Posts Tagged ‘ திருக்குறள் ’

இலக்கியம், கம்பராமாயணம்

கம்பன் பாடிய குறள்

July 22, 2011
-
கம்பன் பாடிய குறள்

இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.. ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.. குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல... மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள்.. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்...

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம், வைணவம்

வள்ளுவமும் வைணவமும்

வள்ளுவமும் வைணவமும்

வள்ளுவரை சைவரென்றும் சமணரென்றும் சொல்வாருண்டு. நீ ஏன் அவருடைய படைப்பில் வைணவக் கருத்துக்களைக் கண்டு தொகுத்து வள்ளுவமும் வைணவமும் என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று எழுதிண்டு வா, பாக்கலாம்" என்றார். எனக்கு திக் என்றது. இது ஏதுடா வம்பாப் போச்சே! வள்ளுவருக்கு நாயனார் என்று கூடப் பெயருண்டே? பேசாமே குறட்களை நெட்டுரு பண்ணிண்டு இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

மேலும் »

இலக்கியம், வீடியோ

பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1

September 25, 2010
-
பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1

2000 ஆண்டுகள் கடந்த பின்னும் ஒரு புலவனின், நீதியறிஞனின் சொற்கள் இன்னமும் புரிகின்றன, சமுதாயத்துக்குப் பொருத்தமாக உள்ளன என்பதே இமாலய வியப்பு. அதில் ஒவ்வொரு சொல்லுமே இன்றைய சிந்தனைக்குச் சரியாகப் பொருந்தி வர வேண்டும் என்று எண்ணுவது கேட்பவனின் மடமையே தவிர, வள்ளுவனின் தவறு அல்ல... அவர்கள் இருவருக்குமே கிறித்துவ தத்துவப்படி பிறவி என்பது ஒன்றே என்பதுதான் எண்ணம்... அம்மயக்க நிலையிலேயே கேள்விகள் கேட்கக் கேட்க, ஒருவர் எடுக்கும் பல பிறவிகள் பற்றி மருத்துவர் அறிகிறார்..

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம், தத்துவம்

கடவுளின் பணித்திட்டம்

கடவுளின் பணித்திட்டம்

உயிர்களைவிட்டுக் கணநேரமும் பிரியாமை அவனது குறிப்பு என மாணிக்கவாசகர் அனுபவித்துக் கூறுகின்றார். ‘உய்ய என் (உயிர்களின்) உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா’, ‘மருவி எவ்வுயிரும் வளர்ப்போன் காண்க’ என்பன போலத் திருவாசகத்தின் பல இடங்களில் இறைவன் உயிர்களோடு கலந்து நின்று பிரியாமல் இருப்பதன் திருக்குறிப்பை அதாவது ‘கடவுளின் பணித்திட்டத்தை’ மணிவாசகர் அறிந்து கூறுகின்றார்.

மேலும் »

இந்து மத விளக்கங்கள், கலைகள், பண்டிகைகள், பொது

தேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்

தேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்

மந்திர கேசரி மலைகள் அச்சு: சூரிய சந்திரர் சில்லுகள்: ஷட்ருதுக்கள் சந்திகள்: பதினான்கு உலகங்கள் தட்டுகள்: ஆகாச ஆசனம்: நதிகள் கொடிகள்: மோட்ச உலகம் மேல்விரிவு: யாகங்கள் சட்டம்: நாள் திதி நட்சத்திரம் போன்றன குறுக்கு மரங்கள்: அஷ்ட பர்வதங்கள் தூண்கள்: அஷ்ட திக்கஜங்கள் தாங்கும் ஆதாரங்கள்: ஏழு கடல்கள் திரைச்சீலைகள்: உபவேதங்கள் மணிகள்: வாயுக்கள் படிகள்: நால்வேதங்கள் குதிரைகள்;: உச்சிக்குடை பிரம்மரந்திரம்: கலசம் சோடஷாந்தத்தானம்: ஆக தேரானது சிவரூபம்… கோயில் தோத்திருவிழாவில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்குப் பெரியோர் வழங்கும் காசினை 'தேர்க்காசு' என்று வழங்குவதனூடாக ஆலயத் தேர்விழா ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். இது...

