மதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது

என்னுடைய பேரக்குழந்தைகளின் தலைமுறைக்கு சொல்ல ஒரு விஷயம் என்னிடம் உண்டு. உங்கள் காலத்தில் கேரளா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்து ஹிந்துக்கள் முற்றிலுமாக வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை மதச்சார்பின்மை உருவாக்கும் – காஷ்மீரீலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டது போல… ஒரு திருடன் குளித்துவிட்டு சுத்தபத்தமாக பயபக்தியுடன் ராத்திரியில் கோவிலுக்குள் நுழைகிறான். அவனுடைய உண்மையான நோக்கம் கோயிலில் உள்ள தெய்வ விக்ரஹங்களைக் கொள்ளையடிப்பது. காலடித்தடம் கேட்டு திரும்பிப் பார்த்தபோது, வேறொருவன் செருப்புடன் கோவிலுக்குள் நுழைந்ததை காண்கிறான். உடனே திருடன் எச்சரிக்கிறான் – “நான் மட்டும் இப்போது வேலையில் மும்முரமாக இல்லாதிருந்தால், ஆலயத்தை அவமதித்தற்காக உன்னை தண்டித்திருப்பேன்!” அந்த திருடன் மதச்சார்பற்றவன். இதுதான் இந்திய சமூகத்தின் யதார்த்தநிலை…

View More மதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது

இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது

ஜனநாயக நாடுகளில், பாசிசம் பழைய பாணியில் இல்லாமல் “கருத்துக்களின் பரவலாக” ஜீவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகார ஆட்சிமுறை சார்ந்த இயக்கம் என்ற வகையில், தனது தலைவர்கள் ஆட்சியில் இருந்த வரை, இந்தியாவில் பாசிசம் அமைதியாக, சமர்த்தாக இருந்தது. இந்த பாசிச வர்க்கத்தினரால் விரும்பப் படாத ஒரு தலைவரை 2014ல் மக்கள் பெரும் ஆதரவுடன் தேர்ந்தெடுத்த போது, இந்திய சமுதாயத்தில் இருந்த பெர்லின் சுவர் உடைந்து நொறுங்கியது. இன்னும் முழுதாக சுத்தம் செய்யப் படாமல் அதன் இடிபாடுகள் அங்கங்கு விழுந்து கிடக்கின்றன. பழைய கட்சியாலும், வாரிசு அரசியலாலும், கருத்தியலாலும் ஆதாயம் அடைந்த பத்திரிகையாளர்கள் கூச்சலிடுகிறார்கள்… இந்திய அறிவுஜீவிகள் என்பவர்கள், இந்திய வாக்காளர்களின் தீர்ப்பை சகித்தன்மையுடன் ஏற்க மறுக்கிறார்கள். டிவி ஸ்டுடியோக்களிலிருந்து இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள் இவர்கள். ஜனநாயகம் உண்மையிலேயே முதிர்ச்சியடையும் போது இந்த வகையான அறிவுஜீவிகள் அழிவார்கள்….

View More இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது