Posts Tagged ‘ நடராஜர் ’

கதைகள்

தாண்டவம் [சிறுகதை]

May 12, 2011
-
தாண்டவம் [சிறுகதை]

அவரது கலை ஆளுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், விரல்களை மடக்கிக் காட்டும் பேருண்டப் பட்சி முத்திரைதான் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றும்... பரதநாட்டியத்தை மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது... கோபமும், பீபத்சமும், சிருங்காரமும் எல்லாம் ஒருவித கலாபூர்வமான அழகியல் வெளிப்பாடாக இருக்கவேண்டுமே தவிர அப்பட்டமாக இருக்கக் கூடாது என்பது நாங்கள் படித்து உள்வாங்கியிருந்த பரதக் கலை கோட்பாடு... தி மடோன்னா முத்ரா... தி ரைஸன் கிரைஸ்ட் அபிநயா... தி சர்ச் முத்ரா...

மேலும் »

ஆன்மிகம், சமூகசேவை, சமூகம்

உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!

உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!

துடைப்பம், தண்ணீர் வாளிகள், மம்மட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றுடன் பக்தர்கள் தூய்மைப் பணியில் இறங்கினார்கள்...தீட்சிதர்கள், அவர்களுக்கு அன்புடன் அன்னமிட்டனர். ஜாதி வேறுபாடின்றி அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து தீட்சிதர்கள் வழங்கிய உணவை உண்டனர்... சிதம்பரம் கோயில் தூய்மையானது. இப்போது புது மெருகுடன் கோயில் காட்சி அளிக்கிறது; சிதம்பரம் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம், சைவம், தத்துவம்

பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்

பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்

சத்தியத்தை - சிவத்தை - சுந்தரத்தை, சுடுகாட்டு அரங்கின் மைய நடனமாக அனுபவிக்கின்றது அம்மையின் மனம்.. புழுதி அள்ளி அவிக்க முயல்கின்றது பேய்! பூச்சுக்கள் உதிர்கையில், சாயம் வெளுக்கையில், புழுதி அள்ளி அவிக்க முயலும் கைகளும் நம் கைகளே என்பது புலனாகின்றது... ஒப்பனைகளின் அழிவில் பேயரங்கமும், அதன் மைய நிகழ்வாம் அப்பனின் ஆட்டமும் தெரிகின்றன. அந்த ஆட்டமே பிரபஞ்சத்தின் இயக்க மையம்; இலட்சிய மையம்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம், தத்துவம்

அருணையின் கருணை

அருணையின் கருணை

ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்... பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.

மேலும் »

கலைகள், வரலாறு

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

தேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை...சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை...

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்

பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்

'பெற்றோர் இறந்தவுடன் அவர்களுக்கு பித்ரு காரியம் செய்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியவா போகிறது? அது அவர்களை அடையப் போகிறதா என்ன? அதற்குப் பதிலாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும். இறந்த பிறகு ஸ்ராத்தம் என்று சடங்குகள் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அதனால் நம் பிள்ளைகளையும், பேரன்களையும் பாதிக்கும் என்பதெல்லாம் சும்மா புருடா.'-- இதுவே இன்றைக்குப் பரவலான கருத்து.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்

பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்

இடைவிடாத இயக்க நிலையை உணர்ந்துள்ள அறிவியலார், அந்த இயக்கத்தை நடராஜர் உருவில் என்றோ நாம் அறிந்துள்ளோம் என்பதை ஆமோதித்து, ஜெனீவாவில் உள்ள நுண்ணணு ஆராய்ச்சி மையமான CERN கழகக் கட்டடத்தின் முன்புறம் இரண்டு மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையை நிறுவியுள்ளனர். உருவ வழிபாட்டினை இகழ்ச்சியாகப் பார்க்கும் இன்றைய உலகில் அறிஞர்களும், அறிவியலாரும் இவற்றின் பின் அமைத்துள்ள அரும் பெரும் கருத்துக்களை உணர ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சி.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

நாராயணன் என்றாலே, ‘அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், அவனில் எல்லாம் இருக்கின்றன’ என்பது பொருள். அவனைப் பிரம்மம் என்பர். .. நமக்குள் யோகேஸ்வரனாக இருப்பதையும், சக்கரத்தாழ்வானாகக் காப்பதையும், பிரபஞ்சச் சுழற்சியைக் காட்டி நடராஜராக தாண்டவம் ஆடுவதையும் ஒரே உருவில் காட்டப்படும் அந்தச் சக்கரம் சு-தர்சனச் சக்கரம். சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்று பொருள்.

மேலும் »