலில் ரிஷிகளும் முனிவர்களும் உபதேசித்து, வாழ்ந்து ஊறிய ஞானத்தைத் தான் குறளாகப் படைத்தார். ஆனால், இந்த உண்மையைச் சொன்னால் தமிழ்பேசும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், கம்யூனிஸ்டு ஆசாமிகளும் அதைக் கற்க விரும்ப மாட்டார்கள், எதிர்ப்பார்கள். எனவே, திராவிட இயக்கம் உருவாக்கிய அந்தப் பொய் அப்படியே நீடிக்கட்டுமே. தமிழகம் “அமைதிப் பூங்காவா” இருக்கவேண்டாமா? – இப்படியும் ஒரு தரப்பு…

View More திருக்குறளும் மஞ்ச்சூரியனும்

வைகாசி அனுஷமே திருவள்ளுவர் பிறந்த நாள் – பேரா. சாமி. தியாகராஜன்

முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் கவர்னர் எல்லிஸ் காலத்திலும் கூட ம்யிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி அனுஷ நட்சத்திர நாளும், அவர் அடைந்து போன நாளாக, மாசி உத்திர நட்சத்திர நாளும் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது.. திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்திய கருணாநிதி, அண்ணாதுரை, மறைமலை அடிகள் முதலான அனைவரையும் துாக்கி எறிந்து, 300 ஆண்டு வழக்கத்தையும் துச்சமென மதித்து, தை மாதம் இரண்டாம் நாள், மாட்டுப் பொங்கல் அன்று திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படும் என்றும், இதுவே தமிழ்ப் புத்தாண்டு துவக்கம் எனவும், 2008ல் அறிவித்தார்… கருணாநிதியின் தை மாதம் ஆண்டு பிறப்பு என்ற கலாசாரத் திரிபை நீக்கி, பழையபடி சித்திரையே, தமிழ் ஆண்டு பிறப்பு என ஜெயலலிதா அறிவித்தார். திருவள்ளுவர் தினத்தையும் மாற்றுகிறேன் என்று சொன்னார். அதைச்செய்ய முடியாமல் அவர் மறைந்தது பெரும் குறையே…

View More வைகாசி அனுஷமே திருவள்ளுவர் பிறந்த நாள் – பேரா. சாமி. தியாகராஜன்

வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?

திருக்குறளை ‘தங்கத்தட்டில் வைத்த மலம்’ என்று கேவலமாக விமர்சித்த ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகளுக்கு பாஜகவினரை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை… திருக்குறளை புனித நூலாக ஹிந்துக்கள் போற்றுகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவ்வாறு திருக்குறளை புனித நூல் என்று ஒப்புக் கொள்கிறார்களா?… திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஞானி; பாரதப் பண்பாட்டின் அடிநாதமான ஒழுக்கலாறுகளை உபதேசித்த சனாதனி; உலகுக்கு ஞானம் அளித்த துறவி. சனாதனத்தின் இப்போதைய பெயர் ஹிந்து என்பதால், வள்ளுவர் ஓர் ஹிந்துவே. அவரைப் போற்றவும், எந்த வடிவிலும் வணங்கவும் ஹிந்துப் பெருமக்களுக்கு உரிமையும் உண்டு கடமையும் உண்டு. இதை விமர்சிக்க எவனுக்கும் உரிமை இல்லை…

View More வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?

திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே

திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது.. மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.. வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூல் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது…

View More திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே