பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனை

பாம்பன் சுவாமிகள் தனித்தமிழ் ஆதரவாளர் என்பதுபோல ’ஆரியத்துக்கு எதிரான அவரை செரிக்க பார்க்கும் பார்ப்பனீய தந்திரம்’ என்றெல்லாம் ஒரு சிலர் அன்பான தனி செய்திகள் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு: உரையிற் பணித்தவாறு வித்தைப் பதினெட்டிலும் வேதமே சிறப்புடைப் பிரமாணமென்றல் பரதகண்டத்துப் பண்டைநூலறிவுடையார் யாவரும் ஒப்பும் ஒரு முடிபினை ஏன்று கொள்ளும் எம்மாலும்… அன்றைக்கு சைவருள் சிலபலர் வேத நிந்தனை செய்ய முற்பட காரணம் வேதத்துள் பலதெய்வ வழிபாடு உண்டு என்றும் வேத சடங்குகள் குறித்த இழிவான பார்வையும். இதற்கான காரணம் முக்கியமாக அன்றுநிலவிய புரோட்டஸ்டண்ட் மனநிலை. அடிமைநிலையில் தளர்வுற்றிருந்த மக்களின் அறிவு காலனிய பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டதும் ஆச்சரியமல்ல. ஆனால் சுவாமிகள் இவற்றை மறுதலிக்கிறார். கன்மகாண்டத்தை அவர் இழிவாகவும் பார்க்கவில்லை. அதனை செய்வோரை அவர் அறியாமையில் இருப்பதாகவும் சொல்லவில்லை…

View More பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனை

இருளும் வெளியும் – 1

நாம் சூரியவொளி உள்ள காலத்தைப் பகலென்றும், அஃதில்லாத காலத்தை இரவென்றும் கூறுகின்றோம். இப்பகலிரவு எனும் பொழுதுகளைப் பூனையின் கண்களும் அக்கண்களைப் போன்ற பிறகண்களும் ஒருபடித்தாகவே காண்கின்றன. இவ்வகைக்கண்கள் புறவொளியை வேண்டாமலேயே காண்கின்றன. இத்தகைய கண்களையுடையவை இருளென்பதையே அறியா. பின் பகலிரவென்பதை எவ்வாறறியுமெனில், ஞாயிற்றின் வெப்பத்தால் பகலையும், அஃதின்மையால் இரவையும் அறியும் எனலாம்.

View More இருளும் வெளியும் – 1

சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2

“சிவ” எனுஞ் சொல்லைச் சொல்லுகின்றவன் சாதியிற் சண்டாளனாக இருப்பினும் அவனைக் காணின், அவனோடு கலந்து பேசுக, அவனோடு உறைக, அவனோடு உண்ணுக .. அடிமைப் பெண்ணின் மகனாகிய கச்சீவது என்பவன் ஆரிய வேதம் செய்த இருடிகளில் ஒருவனாக இருத்தலினாலும், அகத்தியரின் பத்தினி உலோபாமுத்திரை முதலாய பல பெண்கள் இருக்கு வேதத்தின் சில பாகங்களைச் செய்திருப்பதனாலும் சூத்திரரும் பெண்களும் வேதம் ஓதலாம் எனும் நியாயம் ஏற்படுகின்றது” என்று கூறுகிறார் பாம்பன் சுவாமிகள்.

View More சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2

மகான்கள் வாழ்வில் – 3: பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் அமர்ந்து உண்டனர். மாலையில் அருகிலிருந்த அன்பர் ஒருவரிடம் ‘எத்தனை முறை சமையல் நடந்தது?’ என்று கேட்டார் பாம்பன் சுவாமிகள். அதற்கு அந்த அன்பர், ‘காலையில் சமைத்ததுதான், காய்கறிகள் மட்டுமே தீரத் தீர சமைக்க வேண்டி இருந்தது. உணவு அள்ள அள்ளக் குறையவில்லை’ என்றார்’…

View More மகான்கள் வாழ்வில் – 3: பாம்பன் சுவாமிகள்