Posts Tagged ‘ தெய்வங்கள் ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பொது

ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள்... இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும், ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும்... மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும்?

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம், வைணவம்

அச்சுதனின் அவதாரப் பெருமை

அச்சுதனின் அவதாரப் பெருமை

பிரம்மத்தின் மேன்மையை மனதில் வைத்துக் கொண்டாலொழிய பிரம்மம் எடுக்கும் அவதாரங்களின் மகிமை புரிவது கடினம். நிற்க, இங்கு ஒரு நியாயமான ஐயம் எழக்கூடும். "நமக்கு எட்டாத இந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்வதால் ‘நமக்கு என்ன பயன்? அப்படி ஒரு பொருள் இல்லை' என்று கூறிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே?" என்று கேட்கலாம்.

மேலும் »

இந்து மத விளக்கங்கள், கலைகள், பண்டிகைகள், பொது

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது... எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்... வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம், தத்துவம்

கடவுளின் பணித்திட்டம்

கடவுளின் பணித்திட்டம்

உயிர்களைவிட்டுக் கணநேரமும் பிரியாமை அவனது குறிப்பு என மாணிக்கவாசகர் அனுபவித்துக் கூறுகின்றார். ‘உய்ய என் (உயிர்களின்) உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா’, ‘மருவி எவ்வுயிரும் வளர்ப்போன் காண்க’ என்பன போலத் திருவாசகத்தின் பல இடங்களில் இறைவன் உயிர்களோடு கலந்து நின்று பிரியாமல் இருப்பதன் திருக்குறிப்பை அதாவது ‘கடவுளின் பணித்திட்டத்தை’ மணிவாசகர் அறிந்து கூறுகின்றார்.

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம்

பணிப்பொன்

பணிப்பொன்

ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் »

ஆன்மிகம், கவிதை, வேதம்

தேவி சூக்தம்

May 7, 2010
-
தேவி சூக்தம்

மானுடர் உண்பதும் காண்பதும் சுவாசிப்பதும் சொல் கேட்பதும் எல்லாம் என்னால். அதை அறியார் ஆயினும் அவர்கள் என் உள் உறைபவரே... மனதில் எண்ணம் உருவாகி அது சொல்லாகப் பரிணமிப்பது பற்றிய ஆழ்ந்த உளவியல் தத்துவம் அது. வாக்கு அல்லது மொழி நான்கு படிநிலைகள் கொண்டது என்று தந்திர சாஸ்திரம் கூறுகிறது. பரா என்பது வாக்கின் ஆதி நிலை ... கவிஞனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் ஏற்படும் ஆன்மிக பரவச நிலையிலேயே அத்தகைய கவிதை எழுகிறது. அது காலவெளியையும் கடந்து செல்கிறது.

மேலும் »

இந்து மத விளக்கங்கள், இலக்கியம்

அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?

அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?

மூதேவியும், ஸ்ரீ தேவியும் இந்து மதத் தெய்வங்கள். இந்தக் குறள் அவர்களைப் பற்றிச் சொல்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது - இன்றைய தமிழக முதல்வர் உட்பட... திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழும் அப்பாடல்கள் சங்கப் புலவர்கள் எழுதியவை. அவர்களில் ஒருவராவது, திருக்குறள் மத சார்பற்றது என்றோ அல்லது சமண பௌத்த மதக் கருத்துக்களை உடையது என்றெல்லாமா கூறியிருக்கிறார்கள்?

மேலும் »

இலக்கியம், வைணவம்

தமிழர் கண்ட நீளா தேவி

தமிழர் கண்ட நீளா தேவி

தமிழ் மரபில் மட்டும்தான் இவளைப் பற்றி செய்திகள் உள்ளன என்பது, தமிழர்கள் வேதக் கருத்துகளில் எந்த அளவு ஆழ்ந்திருந்தனர் என்று காட்டுகிறது ... மஞ்சள் துண்டு மகிமையைக் கண்டவருக்கு, போகம் காட்டி அவன் பாதையில் திரும்ப வேண்டி மோகம் கொள்ளச் செய்ய வேண்டும். தோஷங்களை அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிழல் போன்ற நீளா தேவியின் கருணை - கருணைக்கே கருணை காட்டும் நீர்மை- தேவைப்படுகிறது.

மேலும் »

இந்து மத மேன்மை

வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலா என்ற ஊரிலுள்ள மஞ்சுநாதர் ஆலயத்தில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான யாத்ரீகர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் அமிர்தஸரஸ் பொற்கோவிலுக்குச் சென்ற பொழுது அங்கு நடக்கும் அன்னதானம் கண்டு வியந்தேன். யாத்ரீகர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் நேர்த்தியையும் சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்து நன்கு துடைத்துத் தருவதையும் மிக நேர்த்தியாகச் செய்கிறார்கள்

மேலும் »

இந்து மத விளக்கங்கள், கலைகள்

இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினை

இந்து தாலிபானியம்…?  – ஒரு எதிர்வினை

ஹுஸைனின் இந்த ஓவிய முறைமை அத்தகைய ஆன்மிகத் தேடலோ அல்லது வழிபாட்டு முறையோ எனக்கொள்ளும்படிக்கு ஜெயமோகனுக்கு எவ்வாறு தோன்றுகிறது? ... இந்து மதத்தினரின் கண்டனத்துக்குள்ளாகும் ஒரு ஓவிய முறைமையை விடாப்பிடியாக செய்தே தீருவேன் என்று செய்பவர் வக்கிர மனத்த்தினர் தரும் மாபெரும் விலைகளுக்காக பொது நாகரிகம் கருதாத, மனித மன மரியாதையற்ற, கலை வியாபாரியாகவே இருக்க வேண்டும். அல்லது தன் மதத்தைக் காயப்படுத்தாமல் இந்து மதத்தினரைக் காயப்படுத்தி, தீவிரவாதிகள் குண்டுகளால் சாதிப்பதை தூரிகையால் சாதிப்பவராக இருக்க வேண்டும்.

மேலும் »