Posts Tagged ‘ பூஜை ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பொது

ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள்... இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும், ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும்... மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும்?

மேலும் »

அனுபவம், வரலாறு

பிரார்த்தனைகளின் சங்கமம்

August 7, 2010
-
பிரார்த்தனைகளின் சங்கமம்

அல்லி தடாகம், அழகான பூச்செடிகள், அருமையாகப் பராமரிக்கப்படும் புல்வெளி என்ற அந்தச் சூழ்நிலையை ரசித்த வண்ணம் வெளியே வரும் நம் கண்ணில் படுவது, உள்ளே வரும்போது பார்க்கத் தவறிய, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பாறையும் அதில் நேர்த்தியாகப் பொருத்தப் பட்டிருக்கும் பட்டயமும்தான்.

மேலும் »

இந்து மத விளக்கங்கள், கலைகள், பண்டிகைகள், பொது

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது... எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்... வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு.

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், வழிகாட்டிகள்

ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி

ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி

நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்..... சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது....

மேலும் »

ஆன்மிகம்

பக்தி ஓர் எளிய அறிமுகம் – 2

பக்தி ஓர் எளிய அறிமுகம் – 2

"துறவு என்பது ஒரு வெளிவேஷமல்ல அது உள்ளத்தில் நிறைவேற வேண்டிய ஒரு வெற்றியாகும். ஆயினும் நாம் உலகத்தில் பார்ப்பதென்ன? மழித்தலும் நீட்டலும் மற்ற வெளிவேஷங்கள் தான். உள்ளத்தில் எரியும் ஆசைகளைத் தணிக்காமல் இந்த வெளிவேஷங்களினால் என்ன பயன்?

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1

பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1

அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, "இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?" என்று பதில் சொன்னார்... பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை.

மேலும் »

பண்டிகைகள்

பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா

பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா

.. சென்னை பிருங்கி மலையில் தீப வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு, பின்னர் தீபங்கள் ஏந்தியபடியே மலையின் மறுபக்கத்தில் உள்ள மாசாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, அங்கே அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் அப்பகுதியில் உள்ள மக்கள். அமைதியான இந்த வழிபாட்டிற்கு காவல் துறையினரும் பாதுகாப்பு தருகின்றனர். பிருங்கி மலையில் ஒரு சித்தரின் சமாதி இருப்பதாகவும் அறியப்படுகிறது... புனித தோமையர் மலையின் சர்ச்சிற்குப் பொறுப்பேற்றுள்ள பாதிரியார் தற்போது இந்த மலையிலும் “பௌர்ணமி கிரிவலம்” ஏற்பாடு செய்ய முயலுவதாக செய்திகள் வருகின்றன...

மேலும் »

ஆன்மிகம், பொது

காசியில் ஒரு நாள்

November 25, 2009
-
காசியில் ஒரு நாள்

பரந்து விரிந்திருக்கும் அந்த கங்கைக் கடலின் சீறி வரும் புது வெள்ளத்தில் சீரான வேகத்தில் படகு சென்று நிற்கும் இடம் ஒரு மணல் திட்டு. ஒரு கரையில் ஸ்நான கட்டங்களும் மறுகரையில் பழைய பனாரஸ் நகருமிருக்கும் கங்கை நதியின் நடுவே, இது போல பல திட்டுக்கள். சொன்னது போலவே நதி சுத்தமாக ஓடுகிறது... ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே பாடியவரையும் தபேலா வாசித்த கலைஞரையும் பாராட்டக் கை நீட்டும் நாம், அவர்கள் முகத்தைப் பார்த்ததும் சற்று அதிர்ந்து போகிறோம்.

மேலும் »

சமூகம், வழிகாட்டிகள்

வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்

வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்

"வள்ளலாரின் அடியார்கள்" என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிற பண்பாடில்லாத சிலருடைய துன்ப அலைகளில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டுதான் திருப்பணி செய்தேன்... எனக்கு பதிவு தபால் வந்திருந்தது. மேடையிலமர்ந்து பிரித்து படித்தேன். கும்பாபிஷேகம் செய்யும் குற்றத்துக்கு என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அதில் கண்டிருந்தது ....

மேலும் »

இலக்கியம், கேள்வி-பதில், சமூகம், நிகழ்வுகள், பொது, வழிகாட்டிகள்

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

July 13, 2009
-
சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம்தான் பிரமாணம்’ என்கிறார்... ”தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெயகாந்தன்.

மேலும் »