எனதருமை இந்தியாவின் எருமைகளே [கவிதை]

இன்று உலகில் உன் மாமிச ஏற்றுமதியில் முதலிடம் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ் வல்லரசுக்குத்தானாமே.. உன் உதிரத்தை நீ பாலாகச் சுரந்தும் உன் மீது சுரந்திருக்கவில்லைதான் போதிய கருணை. உன் உடம்பை உயிரோடு தந்தும் உனக்குக் கிடைத்திருக்கவில்லைதான் உரிய மரியாதையும்.. ராமன் பேரில் போர் நடத்தி ராவணனிடம் ராஜ்ஜியத்தை நாங்கள் ஒப்படைத்த பாவம் ஒட்டு மொத்தமும் உன் மீதுதானா இறங்கவேண்டும்?..

View More எனதருமை இந்தியாவின் எருமைகளே [கவிதை]

பசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்

மொகலாயர் காலம் தொட்டு பல நூற்றாண்டுகளாக , பல்வேறு சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகியும் ஹிந்துக்களாகவே நீடிப்பதுதான் மாபெரும் சாதனை. தங்கள் ஸ்வதர்மத்தின் மீதான அவர்களின் பற்று போற்றுதலுக்குரியது. அப்படிப்பட்ட சாதியினர்களில் மிக முக்கியமானவர்கள் அருந்ததியர்கள். வருடம் தோறும் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். எங்கள் ஊர் மாரியம்மன், மற்றும் பகவதியம்மன் திருவிழா நடைபெறும்போது தங்கள் தெருவில் இருந்து ஊர்வலமாக மாவிளக்கு எடுத்துவந்து வழிபடுவார்கள். அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்….

View More பசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2

கொலை செய்த ஆதிக்க சாதியின் குற்ற உணர்ச்சியும் பயமுமே கொலையுண்ட சிறு தெய்வங்களை உருவாக்குகிறது என்பது அடக்கப்பட்ட மக்களின் பதிலடியை மலினப்படுத்திவிடுகிறது. கொன்றவர்களே தெய்வமாகவும் ஆக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களை சாதகமான கோணத்தில் பார்க்கும் அபாயத்தையே முன்னெடுக்கிறது. ஒரு சிறிய கேள்வியை இங்கு கேட்டுக்கொண்டாலே இந்தக் கூற்று எந்த அளவுக்குப் பிழை என்பது விளங்கிவிடும் – இளவரசனை வன்னியர்கள் தெய்வமாக்குவார்களா பறையர்கள் தெய்வமாக்குவார்களா?… தங்களுடைய சமரசமும் போர்க்குணமும் எப்படி விடலைத்தனமானதாக இருக்கிறதோ அதுபோலவேதான் திராவிடப் போர்வாள்களின் இத்தனை கால வீச்சுக்களும் இருந்திருக்கின்றது என்ற கண்டடைதல் உண்மையிலே மிகவும் அற்புதமானது. இதை விரிவாக வளர்த்தெடுத்துச் செல்லும் துணிச்சல் தர்மராஜ் போன்றவர்களுக்கு வாய்க்குமென்றால் தமிழகச் சூழலில் தலித் நலனுக்கு பேருதவியாக அது இருக்கும்….

View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2

இரக்கமற்ற இளஞ்சிவப்பு

வாழ்நாள் முழுவதும் விவசாயிக்காக உழைத்துக் களைத்த மாடுகளே கசாப்புக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இறைச்சி ஏற்றுமதியின் புள்ளிவிவரத்தை கூட்டி இருக்கின்றன. இது ஒருவகையில் சுய அழிவே ஆகும். இந்தியாவின் பெருமிதமிக்க பாரம்பரிய மாட்டு ரகங்கள் தற்போது அருகி வருகின்றன. இளஞ்சிவப்புப் புரட்சி அதன் உச்சத்தை தொடும்போது, நாட்டில் அடுத்து வெட்டுவதற்கு கால்நடைகளே மீதம் இருக்காது. ஏனெனில் இறைச்சிக்காக மாடு வளர்ப்பது நமது நாட்டில் இன்னும் தொழில்ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை… நன்றியற்ற மனிதகளாகிய நாம் சூழ்நிலைக் கைதிகளாகி, அடிமாடுகளை கசாப்புக்கு அனுப்பும் வரை, ஜல்லிக்கட்டு நடத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுவே நீதிபதிகள் மறைமுகமாகக் கூறியுள்ள கருத்து…

View More இரக்கமற்ற இளஞ்சிவப்பு