Posts Tagged ‘ திருவாசகம் ’

ஆன்மிகம், இலக்கியம், சைவம், வைணவம்

பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை

January 13, 2011
-
பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை

துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை... அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம், பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம்.. மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ..

மேலும் »

இலக்கியம், சைவம், வழிகாட்டிகள்

திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்

திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்

“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார்.. திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று... மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது. உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும்..

மேலும் »

இந்து மத விளக்கங்கள், சைவம்

“தன்பெருமை தான் அறியான்”

“தன்பெருமை தான் அறியான்”

நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு.

மேலும் »

ஆன்மிகம், பிறமதங்கள்

கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

... இந்த ஓவியத்தில் உள்ளது போன்றதொரு காட்சியை அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் வருணித்துவிட்டு இத்தகைய சாவு எனக்கு வாராமல் அருளவேண்டும் என முருகப்பெருமானிடம் வேண்டுகிறார். இயேசு கிறிஸ்துவின் இறுதி உயிர்களுக்கு இன்பம் விளைவிப்பதற்கு மாறாக அவலமே விளைத்ததால் அதனைத் தமிழ் இந்துக்கள் மதிக்காததில் வியப்பொன்றும் இல்லை. இது துர்மரணமே.

மேலும் »

இலக்கியம், சைவம், பிறமதங்கள்

ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்

ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்

மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்... ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

மேலும் »

சைவம்

வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

நாட்டார் வழிபாட்டு நெறிகளைப் பழித்து அழித்து ஒழிக்காமல் அவற்றைத் தழுவி ஏற்றுக் கொண்டு ஒருபெருந்தெய்வ வழிபாட்டினை அறிமுகப்படுத்தும் வைதிகநெறியின் ஆற்றலை உணர்ந்து போற்ற வேண்டும்... வேதத்தில் முதல்வனுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை விளக்கும் ‘அத்துவிதம்’ என்னும் பதத்திற்கு மெய்கண்டாரே உண்மையான பொருளை விளக்கியருளினார். மெய்கண்டதேவரின் திருவவதாரம் இந்திய தத்துவ ஞான வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

மேலும் »

வீடியோ

வீடியோ: திருவாசகம்

இளையராஜாவின் இனிய இசையில் திருவாசகத்திலிருந்து திருப்பொற்சுண்ணம் பாசுரங்கள்.

மேலும் »