Posts Tagged ‘ பாரம்பரியம் ’

அறிவியல், இந்து மத மேன்மை, பொது

இந்திய பாரம்பரிய அறிவியல்

இந்திய பாரம்பரிய அறிவியல்

இந்தியாவில் எல்லாம் இருந்தது என்று சொல்லாதீர்கள், இந்தியாவில் ஒன்றுமே இல்லையென்றும் சொல்லாதீர்கள்.ஒரு நாகரிகம் எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.உண்மையிலேயே இங்கே என்ன இருந்தது என்று தெரிந்துகொண்டு அதை மட்டும் சொல்லுங்கள்!... நமது ரிஷிகள் தெளிவாகவே இவை அனைத்தும் வெறும் செவிவழிச் செய்தியல்ல, உலக நன்மைக்காக அனுபவத்தாலும், பயனை திரும்பத்திரும்ப பரீட்சித்துப் பார்த்தும், முறையாக வளர்த்தெடுக்கப்பட்ட அறிவு என்று தெரிவிக்கிறார்கள்... வெவ்வேறு சொற்களைக் கொண்டு எண்களைக் குறிப்பது சுலபம். கூடுதலாக கவியுணர்வும், அழகியல் உணர்வும் இருக்கும். படித்து மனனம் செய்யவும் ஏதுவாக இருக்கும்...

மேலும் »

சமூகம், பொது, வழிகாட்டிகள்

வேதம் புனிதமடைந்தது!

வேதம் புனிதமடைந்தது!

இந்து ஆன்மீக சாதகர் சிவானந்த சர்மா அவர்கள், கர்நாடகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சிருங்கேரி மடத்தின் ஆசிரமத்தில் இணைந்துள்ளார்.. பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவானந்த சர்மா அவர்கள், திரு. பி.ஆர்.குஞ்சன் மற்றும் திருமதி தங்கம்மா தம்பதியரின் இளைய மகன் ஆவார்...இறுக்கமான பழமைவாத நிலைப்பாட்டைத் துறந்து, உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில்... இதனுடன் நின்று விடாமல், மேன்மேலும் இச்செயல்பாடு வளர வேண்டும்...

மேலும் »

சமூகம், நிகழ்வுகள், நேர்காணல்

நீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்

நீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்

அத்துமீறல்கள் உச்சத்துக்கு போனதும், மாவட்ட நிர்வாகத்தோட கவனத்துக்கு கொண்டு போனோம். அவங்களும் பல கட்டுப்பாடுகள் விதித்தார்கள். ஆனால், கிறிஸ்துவ அமைப்புகள் எதையும் கண்டுகொள்வது இல்லை. அதனால்தான் போராட்டத்தில் இறங்கி விட்டோம்... எங்கள் குலதெய்வங்களின் பெயர்கள். சர்ச்சுகளுக்குள் இந்தப் பெயரைப் போட்டு அங்கு கிறிஸ்தவ வழிபாடு நடத்துகிறார்கள்...

மேலும் »

இசை, கலைகள், மகளிர்

குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

ஸ்ரீ தியாகராஜரின் பெருமையையும், அவருக்கு நடக்கும் ஆராதனை பற்றியும் அறிந்து கொண்ட அளவுக்கு தியாகராஜ பணியில் ஈடுபட்டுத் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இந்த மாதரசி பற்றியும் சிறிது தெரிந்து கொள்ளலாமே!

மேலும் »

வரலாறு

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை

December 15, 2010
-
ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை

வரலாற்று ஆராய்ச்சியில் “கால முன் வரையறை”, “கால பின் வரையறை” என்ற இரண்டு வரையறைகளை நிர்ணயித்தல் அடிப்படையான ஒரு அங்கமாகும்... பௌத்த நூற்களை சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்த யுவாங் சுவாங் தர்மகீர்த்தியின் பெயரையோ அவரது ஏழு முக்கிய ஆக்கங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.. தர்மகீர்த்தியின் காலமாகிய கி.பி. 640 க்குப் பிறகு என்று பார்த்தால், ஆதி சங்கரர் அதிகபட்சம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் வாழ்ந்திருக்க முடியும் என்று விளங்குகிறது.

