Posts Tagged ‘ பகவத் கீதை ’

சமூகம், நிகழ்வுகள்

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, "விஞ்ஞானம் - ஆன்மிகம் - சமூக சேவை' கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்...

மேலும் »

அரசியல், பிறமதங்கள், பொது

புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை

புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை

ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும் ?

மேலும் »

இந்து மத விளக்கங்கள், பிறமதங்கள்

இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

சனாதன தர்மம் ஓரளவு எஞ்சி இருக்கும் இந்திய நாட்டில் இந்துக்களோடு நீங்கள் உறவாடுகிறீர்கள்... நிலவைச் சுட்டும் விரல்களே வேதங்கள். சுட்டுபவரின் வர்ணனை விரல் பற்றியதே. அவர் நோக்கம் நிலவு பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது. அவர் நடத்தை அவரது அனுபவத்தை மற்றவரும் அடைந்தால் ஆனந்தம் கொள்வது... இங்ஙனம் இல்லாதவற்றை இருப்பதாகச் சொல்லுவது, இருப்பவற்றைத் தவறாகத் திரிப்பது, தேர்ந்தெடுத்த வரிகளை மட்டும் எடுத்தாள்வது போன்றவை மதத்தன்மைக்கு எதிரானவை. ஆனால், மதத் தலைமைப் பீடாதிபதிகளுக்குப் பிரியமானவை...

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 13

ரமணரின் கீதாசாரம் – 13

எல்லா ஆசைகளையும் விட்டொழிப்பது என்பது சாமான்ய காரியமல்ல என்றாலும், இந்த வகையான சிறிய ஆசைகள் கூட இல்லாது இருப்பவனுக்கே மனம் ஒரு ஸ்திரநிலைக்கு வந்து அவனை மேலும் உள்நோக்கிச் செல்ல வைக்கும். அவனுக்கே தத்துவ தரிசனமும் கிட்டும்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 12

ரமணரின் கீதாசாரம் – 12

சிறு வயதில் ரமணர் திருவண்ணாமலையை அடைந்ததுமே தன் கையில் இருந்த சில்லறைக் காசுகளை குளத்தில் தூக்கி எறிந்துவிட்டார். அதன் பின் அருணாச்சலக் கோவிலைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தார். தொடக்க காலத்தில் ஊரில் உள்ள வீடுகளின் வாயில் முன் நின்று ஏதும் கேட்காது, அவர்களாகவே அளிக்கும் உணவை தன் இரண்டு கைகள் கொள்ளும் அளவு மட்டும் வாங்கி சாப்பிட்டுப் போய் விடுவார். பின் அதுவும் இல்லாது பாதாள லிங்கத்தின் அருகே பல நாட்கள் கண்களை மூடி அமர்ந்திருந்த நேரத்தில்

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 11

ரமணரின் கீதாசாரம் – 11

ரமணர் காலத்தில் அவரது ஆஸ்ரமத்திற்கு அருகே குடி கொண்டிருந்த பலவித மிருகங்களும் அவரிடம் அன்யோன்யமாகப் பழகி இருக்கின்றன. குரங்குகள், அணில், காக்கை, பாம்பு, மயில், பசு, மான் மற்றும் ஒரு சிறுத்தை கூட அவர் முன்னிலையில் சகஜமாக இருந்திருக்கின்றன என்றால் அந்த சீவ ராசிகளுக்குக் கூட நாம் இப்போது சொன்ன சமநோக்கு இருந்திருக்கின்றன என்றுதானே பொருள்?

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 10

ரமணரின் கீதாசாரம் – 10

ஒன்று கிடைக்க வேண்டும் அல்லது சேர வேண்டும் என்று நினைப்பதும் ஆசையே; ஒன்று கிடைக்க வேண்டாம் என்பதும் ஆசையே. அப்படி அது இருதரப்பட்டது போலவே, சேரவேண்டியது சேராவிட்டாலும், சேர வேண்டாதது சேர்ந்து விட்டாலும் வருவது கோபமே. சலனமற்ற மனமாகிய நீர்பரப்பில் தோன்றும் குமிழிகள் போல இருப்பதால், அவை எழாத இடத்தில் மனமும் அடங்கியே இருக்கும். சாதகனைப் பொறுத்தவரை அவனது ஒவ்வொரு எண்ணமும் அடங்க அடங்க அவனுக்கும் மன அமைதி கிடைக்கும்

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 9

ரமணரின் கீதாசாரம் – 9

சாதாரணமாக அருச்சுனன் போன்ற வீரர்கள் போர்க்களத்தில் புகுந்தால் பகைவர்களை வென்று வெற்றியைக் குவிப்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆனால் இங்கோ அருச்சுனனுக்கு ஏற்பட்ட நிலை அவனது மன சஞ்சலத்தினால் ஏற்பட்டுள்ளது. முன்னால் நிற்பவர்களைப் பகைவர்களாகப் பார்க்காது தன் சுற்றத்தினர்களாகப் பார்த்ததால் வந்த விளைவு

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 8

ரமணரின் கீதாசாரம் – 8

ஒரு முறை ரமணர் இருக்கும் பக்கம் அவருக்கு வெகு அருகில் ஒரு பாம்பு வந்ததாம். அவர் பாம்பைப் பார்த்துக்கொண்டு நிற்க, பாம்பும் அவரைப் பார்த்து படமெடுத்துக் கொண்டு நின்றதாம். வெகு நேரம் சென்ற பின் பாம்பு தன் வழியே போக, அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் ரமணருக்கு அந்த சமயத்தில் என்ன மாதிரி உணர்வு இருந்தது என்று அவரிடம் கேட்டிருக்கிறார்

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 7

ரமணரின் கீதாசாரம் – 7

எப்படி மற்றவர்களைத் தன்னவர்களாகக் காண்பது என்னும் ஐயம் எவருக்குமே வரும். ஏனெனில் என்னதான் மற்றவர்களை நாம் அப்படிப் பார்த்தாலும் அல்லது பார்க்க முயற்சித்தாலும், ஏதோ ஒரு சமயத்திலோ அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காகவோ மற்றவர்கள் நம்மை அப்படிப் பார்ப்பதில்லையே என்று எவருக்குமே கேட்கத் தோன்றும்.

மேலும் »