மோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்

குஜராத் கலவரத்தின் போது 74 இந்து தலித்களை இஸ்லாமியர்கள் கொன்று குவித்திருக்கிறார்கள். 500க்கும் மேற்பட்ட இந்து தலித் பெண்களை கற்பழித்திருக்கிறார்கள். கூட்டு வன்புணர்வு செய்து தங்களின் மத வெறியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்…. மனித உரிமை, மானுட சம நீதி பேசக்கூடிய மகானுபாவர்களே, உங்களை கேட்கிறேன். அதே 2002 குஜராத் கலவரத்தில் இறந்து போன, எந்த பாவமும் அறியாத 258 இந்துக்களின் உயிர்க்கு, உடமைக்கு அவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில்? துள்ளத் துடிக்க கொல்லப்பட்ட, எரிக்கப்பட்ட அந்த அப்பாவி 14 குழந்தைகள் உள்ளிட்ட 56 இந்துக்களுக்கு நீங்கள் சொல்லும் ஆறுதல் என்ன? நடு நிலை போர்வையில் இருக்கும் அடிப்படைவாதி ஓநாய்களே, நெஞ்சு பொறுக்க முடியாமல் கேட்கிறேன்… தலித் சகோதரர்களே, தலித்களின் வாழ்வில் விளக்கேற்ற வந்திருக்கும் ஒரு சுயநலமற்ற சிறந்த அரசியல் தலைவர் நரேந்திர மோதி. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கும் உங்களில் ஒருவரான மோதியை அவமதிக்கும் செயலை, உங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு, இஸ்லாமிய அமைப்புகள் செய்வதன் அரசியல் நோக்கங்களையும் சதிகளையும் உணர்ந்து கொண்டு விழிப்படையுங்கள்… மேற்கு வங்கத்தில் 30,000 தலித்களை கொன்ற இடது சாரிகள் இது வரை பகிரங்க மன்னிப்பு கேட்டதில்லை. ஆனால் வெறும் 794 இஸ்லாமியர்கள் இறந்ததற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லி திரிகிறார்கள்…

View More மோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்

மண்குடமும் பொன்குடமும்

கண் முன் நடந்த தினகரன் அலுவலக எரிப்பு வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டடனர். அப்படியானால், தினகரன் அலுவலகம் தன்னைத் தானே எரித்துக்கொண்டதா?… பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கலவரங்களில் சீக்கியர்கள் 2700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்… ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் எதிர்க்கட்சிகள் மீது ஊழல் வழக்குகள் தொடுப்பதும், ஆட்சி மாறியவுடன் அவை கைவிடப்படுவதையும் தமிழக மக்கள் தாராளமாகவே கண்டு வருகின்றனர்… குஜராத் நீதிமன்றங்களையே சந்தேகக் கண்ணுடன் விமர்சித்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் இப்போது அமைதியாக இருப்பது ஏன்?… வழக்குகள் மீது வெளிப்புறத்தில் இருந்து திணிக்கப்படும் மனோவியல் நிர்பந்தங்களும் கூட கடுமையான தீர்ப்புகளுக்குக் காரணமாகி விடுகின்றன. தீர்ப்புகள் திருத்தப்படலாம்.

View More மண்குடமும் பொன்குடமும்