Posts Tagged ‘ திருவாய்மொழி ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், வைணவம்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5

இராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால், பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில் இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில் குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும். ஆகையால், பரப்பிரம்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு...

மேலும் »

ஆன்மிகம், தொடர், வைணவம்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய்

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், தத்துவம்

அறியும் அறிவே அறிவு – 9

December 18, 2010
-
அறியும் அறிவே அறிவு – 9

பிராணாயாம வழிகளில் செல்லும் போது நமது அறிவு முடிவான “உள்ள நிலை”யைத் தெரியாதிருப்பதோ, அல்லது அதைத் தேர்ந்தெடுத்துச் செல்லாதிருப்பதோ மிக அபாயகரமானது... ரமணர், “கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்” என்பார்... இருக்கும் எல்லாப் பற்றினுள் தேகப் பற்றே ஆழமானதும் விடுதற்கு அரியதுமானதும் ஆகும்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், வைணவம்

அச்சுதனின் அவதாரப்பெருமை – 4

November 4, 2010
-
அச்சுதனின் அவதாரப்பெருமை – 4

தன்னடியார்களுக்குக் காட்சிதரும் பொருட்டு அவதாரம் எடுக்கக் கிளம்பி, வழியிலே கொடியோர்களைத் தண்டித்தல் என்னும் முக்கியமான காரியத்தையும் செய்து முடிக்கிறான் கண்ணன் "கீதை உபதேசம் செய்தான்", "கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும் அர்ஜுனனுக்கு விளக்கினான்", "கடினமான உபநிடத அர்த்தங்களை எடுத்துக் கூறினான்" என்றெல்லாம் ஆழ்வார்கள் அவ்வளவாகப் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அவனுடைய குழந்தைப் பருவ விளையாட்டுகளிலேயே மெய் மறந்து பாசுரம் பாசுரமாகப் பாடியுள்ளனர்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், வைணவம்

அச்சுதனின் அவதாரப் பெருமை – 3

October 27, 2010
-
அச்சுதனின் அவதாரப் பெருமை – 3

இராமாவதாரம் என்பது, பிரபஞ்சம் முழுவதையும் படைத்துக் காத்தழிக்கும் முழுமுதற்பொருளின் சற்றும் குறையாத, சற்றும் வேறுபடாத உருவமே இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவனன்றோ! நாட்டிலுள்ள இந்துக்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்த அயோத்தி ராம் ஜன்ம பூமி இயக்கத்தின் கோஷமே "மரியாதா புருஷோத்தம் ராம்" என்பதாயிற்றே! இராமாவதாரத்தின் உண்மையான வேதாந்தத் தத்துவ ரீதியில் அமைந்த தாத்பரியத்தை அறிய வேண்டுமானால் சான்றோர்களுடைய வாக்கை ஊன்றுகோலாக எடுக்க வேண்டும்

மேலும் »

இலக்கியம், கவிதை, வைணவம்

சில ஆழ்வார் பாடல்கள் – 1

September 4, 2010
-
சில ஆழ்வார் பாடல்கள் – 1

ஊர் அடங்கி விட்டது. இவள் காதலைப் பற்றி வம்பு பேசிப்பேசியே களைத்துப் போன ஊர்! அந்த வம்புப் பேச்சுக்கள் தான் இவளது காதலுக்கு உரமாக இருந்ததாம்... நம்மாழ்வார் பாடல்களில் சொல்லப் படும் தத்துவம், கோட்பாடாக, கருதுகோளாக நேரடியாக இல்லாமல் கவிதையாகவே இருக்கிறது... நாராயணன் பிரபஞ்சத்தினின்றும் வேறான ஒரு கடவுளாக அல்ல, பிரபஞ்சமாகவே நிற்கும் கடவுள் (cosmic God) என்ற சமய தத்துவத்தை... (ஊட்டி இலக்கிய சந்திப்பில் பேசியது).

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1

பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1

அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, "இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?" என்று பதில் சொன்னார்... பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை.

மேலும் »

வைணவம்

பெரியாழ்வாரின் பட்டினம்

பெரியாழ்வாரின் பட்டினம்

எம்பெருமான் தன் உள்ளத்தில் குடிபுகுந்து விட்டதால் விஷ்ணுசித்தருக்கு இப்பொழுது தைரியமும் தன்னம்பிக்கையும் வந்து விட்டது. இதற்குமுன் தன் ஐம்புலன்களையும், நோய்களையும். மரணத்தையும், யமதூதர்களையும் கண்டு அஞ்சிய விஷ்ணுசித்தர் இப்பொழுது அதே ஐம்புலன்களையும், நோய்களையும், யமதூதர்களையும் தாமே வலிய அழைத்து, தன் அச்சமின்மையையும் தான் பாதுகாப்பாக இருப்பதையும் கர்வத்தோடு எடுத்துச் சொல்கிறார்...

மேலும் »