Posts Tagged ‘ பிள்ளையார் ’

இந்து மத விளக்கங்கள், இலக்கியம்

வாழும் பிள்ளை

September 9, 2011
-
வாழும் பிள்ளை

”நான் நாத்திகன். ஆனால் பிள்ளையாரைப் பிடிக்கும். நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமுன் பிள்ளையாரை நினைப்பேன்,”... திருவள்ளுவரும் அம்பேத்கரும் விவேகானந்தரும் வீரசிவாஜியும் இணைந்திருக்கும் பேனர் முதல் பிரபாகரன் டி ஷர்ட் போட்டு காவிக் கொடி பிடிக்கும் தமிழீழ ஆதரவு இளைஞர்வரை... அப்போதுதான் திலகரும், பாரதியும் கண்ட விநாயக தரிசனம் சமூக வெளிப்பாடாக மலரும்.

மேலும் »

இந்து மத விளக்கங்கள், வீடியோ

கணபதி பப்பா மோரியா ! அடுத்த வருசமும் வாரீயா ?

கணபதி பப்பா மோரியா ! அடுத்த வருசமும் வாரீயா ?

கொண்டாடத்தான் வாழ்க்கை ! கொண்டாடச் சொல்லுகிறான் தும்பிக்கை !

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம்

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது... விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை

பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை

சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர் எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு..

மேலும் »

இந்து மத மேன்மை, சமூகம், பொது

அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்

அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்

ஒன்றே பரம்பொருள் எனினும் பரம்பொருள் நாட்டங்களும் தேட்டங்களும் பல திறத்தின. திருவுருவங்களில் பரம்பொருள் ருசி கண்டவர்க்கும் காண முயல்வோர்க்கும் அநுகூலமான, அழகிய திருவடிவம் விநாயகப் பெருமானின் விசித்திர வடிவம். இத்திருவுருவம் ஏழு தேசங்களின் அஞ்சல் பூக்களில் எழிலுடன் இடம் பெற்றுள்ளது. பாரதம், நேபாளம், ஸ்ரீலங்கா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, செக் - என்பன அத்தேசங்கள்.

மேலும் »

இலக்கியம், கதைகள், புத்தக விமர்சனம்

நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்

நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்

ஆனாலும், இன்னமும் வல்லிக்கண்ணனைப் புரிந்து கொண்டதாகச் சொல்லமுடியவில்லை. "கோயில்களை மூடுங்கள்" என்னும் பிரசார சிறுபிரசுரத்தில் காணும் வல்லிக்கண்ணனைத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து மேலே ஈ.வே.ரா.விலிருந்து கருணாநிதி வரை அத்தனை திராவிட இயக்கத் தலைவர்களையும் 1963-லேயே கிண்டலும் கண்டனமுமாக, எங்கே இடம் கிடைக்கும், எழுதவேண்டுமே என்று எழுதிய வல்லிக்கண்ணன்தானா, ஈ.வே.ரா, சின்னக்குத்தூசியிடம் பாராட்டு பெற்ற வல்லிக்கண்ணன் என்பதும் தெரியவில்லை. அந்த வல்லிக்கண்ணன், 40 வருட காலம்...

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், தரவிறக்கம், பொது

சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?

சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?

.. விநாயகர் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தை நோக்கி (சில நேரங்களில் அறியாமையால் நாம் தயங்கி நின்றால் கூட) இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது... சிலை வழிபாடு பற்றிய கேள்விகளை எழுப்பி, அதன் வரலாறு, தத்துவம் மற்றும் அறிவியலை விளக்கும் ஒரு தமிழ் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் - இங்கே ...

மேலும் »

ஆன்மிகம்

வலம்புரி நாயகன்

வலம்புரி நாயகன்

வயிருபெ ருத்தவ லம்புரி நாயகன்
வேண்டுவ ரந்தருவான்
கயிறுபி டித்தக ரங்களி னாற்பகை
கடிந்துவி ரட்டிடுவான்.

ஆரணப் போருளனுக் கன்புடன் மோதகம்
ஆக்கிப் படைப்பவர்க்குப்
பூரண வாழ்வினைப் பூமியில் தந்திடும்
பூரண னவனாவான்.

மேலும் »

ஆன்மிகம், சமூகம்

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்துக்கள் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்; அவர்கள் தாம் குடியமர்ந்த இடங்களில் வழிபாட்டுத்தலங்களையும் அமைத்துள்ளனர். இந்து சமயம் காட்டும் நெறியில் இந்துக்களாகவே வாழ்வதற்கு அவர்கள் உறுதியான அத்திவாரத்தை இட்டுள்ளனர். 15 இந்து கோவில்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன...

மேலும் »

கவிதை

கருணைக் கணபதி

கருணைக் கணபதி

பிரணவ மந்திரத்தின் பொருளே கணபதி பக்தி செய்வோரைப் பரிபாலிப்பான் கருணையின் நாயகன் கவலையைத் தீர்ப்பான் கற்பகத் தருவாய்க் கனகம் பொழிவான்.

மேலும் »