Posts Tagged ‘ தேசியம் ’

அரசியல்

திமுகவுக்கு பிடிக்காத வார்த்தை

திமுகவுக்கு பிடிக்காத வார்த்தை

ஒரு காங்கிரஸ் ஆளூ ஓட்டு கேட்டு பேசிகினாரு. முழ்ஷா பேத்தல் சார். ஆனா இன்னா ஒன்னு, கட்சீல ஜெய் ஹிந்த் அப்டீன்னு முட்சிகினார். நம்ம கூட ஒரு திமுகா தோஸ்த் இர்ந்துகிணு ஜோரா விசில் உட்டார். நான், ‘இன்னாத்துக்கு இப்பொ விசிலு வுட்ற, சுத்த பேத்தலுக்கா’ ன்னு கேட்டென். ‘நம்ம கூட்டணி ஆளு, அதுக்கோசரம்’னார்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், தத்துவம்

பாரதியின் சாக்தம் – 4

பாரதியின் சாக்தம் – 4

மேல்படிந்த தூசுகளையும் குப்பைகளையும் அகற்றி உயர்ந்த சிந்தனைகளின் உள்ளபடியான உருதுலக்கிக் காட்டும் மேதைமையோர் மிக அரியராகத்தான் தென்படுகின்றனர்... பாரதி மனம் போன போக்கில் செய்யும் விடுதலைக் காதல் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்... காளி அன்னையில் இந்தியாவையும் இந்தியாவின் உருவில் காளி அன்னையையும் காண முனைந்தது வங்காளம். வங்காளம் போல் பெரிதும் உணர்ச்சியின் வசப்படாமல் ஆழ்ந்த நிதானத்தில் தான் பெற்ற ஒளியைப் பயன்படுத்தியது தமிழ்நாடு.

மேலும் »

அரசியல்

ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்

September 15, 2009
-
ஆர்.எஸ்.எஸ்  பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்

ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் பலர் பா.ஜ.க வில் இருந்தாலும் அது தனியான சுதந்திரமான கட்சி, அதன் பிரச்சனைகளை அதுவே தீர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி படைத்தது. தற்போது அக்கட்சிக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் பூசல்கள் மனதுக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், அவற்றிலிருந்து விரைவில் மீண்டு வரும் ... தன்னுடைய ஆலோசனைகளுக்கும், அறிவுரைகளுக்கும், செயல்பாட்டிற்கும் தக்க அங்கீகாரம் கிடைக்கும் விதமாக, மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை சென்று மோகன்ஜி சந்தித்தது, அவரின் நற்பண்பைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் »

சமூகம், நிகழ்வுகள், வழிகாட்டிகள்

வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்

August 12, 2009
-
வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்

சர்வக்ஞன் என்பவன் கர்வத்தினாலா அப்படி ஆனான்? எல்லாரிடமும் ஒவ்வொரு சொல் கற்று, வித்தையின் பர்வதமாகவே ஆனவல்லவோ சர்வக்ஞன்! 1500 ஆண்டுக் கால இடைவெளியில் வாழ்ந்த இருபெரும் புலவர்கள், ஞானிகள் இன்றும் இந்த தேசத்தை, இதன் மக்களை இணைக்கிறார்கள். தர்மம் எப்போதும் மக்களை இணைக்கிறது, வாழவைக்கிறது. அதர்மம் அடித்துக் கொள்ளச் சொல்லி, அழிக்கிறது.

மேலும் »

அரசியல், வரலாறு, வழிகாட்டிகள்

கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்

கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்

ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்தவர் மகத்தான இந்த இஸ்லாமியர் ....

மேலும் »

அரசியல், வரலாறு, வழிகாட்டிகள்

வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …

வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …

... இன்று வரலாறு அந்த நீதிபதியை மறந்துவிட்டது, இந்த வழக்கு நடந்த மும்பை உயர்நீதிமன்றத்தில், அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அறையில் அந்த "குற்றவாளியின்" வார்த்தைகள் பொறிக்கப்பட்டு விளங்குகின்றன. அந்த குற்றவாளிதான் சுதந்திர கோஷத்தை இந்த தேசத்துக்குத் தந்த மகான்.... அவரது உற்ற நண்பராகவும் சீடராகவும் விளங்கிய ஜின்னா, அவரது மறைவு வரை அப்பழுக்கற்ற தேசியவாதியாகவே இருந்தார், அதன் பின்னரே பாதை தடுமாறி பிரிவினை வாதியானார்....

மேலும் »

அரசியல், வழிகாட்டிகள்

தர்மவழி நின்ற கர்மவீரர்

தர்மவழி நின்ற கர்மவீரர்

"வகுப்புவாத ஜனசங்கத்துடன் காமராஜர் உறவு வைத்திருக்கிறார்" என இந்திரா பாராளுமன்றத்தில் கூறினார். அதை காமராஜர் பொருட்படுத்தவே இல்லை....

மேலும் »

இலக்கியம், கேள்வி-பதில், சமூகம், நிகழ்வுகள், பொது, வழிகாட்டிகள்

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

July 13, 2009
-
சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம்தான் பிரமாணம்’ என்கிறார்... ”தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெயகாந்தன்.

மேலும் »

அரசியல், சமூகம்

தேச அவமதிப்பும் சட்டமும் நீதிமன்றங்களும்

தேச அவமதிப்பும் சட்டமும் நீதிமன்றங்களும்

... இந்தப் பிரிவினைவாத இயக்கங்களின் குண்டர்கள் ராணுவத்தைத் தாக்கியதிலும், தேசியக்கொடியை எரிக்க முயன்றதிலும் ஆச்சரியம் இல்லை .. ஆனால் கடைந்தெடுத்த சமூக விரோத, தேச விரோத கும்பலுக்கு அனாதை இல்லத்தில் "சேவை" செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது மிகவும் வியப்பளிப்பதாக இருக்கிறது....

மேலும் »

சமூகம், சினிமா

பைத்ருகம் – ஓர் அறிமுகம்

பைத்ருகம் – ஓர் அறிமுகம்

இந்து மத நம்பிக்கைகளைக் கேவலமாகச் சித்தரிக்கும் தமிழ் பட உலகை ஒப்பிடும் பொழுது மலையாளப் பட உலகில் ஒரு நேர்மையைக் காண முடிகிறது. மலையாளப் பட உலகம் கம்னியுஸ்டுகளின் கோரப் பிடியில் சிக்கியிருந்தாலும் கூட பொதுவாக அவர்களிடம் அநாவசியமாக ஒரு மதத்தை இழிவு செய்யும் நோக்கில் எடுக்கப் படும் படங்களைத் தமிழில் காண்பது போலச் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியாது. மேலும் தங்கள் நம்பிக்கைகளைச் சொல்லும் பொழுது அவர்கள் வெட்க்கப் படுவதோ மறைப்பதோ போலித்தனமாக நடிப்பதோ கிடையாது. எம் ஜி ராமச்சந்திரன் வெளியுலகில் நாத்திகக் கொள்கையுடையவராகத் தன்னைக் காண்பித்துக் கொண்டு ரோஸ் பவுடரின் நடுவே யாருக்கும் தெரியாமல்...

மேலும் »