மேலும் »

ஆன்மிகம், தத்துவம், பொது

வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

உள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை "உண்மை" என்றும், வாய் வழியே வரும்போது அதை "வாய்மை" என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை "மெய்" என்றும் சொல்வர். ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது "சத்" என்ற பதம். ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள "வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்?

மேலும் »

இந்து மத விளக்கங்கள், இலக்கியம்

அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?

அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?

மூதேவியும், ஸ்ரீ தேவியும் இந்து மதத் தெய்வங்கள். இந்தக் குறள் அவர்களைப் பற்றிச் சொல்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது - இன்றைய தமிழக முதல்வர் உட்பட... திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழும் அப்பாடல்கள் சங்கப் புலவர்கள் எழுதியவை. அவர்களில் ஒருவராவது, திருக்குறள் மத சார்பற்றது என்றோ அல்லது சமண பௌத்த மதக் கருத்துக்களை உடையது என்றெல்லாமா கூறியிருக்கிறார்கள்?

மேலும் »

ஆன்மிகம், சைவம்

அற்றவர்க்கு அற்ற சிவன்

அற்றவர்க்கு அற்ற சிவன்

'புலி ஆட்டைக் கொல்லாமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால் நானும் கொள்ளையடிக்காமல் இருப்பேன்' என்று கலைஞர் ஒருகாலத்தில் எழுதிய திரைப்பட வசனம் இந்த இயற்கை நியதி உலக நியதியாகும் போக்கினை எடுத்துக் காட்டுகின்றது.... ...கம்யூனிசம், கேபிடலிசம் முதலிய இசங்களின் வளர்ச்சியை இந்த இயற்கை நியதியின் அடிப்படையில் காண முடியும். இயற்கையான தன்னலம் பேணுதலுக்கு இந்த 'இசங்கள்' தத்துவார்த்தங்கள் கற்பிக்கின்றன.

மேலும் »

சமூகம், பொருளாதாரம்

திருவள்ளுவர் கண்டுபிடித்த துப்பாக்கி!

திருவள்ளுவர் கண்டுபிடித்த துப்பாக்கி!

பிட்ஸாவும் பர்கரும் உண்டு மேற்கத்தியமாகி நம் உயிர் வாழ்தலின் அடிப்படையான பண்பாட்டு மரத்தையே வெட்டி வீழ்த்தி நம்மை நாமே "நீருக்கான உலகப் போரில்" அழிக்கும் மேற்கத்திய நாகரிக தலைமுறையாக நாம் முழுமையாக மாறுவதற்கு முன்னால் "உணவாகும் நீரை" கட்டிக்காத்த பண்பாட்டின் சுவடுகளையும் சிறிது பின்நோக்ககிப் பார்ப்பது நல்லது... நம் பண்பாட்டின் ஆகப்பழமையான பொறியியல் கலையின்-அறிவியலின் அடிப்படை அமைப்புகளில் ஒன்றாக குளங்கள் மற்றும் ஏரிகளின் வடிவமைப்பையே குறிப்பிடலாம்.

மேலும் »

இந்து மத மேன்மை, பொது

“ஓம்” – உயிர்களின் ஆதார ஒலி – எப்படி?

August 22, 2009
-
“ஓம்” – உயிர்களின் ஆதார ஒலி – எப்படி?

இதையே வள்ளுவர் எல்லா எழுத்துகளுக்கும் (ஒலிகளுக்கும்) முதல் "அ" என்றார். இத்தனை ஆழமான கருத்தை சொல்ல வள்ளுவர் எடுத்துக் கொண்டது மூன்று வார்த்தைகள் மட்டுமே. இது இம்மையைப் ( இவ்வுலகம்) பற்றிய உண்மை. மறுமையைப் (மறுவுலகம்) பற்றிய உண்மையைக் கூற மீதி நான்கு வார்த்தைகளை எடுத்துக் கொண்டார். இந்த அளவிற்கு நுண்மையாக வள்ளுவர் ஆராய்ந்து இருப்பதால்தான்,....

மேலும் »