Posts Tagged ‘ பிரம்மம் ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம்

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது... விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார்.

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், தத்துவம்

அறியும் அறிவே அறிவு – 9

December 18, 2010
-
அறியும் அறிவே அறிவு – 9

பிராணாயாம வழிகளில் செல்லும் போது நமது அறிவு முடிவான “உள்ள நிலை”யைத் தெரியாதிருப்பதோ, அல்லது அதைத் தேர்ந்தெடுத்துச் செல்லாதிருப்பதோ மிக அபாயகரமானது... ரமணர், “கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்” என்பார்... இருக்கும் எல்லாப் பற்றினுள் தேகப் பற்றே ஆழமானதும் விடுதற்கு அரியதுமானதும் ஆகும்.

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், தத்துவம்

அறியும் அறிவே அறிவு – 7

December 4, 2010
-
அறியும் அறிவே அறிவு – 7

தனக்கு வெளியில் உள்ளது அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் வழிகாட்டிகள் ஆகுமே அன்றி, தானே ஆக முடியாது. வேத, உபநிஷத்துகள் அனைத்துமே "அது நீ" போன்ற மகா வாக்கியங்களைக் கூறுகின்றன. அவைகளை, நாம் மறந்து விட்ட நமது இயல்பு நிலையை நமக்கு நினைவூட்டுவது போல எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வாக்கியங்கள் தியானப் பயிற்சிக்கு உதவலாம். அதைக் கேட்டதும் சீடன் தனக்குள்ளே ஆழ்ந்து "இந்த நான் யார்?", "இதன் தன்மை என்ன?" என்று விவேகத்துடன் தன்னுள் மூழ்கி ஆத்ம முத்தை அடைய வேண்டிய முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

மேலும் »

பிறமதங்கள்

“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1

September 14, 2010
-
“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1

(மூலம்: ரிச்சர்ட் ஷேனிக்) இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. இது ஏன் இங்கே 'தமிழ்ஹிந்து'வில் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழலாம்... அதுவும் நிரந்தர உண்மைகளை புனித ஆவியிடமிருந்து பெற்று கிறிஸ்துவ மக்களுக்கு இரண்டாயிரம் வருடங்களாகக் கொடுத்து வந்திருப்பதாகச் சொல்லும் சர்ச்சுக்கு இது தலைகுனிய வைக்கும் மாபெரும் தவறு... மனித இயற்கையைக் கொடுத்து, அவர்களுக்கு வலியும், துயரமும் சாவையும் கொடுத்து, ஒட்டுமொத்தமாக அவர்களது சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் அவர்கள் பொறுப்பேற்க முடியாத ஒரு செயலுக்காக இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திருப்பதுதான் ஒழுக்கம் கெட்ட செயல்...

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம், வைணவம்

அச்சுதனின் அவதாரப் பெருமை

அச்சுதனின் அவதாரப் பெருமை

பிரம்மத்தின் மேன்மையை மனதில் வைத்துக் கொண்டாலொழிய பிரம்மம் எடுக்கும் அவதாரங்களின் மகிமை புரிவது கடினம். நிற்க, இங்கு ஒரு நியாயமான ஐயம் எழக்கூடும். "நமக்கு எட்டாத இந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்வதால் ‘நமக்கு என்ன பயன்? அப்படி ஒரு பொருள் இல்லை' என்று கூறிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே?" என்று கேட்கலாம்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

நாராயணன் என்றாலே, ‘அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், அவனில் எல்லாம் இருக்கின்றன’ என்பது பொருள். அவனைப் பிரம்மம் என்பர். .. நமக்குள் யோகேஸ்வரனாக இருப்பதையும், சக்கரத்தாழ்வானாகக் காப்பதையும், பிரபஞ்சச் சுழற்சியைக் காட்டி நடராஜராக தாண்டவம் ஆடுவதையும் ஒரே உருவில் காட்டப்படும் அந்தச் சக்கரம் சு-தர்சனச் சக்கரம். சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்று பொருள்.

மேலும் »

இந்து மத விளக்கங்கள், சைவம்

அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்

அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்

திருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும்.

மேலும் »

அறிவியல், வழிகாட்டிகள்

புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கிய கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாக பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர் தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார்,. சில அடிகளே உள்ள மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்!

மேலும் »

இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில்

சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்

சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்

சுவாமி சித்பவானந்தர் எழுதுகிறார், “ஹிந்து மதத்தில் யாரையாவது விலகிவைத்தல் (exclusion) என்பது மட்டும் இடம் பெறக்கிடையாது என்று அவர் வைதிக மதத்தைப் பெருமை பாராட்டினார். அத்தகைய வேதாந்தத்தினுள் சிறுமையும் அற்பத்தனமும் எவராவது நுழைத்துவிடக் கிடையாதா? இதை ஆராய்வதற்குஆதாரங்கள் வேண்டிய அளவில் இருக்கின்றன. இங்கு எழுந்துள்ள கேள்வியே அதைச் சுட்டிக்காட்டுகிறது ....”

மேலும் »

இந்து மத விளக்கங்கள், சமூகம், பொது

இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்

November 11, 2009
-
இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்

... இரண்டுமே சாதாரண வரையறைகளுக்குள் அடங்காத விசித்திர பிராணியைக் கற்பனை செய்தன. ஒரு கலாசாரம் அதனை தெய்வீகத் தன்மை கொண்ட அதிசயமாகப் பார்த்தது. மற்றது சாத்தானிய (diabolical) தன்மை கொண்ட அரக்கனாகப் பார்த்தது... விசித்திரங்கள் கொண்ட புராணங்களும், கோயில் சிற்பங்களும் நாம் காணாதவை, நாம் அறியாதவை பிரபஞ்சமெங்கிலும் உண்டு என்பதை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டிருக்கும். முத்திரை குத்தி மனதை மூடிக் கொள்வதைக் காட்டிலும், புரிந்து கொள்ளும் முயற்சியுடன் மனதைத் திறந்து வைத்திருப்பதே சிறந்தது என்று நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்....

மேலும் »