வ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்

வ.களத்தூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்லாமியர்களுக்கும், அவர்களுக்கு சாமரம் வீசிய அரசியல் கட்சிகள், ஊடகங்களுக்கும் சம்மட்டி அடியாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது… ஜனநாயக நாட்டில், இந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவே நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கியம் நிலவுவது உண்மையிலேயே வேதனைக்குரியது. மக்கள்தொகைப் பரவலில் நிகழும் மாற்றங்கள் சமுதாய அமைதியை எவ்வாறு பாதிக்கின்றவ என்பதற்கு இந்த ஊர் மிகப் பொருத்தமான உதாரணம்…

View More வ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்

மோடியின் வெற்றி

மோடியை எந்த அளவுக்கு நீங்கள் தாக்குகிறீர்களோ எந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்களோ எந்த அளவுக்கு அவரை சுற்றி சக்கர வியூகங்கள் அமைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் மேலும் மேலும் தடைகளை உடைத்து வளர்ந்து வருகிறார். அவருக்கு எதிராக நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு அவதூறு பிரச்சாரமும் இறுதியில் அவரது பாதையில் மலர்களாகவே விழுகின்றன.

View More மோடியின் வெற்றி

ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்?

View More ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, “விஞ்ஞானம் – ஆன்மிகம் – சமூக சேவை’ கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்…

View More இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- நிறைவுப்பகுதி

பிரபல எழுத்தாளர் மதன் ‘வந்தார்கள், வென்றார்கள்’ தொடரை ஆனந்த விகடனில் எழுதியபோது, முகலாயர்களின் அட்டூழியத்தை எழுதியதற்காக இஸ்லாமியர்களால் மிரட்டப்பட்டார். வார்த்தையில் ‘எனது இந்தியா’ கட்டுரையை எழுதியதற்காக எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மிரட்டல்கள் வந்தன. […]கீழக்கரையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் என்ற செய்திக்காக ‘நிமிர்ந்த நன்னடை’ தினமணியும் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

View More அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- நிறைவுப்பகுதி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?

முதலில் போலீஸ் விசாரணை, விசாரணைக்குத் தடை, விசாரித்த பின் மறு விசாரணைக்கு மனு, ஸீ பி. ஐ விசாரனைக்கு கோரிக்கை, அதெல்லாம் முடிந்த பின், வாய்தா மேல் வாய்தா, அதைத் தாண்டினால் தீர்ப்பு ஒத்தி வைப்பு, தீர்ப்பு சொல்லப் போனால், அதற்கு தடை உத்தரவு என்று பல தலைமுறைகளுக்கு சாதாரண வழக்குகளே இழுத்தடிக்கின்றன. அயோத்தி பல நூறு வருடங்களாக இருந்து வரும் பிரச்னை. இதில் தாமதம் ஆவது ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடியது என்றாலும், முடிவான தீர்ப்பு என்றே ஒன்று வெளியிடப் படுமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

View More அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?

கம்போடியாவில் ஹிட்லரின் ஒரு வாரிசு

கம்போடியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவிய போல் பாட்டின் அட்டகாசத்தை ஒப்பிடும்போது ரஷ்யா, சீனா அல்லது வியட்நாமில் கூட இதுபோன்ற அக்கிரம முறைகளை அவர்கள் கையாளவில்லை என்பது தெரியும்….. கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் சிலருடன் மன்னர் சீனா சென்று சீனப் பிரதமர் சூஎன்லாயைச் சந்தித்தார். அவர் அப்போது உடல் நலம் குன்றி இருந்தார். சூஎன்லாய் அப்போது கம்போடிய கம்யூனிஸ்ட்டுகளைப் பார்த்து ஒரேயடியாக கம்யூனிசத்தைத் திணிக்க முயலாதீர்கள் என்று சொன்னார். இவர்கள் பதிலேதும் சொல்லாமல்…

View More கம்போடியாவில் ஹிட்லரின் ஒரு வாரிசு