Payday loans Cialis online
payday loans Car insurance

Posts Tagged ‘ திருவிழா ’

சமூகம், வழிகாட்டிகள்

வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்

வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்

"வள்ளலாரின் அடியார்கள்" என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிற பண்பாடில்லாத சிலருடைய துன்ப அலைகளில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டுதான் திருப்பணி செய்தேன்... எனக்கு பதிவு தபால் வந்திருந்தது. மேடையிலமர்ந்து பிரித்து படித்தேன். கும்பாபிஷேகம் செய்யும் குற்றத்துக்கு என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அதில் கண்டிருந்தது .... [மேலும்..»]

ஆன்மிகம், பண்டிகைகள், வரலாறு

காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

July 2, 2009
-
காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

கோயிலைக் கொள்ளையடித்த டச்சுக் காரர்கள், கப்பல்களில் ஏறித் தப்புவதற்கு முன் அதனை பீரங்கிகளால் தகர்த்து அழிக்க முயன்றனர், அது முடியவில்லை... மன்னர்கள், துறவிகள், மடங்கள் மட்டுமல்லாது, எல்லா சமூகத்து மக்களும் இந்தக் கோவிலுடன் தொடர்பு கொண்டு முருகனை வழிபட்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. [மேலும்..»]

பண்டிகைகள்

முத்தாலம்மன் பொங்கல்

முத்தாலம்மன் பொங்கல்

கிட்டத்தட்ட அறுநூறு வருஷம் முந்தி எங்கூர்ல (தே. கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்) பஞ்சம் தலைவிரிச்சி ஆடுனப்ப ஆந்திராவுல உள்ள நவாப்புக படைஎடுப்புனால எங்க ஊருக்கு ஒரு பாட்டி ஆறு பெண் கொழந்தைகளோட வந்தாங்க.. கிராமத்துல அன்னைக்கு நல்ல வசதியா இருந்த அக்ரகார ராவ் ( அப்ப அவரு கிரமத்தலைவரா இருந்தவரு) வீட்டுலையும் நாயக்கரைய்யா வீட்டுலையும் பாட்டி புள்ளைங்களோட தங்குச்சி.. கிராமத்துக்கு வந்து அடைக்கலமான அவங்கள தங்களோட புள்ளையாவே நெனச்ச கிராமத்து மக்கள் அந்த ஆறு பொண்ணுங்களுக்கும் மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க. அப்ப அந்த பாட்டி நாங்கல்லாம் தெய்வ பிறவிக.. எங்களுக்கு விதிச்ச சாபத்தால மனுசப்பிறவிகளா நடமாடிக்கிட்டிருக்கோம்.. சாபம்... [மேலும்..»]

சமூகம்

ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!

October 9, 2008
-
ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!

நம் தேசத்தில் தர்மத்தின் வெற்றிக்காகப் போரிட்டு, நல்லாட்சி புரிந்த சேரசோழ பாண்டியர், குப்தர்கள், ராஜபுத்திரர்கள், விஜயநகர மன்னர்கள், வீரசிவாஜி, குருகோவிந்த சிம்மன் முதலிய அனைத்து வீரர்களும், மன்னர்களும் தங்கள் ராஜ்ஜிய மக்களுடன் இணைந்து கொண்டாடிய வெற்றித் திருநாள். நம் தேசத்தின் முப்படைகளும், அரசு நிறுவனங்களும், தொழில் மையங்களும், வணிகத் தலங்களூம், கல்விக் கூடங்களும், கலைஞர்களும் சக்தியும், ஊக்கமும், வெற்றியும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடும் தேசியத் திருநாள். "தேவி! மூவுலகிலும் சஞ்சரிக்கும் உனது அழகிய வடிவங்கள் எவையோ அவற்றாலும், அளவு கடந்த கோரமான வடிவங்கள்... [மேலும்..»]

ஆன்மிகம்

நவராத்திரி பற்றி பாரதியார்

September 30, 2008
-
நவராத்திரி பற்றி பாரதியார்

சக்தி. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம். உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி. சக்தியால் உலகம் வாழ்கிறது. நாம் வாழ்வை விரும்புகிறோம். ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம். அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்! [மேலும்..»]

ஆன்மிகம், சமூகம்

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்துக்கள் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்; அவர்கள் தாம் குடியமர்ந்த இடங்களில் வழிபாட்டுத்தலங்களையும் அமைத்துள்ளனர். இந்து சமயம் காட்டும் நெறியில் இந்துக்களாகவே வாழ்வதற்கு அவர்கள் உறுதியான அத்திவாரத்தை இட்டுள்ளனர். 15 இந்து கோவில்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன... [மேலும்..»]

சமூகம், நிகழ்வுகள்

ஹிமாசலப்பிரதேச ஆலய நெரிசலில் மரணித்த பக்தர்களுக்கு அஞ்சலி

ஹிமாசலப்பிரதேச ஆலய நெரிசலில் மரணித்த பக்தர்களுக்கு அஞ்சலி

தமிழ்இந்து.காம் சார்பாக உயிரிழந்த பக்தர்களின் உற்றார் உறவினர்களுக்குத் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். [மேலும்..»]

வீடியோ

மீனாட்சியம்மன் திருவிழா – வீடியோ

மீனாட்சியம்மன் திருவிழா – வீடியோ

மதுரை மீனாட்சியம்மன் திருவிழா- வீடியோ [மேலும்..»]