பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை – அம்பேத்கரின் நூல் தமிழில்

பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது குறித்து இந்து தரப்பு வாதங்கள், இஸ்லாமியத் தரப்பு வாதங்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லிவிட்டு கடைசியில் பிரிவினைதான் ஒரே வழி என்ற முடிவையும் முன்வைப்பவர், அந்தப் பிரிவினையை எப்படி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சொல்லியிருப்பவைதான் மிகவும் முக்கியமானவை. அது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் முன்வைத்திருக்கும் யோசனைகள் எல்லாம் ஒரு மாமேதை, ஒரு தீர்க்கதரிசி சொன்ன ஆலோசனைகளாக இருக்கின்றன. சற்று உணர்ச்சி மேலிடச் சொல்வதென்றால், மாபெரும் ரிஷி கண்டு சொன்ன வேத வாக்கியங்கள் போல் இருக்கின்றன..

View More பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை – அம்பேத்கரின் நூல் தமிழில்

சொல்லுங்கள் மகாத்மாவே

உன் அஹிம்சா மூர்த்தங்களின் அபிஷேகத்துக்கு எம் மக்களின் ரத்தம்தானா கிடைத்தது? உன் அதீத அன்பின் பிரார்த்தனைகளுக்கு எம் மரண ஓலமா மந்திரங்கள்? உன் பெருங் கருணையின் யாகத்துக்கு எம் உடல்களா சமித்துகள்?.. சொல்லுங்கள் மகாத்மாவே நீங்கள் அவதாரமா.. அரிதாரமா?.. காலின் கீழ் போட்டு மிதித்தவனிடம் ஏன் காவு கொடுத்தாய் உன் கிராம ராஜ்ஜியக் கனவுகளை? உன்னை நம்பி உன் பின் திரண்ட ஆவினங்களை எதற்காக ஒரு மாட்டு வியாபாரியிடம் விலை பேசி விற்றாய்?.. கொடு நரகமாக இருந்த சிறைச்சாலைகள் எல்லாம் நீங்கள் போர்க்களம் புகுந்ததுமே பூஞ்சோலைகளாகியது எப்படி? இடுப்பில் விலங்கு பூட்டி இழுக்க வைக்கப்பட்ட கல் செக்குகள் எல்லாம் காணாமல் போனது எப்படி? சிறையில் இருந்தபடியே நீங்கள் சுய சரிதம் எழுதிக் குவிக்க உங்களுக்கு எப்படிக் கிடைத்தன சித்திர எழுதுகோல்கள்..

View More சொல்லுங்கள் மகாத்மாவே

சொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களே

நாதுராம் கோட்÷ ஒரு மத வெறியன் ஒரு முட்டாள் மாபெரும் குற்றவாளி – மனிதருள் மாணிக்கங்களே நீங்கள் சொல்லுங்கள் – நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்அவனிடத்தில் நீங்கள் இருந்திருந்தால் – உங்கள் தாயும் மனைவியும் மகளும் கதறக் கதற உங்கள் கண் முன்னே கற்பழிக்கப்படுகிறார்கள் – முதியவர் தன் ஊன்றுகோலால் இருவரையும் எட்டித் தள்ளிவிட்டு, சற்று தொலையில் ஹூக்கா குடித்துக்கொண்டுகண்களில் மதம் மின்ன சற்றே களைப்புடன் சாய்ந்திருப்பவன் முன் சென்று நிற்கிறார்…

View More சொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களே

குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு

பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது… இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை… பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவை விட வறுமை, வேலைவாய்ப்பின்மை. இஸ்லாமியர்கள் தனியான தேசிய இனம், பிரிவினை வந்தாலே இஸ்லாமிய சொர்க்க பூமி உருவாகி பாலும் தேனும் பெருக்கெடுக்கும் என்று தம்பட்டம் அடித்து லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களைக் கொன்றழித்து உருவான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது…

View More குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு

இந்த வாரம் இந்து உலகம்: ஏப்ரல்-8, 2012

பங்குனி உத்திரம் – திருக்கல்யாண உற்சவம். இளவேனில் காலத் தொடக்கத்தை இறைவனின் திருமண விழாவாகக் கொண்டாடும் தமிழ்மரபு தான் எத்துணை அழகானது!… காலகாலமாக முஸ்லிம்களுக்கு வழங்கப் பட்டு வரும் ஹஜ் யாத்திரை மானியம் ரத்து செய்யப் படலாம் என்கிற வகையில் அரசு யோசித்து வருவதாக மத்திய அமைச்சர்… “மகாத்மாவை இருட்டடித்து மார்க்சைப் பற்றி சொல்லித் தர முடியாது” என்கிறது மேற்கு வங்க மாநில அரசு.. கர்நாடகாவில், இந்து தெய்வங்களை இழிவாகப் பேசி சமூக அமைதியைக் குலைத்ததற்காக 11 கிறிஸ்தவ மிஷநரிகளுக்கு சிறைத் தண்டனை… நெடுஞ்சாலையை அகலப் படுத்துவதற்காக, பனங்காட்டூர் புராதன சிவாலயம் இடிக்கப் படுமா?…

View More இந்த வாரம் இந்து உலகம்: ஏப்ரல்-8, 2012

இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)

திருவிழாவின் போது நடுத்தெருவில் பொங்கல் வைத்ததாக குற்றம் சாட்டப் பட்டு 1000 பெண்களை திருவனந்தபுரம் காவல்துறை கைது செய்து தடை உத்தரவை மீறியதற்காக வழக்கும் பதிவு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது… சிந்த் மாகாணத்தில் சிறுமிகள், திருமணமான பெண்கள் உட்பட 25-30 இந்துப் பெண்கள் ஒவ்வொரு மாதமும் கடத்தப் பட்டு மதமாற்றப் படுகிறார்கள்… மதுரை மீனாட்சி கோயிலைச் சுற்றி சட்டத்தை மீறிக் கட்டப்பட்டுள்ள 770 கட்டடங்கள் குறித்து இன்னும் 60 நாட்களுக்குள் நடவடிக்கை… உபனிஷத ஞானச் செல்வத்தினை வாராவாரம் தொலைக்காட்சித் தொடர் வடிவில் வழங்கும் ஒரு சீரிய முயற்சி “உபநிஷத் கங்கா”…

View More இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)