கடவுள் என்றால் என்ன? – 2

சுவாமி தயானந்த சரஸ்வதியின் விளக்கங்கள் – ஈஸ்வரன் பௌதீக ஒழுங்கு முறைகளிலும், உயிரியல் ஒழுங்கு முறைகளிலும் வியாபித்து இருக்கின்றார். எனவே உயிரியலைப் பற்றித் தெரிந்துகொள்வது ஈஸ்வரனை பற்றி தெரிந்து கொள்வதே ஆகும். அதனால் இதுவும் புனிதமானது… என்னடா ஒரு எலிக்கு வேலை செய்யும் மருந்து நமக்கு அந்த வேலையை செய்வதா ! நாம் எலியைவிட மட்டமா என்பது உண்மை அல்ல. முத்துக்களை தாங்கி பிடிக்க அதன் இடையே கோர்க்கப்பட்ட நூல் இழைபோல் பிராணன் என்பது எல்லா உயிரினிடத்தும் உள்ளே இருந்து உயிருடன் இருக்கும் வரையில் தாங்கிப்பிடிக்கிறது… தர்மம் என்பது மனிதனுடைய தலையைப் போன்றது. அதுவே உங்கள் செய்கைகளை கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்படுத்துதல் இல்லை என்றால் ஒருவருக்கு எது நல்லது, எது கெட்டது என்ற தெரிந்துகொள்ள வாய்பே இல்லை….

View More கடவுள் என்றால் என்ன? – 2

கடவுள் என்றால் என்ன? – 1

சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் விளக்கங்கள் – வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்று சொல்லவில்லை, இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது… ஒரு பௌதீக பேராசிரியர் சக்தி-பொருண்மை என்பதை கூறுகையில் E=mc2 என்கிறார். ஒரு எம்.எஸ்.சி. மாணவன் அவர் வகுப்பில் எழுந்து எனக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருப்பதால் எனக்கு அந்த சமன்பாடு பற்றி புரியாவிட்டாலும் பரவாயில்லை என்பது எப்படி முட்டாள் தனமோ அப்படித்தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பதுவும். இந்த அகிலமே ஈஸ்வரன் தான் என்றால் அது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல; நாம் துருவித் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்… .சிருஷ்டியும், சிருஷ்டிப்பவரும் கடவுள் தான் என்பது வேதம். இங்கே படைப்பும் படைப்போனும் வேறு வேறு இல்லை. எனவே இந்த ஜகத் என்பது ஈஸ்வரனின் விரிவாக்கமே அன்றி உருவாக்கம் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்…..

View More கடவுள் என்றால் என்ன? – 1

ரமணரின் கீதாசாரம் – 5

ஒரு பொருளின் இருப்பையும், இல்லாமையையும் உணர்கிறோமே, அந்த உணர்வு என்பதற்கு ஒரு வடிவமும் இல்லை, அதை நாம் நம் புலன்களாலும் அறிவதில்லை. ஆக புலன்களால் அறியப்படுவது என்பது நம்மைச் சுற்றி பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருட்களுக்கே அன்றி நமக்கோ நமது உணர்வுக்கோ இல்லை என்றே ஆகிறது.

View More ரமணரின் கீதாசாரம் – 5

ரமணரின் கீதாசாரம் – 4

எது என்றும் உள்ளதோ அது நிலைத்து நிற்கும், எதற்கு இருப்பு இல்லையோ அது இல்லாததே. இன்று இருக்கிறது, நாளை இல்லாது போகும் தன்மை கொண்டது அது. ஆக முன்னும் பின்னும் இல்லாது இடையில் மட்டும் இருக்கும் தேகத்தை எப்படி நிலையானது என்று கொள்ள முடியும்?

View More ரமணரின் கீதாசாரம் – 4

நட்சத்திரங்களின் கதை!

ஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் வரலாறை, அது உருவாகும், உள்படல தூசுகளின் (Interstellar Dust ) மூலத்தில் இருந்து, அது தன்னொளியை நிறுத்திகொள்ளும் அந்திம காலம் வரையிலான நிகழ்வுகளை விளக்க முயலுவோம். நாம் இங்கே அந்த படலகதையின் உண்மைகளை சாட்சியங்கள் கொண்டு விளக்க முயலபோவதில்லை. ஆனால் இந்தக்கதையை, இன்று மாபெரும் அறிவியலாளர்கள் புரிந்து கொண்டிருக்கும் இயல்பிலேயே விளக்க தலைப்படுகிறோம்.

View More நட்சத்திரங்களின் கதை!