மேலும் »

அனுபவம், வரலாறு

அகமதாபாதில் ஒரு நாள்

August 19, 2010
-
அகமதாபாதில் ஒரு நாள்

ஒரு கிணறு அதிகபட்சம் எவ்வளவு அழகாகவும்,கலைநயமிக்கதாகவும் இருக்கமுடியும்? இது பற்றிய கற்பனைகளை எல்லாம் விஞ்சுவதாக இருந்தது அது... முற்றிலும் கருங்கல் மற்றும் மஞ்சள் கற்களால் (yellow stone) கட்டப்பட்ட அவ்வளவு பெரிய மசூதிக்குள் யாருமே இல்லை. ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.அப்படியே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து அந்த ஆழ்ந்த அமைதியை... சபர்மதிக்கு ஒருபுறம் சிறைச்சாலையும், மறுபுறம் மயானபூமியும் இருந்தன. ஒரு சத்யாகிரகி தன் வாழ்நாளில் கண்டிப்பாக இந்த இரண்டில் ஏதாவது ஒரு இடத்துக்குத் தான் போயாக வேண்டும் என்று காந்தி கருதினாராம்...

மேலும் »

கலைகள், வரலாறு

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4

அந்த முக, நேத்ர அபிநயங்களில் தான் கதகளி தன் அடையாளத்தைப் பதிப்பித்திருக்கிறது. அது தான் கதகளி. கதகளி மாத்திரமே. கதகளியைத் தவிர வேறு எதாகவும் அது இருக்கமுடியாது. இத்தகைய ஓர் அனுபவம் எனக்கு பின் வருடங்களில், கதா நிகழ்த்திய விழா ஒன்றில்.... ....பத்மா அத்வைதத்திற்கு அளித்த ஒற்றை விரல் நீட்டும் அபிநயத்தைப் பற்றி காலம் சென்ற சுப்புடு, அவருக்கே உரிய பாஷையில், "பத்மா சுப்ரமண்யத்திற்கு அது அத்வைதத்தைக் குறிப்பதாக இருக்கலாம். அதே அபிநயம் நம்மூர் ஒண்ணாங்களாஸ் பையனுக்கு 'சார் ஒண்ணுக்கு!' என்று அனுமதி கேட்பதாக இருக்கும்," என்று எழுதியிருந்தார்.

மேலும் »

கலைகள்

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3

ஒரு ஜப்பானிய கவிதை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் அந்த க்ஷணத்தில் படிக்கப் படிக்க, அதே தன் நடனத்திற்கான பதமாக எடுத்துக்கொண்டு ஒருவர் ஆடுவார். ஆடமுடியும் என்பது யார் சிந்தனையிலும் உதிக்காத ஒன்று. எல்லோருக்கும் எதிர்பாராது கிடைத்த பரிசு போல ஒரு குதூகலம்... இவை எல்லாவற்றையும் மீறி எழும் நாம் உள்ளூர உணரும் மாயம் (mystique) தான் நடனம். அந்த மாயம் (mystique) அடவுகளிலோ, அபிநயங்களிலோ, முத்திரைகளிலோ, ஜதிகளிலோ இல்லை. சங்கீதத்திலும் இல்லை. இவையெல்லாவற்றையும் தரும் நடன கலைஞரிடம் தான் இருக்கிறது என்றால் அது சரிதானா?..

மேலும் »

கலைகள், வரலாறு

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

தேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை...சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை...

மேலும் »

ஆன்மிகம், சமூகம், புத்தக விமர்சனம்

கூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்

கூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்

உலகின் பிற பாகங்களில் வாழும் அலிகளைக் காட்டிலும் இந்தியாவில் வாழும் அலிகள் கௌரவமாக வாழ்வதாகவும், இந்திய புராண இதிகாச மரபுகள் இதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அந்த ஆய்வாளர் கருதுகிறார்... தமிழ்நாட்டு அலிகள் நகர்ப்புற நாகரிகங்களிலும், திராவிடவாதிகளின் பிரச்சாரத்தையே முன்னெடுத்த திரைப்படங்களிலும், இழிவாகவே காட்டப்பட்டனர்... ஏசி அறை செமினார்களால் அல்ல, இத்தகைய பாரம்பரியங்களே இந்த மண்ணின் "விளிம்பு நிலை" மாந்தரை அழகுடனும் சுயமரியாதையுடனும் வாழ வைக்கிறது.

மேலும் »