உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்

போய்விட்டனர் முன்னாள்களில் உஷையின் உதயம் கண்ட மானிடர்.. நாம், இன்று வாழும் நாம், அவளது நல்லொளி காண்கிறோம்… வரும் நாள்களில் அவளைக் காண நமது பின்னோர் வருகிறார்கள்.. மகாசக்தியின் பேரியல்பை பெண்மையின் சோதிமுகமாக, புன்முறுவலாக, பெண்மையின் தீண்டலாக, ஸ்பரிசமாக, பெண்ணின் பால்பொழியும் கருணையாகக் கண்டானே ஆதி வேத ரிஷி! அவன் பெரும் ஞானி மட்டுமல்ல, பெருங்கவிஞனும் கூட… வசன கவிதைகளில் பாரதி வேத இலக்கிய உருவகங்களை அற்புதமாக எடுத்தாள்கிறார்… வேத கவிதை உருவகத்தை முழுமையாக உள்வாங்கி முற்றிலும் புதுப் புதுப் படிம வெளிகளுக்கு ஜெயமோகன் எடுத்துச் செல்கிறார்..

View More உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்

படிவங்கள் எப்படியோ?

வெளி முழுவதையும் அந்த ஒற்றைப் பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்பது போல ஒரு தோற்றம்… இராமவதார காவியத்தில், விராதனுக்கு சாப விமோசனம் மட்டுமல்ல, இராம ஸ்பரிசத்தால் மேலான நல்லறிவும் உண்டாயிற்று என்று கம்பன் எழுதுகிறான்… ஒரு விலங்கினால் மற்றொரு விலங்கிற்கு விளைந்த துயர் நீக்க வந்து, இரு விலங்குகளுக்கும் முக்தியளித்தாய்… “பார்த்தா, மூன்று உலகங்களிலும் எனக்கு யாதொரு கடமையும் இல்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லை. ஆயினும், இடையறாது கர்மத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன்…”

View More படிவங்கள் எப்படியோ?

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3

நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முதல் கதையே தாழ்த்தப்பட்ட சாதியினரின் விடுதலையைப் பற்றிய பிரசினையைத் தான் மையமாகக் கொண்டுள்ளது.. கழக எழுத்தாளர்களுக்கு பிராமணர்களைச் சாடுவது மாத்திரமே சாதி ஒழிப்பாகியது. சமூக நீதியாகியது. தலித்துகளைப் பற்றிய சிந்தனையே இல்லாததால்…80 வருட கால கட்டத்தில் ஏதும் இலக்கியம் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்து ஏதும் முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்து வந்ததில்லை..

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3