கொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்

கொடுப்பதை, சிரத்தையுடன் கொடுத்திடுக. அசிரத்தையுடன் கொடுத்தல் தகாது. செல்வத்திற்கேற்பக் கொடுத்திடுக. நாணத்துடன் கொடுத்திடுக. அச்சத்துடன் கொடுத்திடுக. சம்மதத்துடன் கொடுத்திடுக என்கிறது தைத்திரிய உபநிஷதம்… அச்சம் ஏன்? கொடுப்பதால் நமக்கு அகம்பாவம் ஏற்பட்டு விடக் கூடாதே, நல்ல உள்ளத்துடன் நாம் கொடுத்தாலும் பெறுபவன் மனம் புண்பட்டு சிறுமையடைந்துவிடக் கூடாதே என்பதான அச்சம். ‘ஸம்வித்’ என்பதற்கு ‘நட்புணர்வுடன்’ என்று சங்கர பாஷ்யம் தரும் பொருள் சிறப்பானது. கொடையைப் பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த ஆறு உபநிஷத வாக்கியங்கள் அளித்து விடுகின்றன…

View More கொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்

நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்

இந்த இயற்கைப் பேரிடரில் மரணமடைந்தவர்களுக்கு இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியையும், துயருறும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைச் செய்து வருவது குறித்து உலகெங்கும் உள்ள ஊடகங்கள் செய்திகளைத் தந்த வண்ணம் உள்ளன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் நிவாரணப் பணிகளுக்ககு நன்கொடை அளித்து பொருளுதவி செய்யுமாறு கோருகிறோம். விவரங்கள் கீழே..

View More நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்

மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 2

நன்கொடை வழங்குபவர்கள் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவுவதற்காகத்தானே பணம் தருகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள கிளைகளுக்கு கிடைப்பதெல்லாம் வெறும் தொடக்கநிலை உதவி மட்டுமே. திரட்டப்பட்ட பெரும்பாலான நன்கொடை நிதியும் வட்டிகன் வங்கியின் கணக்கிலேயே கிடக்கும்…. 1994-இல் மதர் தெரசாவின் இல்லங்களின் அவலநிலைகளைக்குறித்து டாக்டர் ராபின் ஃபாக்ஸ் எழுதிய விமர்சனக் கட்டுரையில் முறையான அறுவைச்சிகிழ்ச்சை என்பது இந்த அமைப்பின் இந்திய கிளைகளில் காணப்படவே முடியாத ஒன்று என்று சொன்னது மருத்துவ உலகையே அன்று அதிச்சிக்குள்ளாக்கியது…
மதர் தெரசாவின் வியாபாரம் என்பது என்ன? பணத்துக்காக நல்ல மனசாட்சியை பண்டமாற்று செய்வது என்பதுதான் அது. இந்த பண்டமாற்றில் மிகப்பெரும் நன்மை அடைந்தவர்கள் நன்கொடை தந்தவர்கள். கிஞ்சித்தும் நன்மை காணாதவர்கள் ஏழைகள்… .(மொழிபெயர்ப்புக் கட்டுரை)

View More மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 2

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்

ஒருவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐ.சி.யு.வில் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருப்பது, வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்கள், அறிஞர்கள், மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் மிகுந்த கவலையை அளித்துக் கொண்டிருந்தது….அந்த அசரீரியான குரலில் திரு வெங்கட்ராமனின் கனவில் அந்த அறிவுரை ஒலித்தது. ஒரு ஆசிரியர் மாணவனுக்கு கட்டளையாக எடுத்துச்சொல்வது போல தமிழில் தெள்ளத்தெளிவாக அந்த அறிவுரை ஒலித்தது… தனக்கு டாக்டர் சார் குடும்பத்தோடு அதிக நெருக்கம் கிடையாது. இதனை எப்படி சொல்வது? சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்களா?… ஸ்ரீகால சம்ஹார மூர்த்தியின் ஆசியினால் வறுமையில் வாடும் 11 எழை நோயாளிகளுக்கு சங்கர நேத்ராலயாயில் ஒவ்வொரு வருடமும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை கிடைத்து வருகிறது….

View More கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்

பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்

அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை, நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை [..] சுய நலமிகுந்து தாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்ளாம் தவறு என்ற எண்ணம் வளர்ந்து வரும் இன்றைய மக்களிடம் நமது நம்பிக்கைகளை புரிய வைப்பது மிககஷ்டம். நான் என்ன செய்கிறேன் என்பதை விட எனக்கு என்ன கிடைக்கும் என்றே இன்றைய உலகம் இயங்குகிறது. [..] அதிக பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார். தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள். வேலைகாரர்கள் இல்லை. ஒரு வேலையாள் ராஜினமா செய்யலாம், ஒய்வு பெறலாம். ஆனால் தாஸர்கள் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்யவேண்டும் [..]

View More பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்

எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?

ஒரு அறையில் சின்னதாக தனித்தனியாக லேமினேட் செய்யப் பட்டு மூன்று குழந்தைகளின் போட்டோக்கள் ஒரு மேசையில் இருந்தன. இதில எல்லாம் மதத்தைப் பார்த்தா நாம என்ன சார் மனுஷங்க?… திட்டமிட்டு இரண்டு பிராமணர்களை தேர்ந்தெடுத்து, மூளைச்சலவை செய்து, புரோடஸ்டண்ட் சர்ச்சில் மதம்மாற்றி.. இந்தியா இந்த அவலத்தை சகித்துக் கொள்வது மட்டுமல்ல, இதற்குத் துணைபுரியவும் செய்கிறது… இப்படி ஏமாத்தி இருக்காங்களே? நானும் ஏமாந்திருக்கேனே என்று நொந்து கொண்டார் நண்பர்..

View More எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?

இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?

கோயில்கள் திறந்தன. இடிபாடுகளுக்கிடையில் கருவறை, களவுபோன கோயிற் சாமான்கள். ஆனாலும் தளரவில்லை, பாலஸ்தாபனம் செய்து திருப்பணி தொடங்கியுள்ளனர்….கிறித்தவ தேவாலயங்களை கிறித்தவ நாடுகள் வாரி வழங்கிக் கட்டுவிக்கின்றன.யாழ்ப்பாணத்தில் இடிந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை அரபு நாட்டு அரசுகள் துணை கொண்டு கட்டுகிறார்கள். புத்த கோயில்களைப் புதிது புதிதாகச் சிங்களப்படையினரே தமது செலவில் கட்டி வருகின்றனர். எமது கோயில்கள் கட்ட யாரிடம் போவோம்? நீங்களே சொல்லுங்கள்…

View More இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5

…இது எழுதி முடிக்கப்பட்டதும் சில நாள்கள் கழிந்தபின் இன்னொன்றை கவனித்தேன். முன்னர் இருந்தது போல் ஏதாவது எழுத வேண்டும் என்ற ஒரு துடிப்பு அடங்கிவிட்டது. முதல் நாள் மலை உச்சிக்குச் சென்று வந்ததுபோல், அன்று எழுதத் துடிக்கும் உச்சிக்கும் சென்று வந்துவிட்டதுபோல் இருந்ததோ என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு….

View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5