Payday loans Cialis online
payday loans Car insurance

Posts Tagged ‘ பெண்ணியம் ’

சமூகம், நிகழ்வுகள், மகளிர்

எங்கே பெண்ணுரிமைகள்?: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து

March 9, 2010
-
எங்கே பெண்ணுரிமைகள்?: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து

இந்த நூறு ஆண்டுகளில் தங்களது தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலமாக பெண்ணுரிமை இயக்கங்கள் உலகெங்கிலும், குறிப்பாக மேற்குலகிலும் பெற்றிருக்கும் வெற்றிகள் மகத்தானவை... ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பகிர்தல் உணர்வும், பரஸ்பர மதிப்பும் கூடுவது குடும்பங்களுக்கும், அதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமே பெரிய நன்மை செய்யும்... மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் உருவாக்கிய தினம் அல்ல மகளிர் தினம். உண்மையான சுதந்திர தாகத்தின், மானுட சமத்துவத்தின் குரலாக எழுந்த தினம் அது. [மேலும்..»]

ஆன்மிகம், புத்தக விமர்சனம்

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)

உறவுமுறைகளின் கௌரவம் இப்படித்தான் பேணப்பட வேண்டும் என்பதில் நாம் மேலை நாடுகளைவிட கறாரான சமுதாயமே. என்றும் புராண உருவகங்களையும் நடைமுறை வாழ்க்கையையும் போட்டு ஒரு நாளும் யாரும் குழப்பிக் கொள்வதில்லை... ‘நம்மவர்’ - ‘மற்றவர்’ என்ற சமன்பாட்டின் தலையில் ஏற்றப்பட்டு ’நாம்’ அல்லாத ’மற்றவர்கள்’ சாத்தானைப்போலவே கருதப் பட வேண்டியவர்கள் என்ற மனப்போக்கு அடைந்த விபரீதம். [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், சமூகம், பொது

ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?

ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?

என்னதான் மாபெரும் கருணை பொங்கும் இதயத்திலிருந்து மானுடத்துயரனைத்தையும் நீக்க உருவெடுத்ததாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், ஒற்றைப்பார்வைகளும், ஒற்றை அதிகார பீடங்களும் அழிவைத்தான் ஏற்படுத்தும் ...ஹிந்து தர்மத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள் உறைநிலை கொண்டவை அல்ல. அவை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவை. காலந்தோறும் பரிணாம மாற்றம் அடைபவை. மானுட நலத்தையே தம் இலட்சியமாகக் கொண்டவை. அனைத்துயிரும் அனைத்துலகும் இன்புற்றிருப்பதையே அவை நோக்குகின்றன. அவற்றின் நோக்கம் சனாதனமானது, அழிவற்றது. அதற்கான வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், இலக்கியம்

ஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!

ஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!

காம உணர்ச்சியிலிருந்து ஆன்மிக நிலைக்கு என்னும் நிலையிலிருந்து திருமண அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிதல் என்பதாக அந்த உறவினை மாற்றி அமைத்தது. நவீன காலத்துக்கு முந்தைய திருமண அமைப்பில் பெண்ணின் கீழ்படிதல் நிலையே ஏசுவுக்கும்-சபைக்குமான உறவாகவும் அதன் அடுத்த கீழ்படிதலாக சபைத்தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்குமாக அது மாற்றப்பட்டது. இந்த மேற்கத்திய உருமாற்றம் பாரத பண்பாட்டில் ஏற்படவே இல்லை. [மேலும்..»]

மகளிர்

பெரிது பெரிது பெண்மையின் சக்தி!

பெரிது பெரிது பெண்மையின் சக்தி!

பெண் என்பவள் ஆதாரசக்தி, வாழ்வின் ஆதாரம். பெண் இல்லை எனில் சிருஷ்டியே இல்லை. அவளை முன்னிறுத்தியே சிருஷ்டி நடந்து வருகின்றது... குடும்பத்தைத் தாங்கும் ஒரு பெண், தன் தனி ஒரு குடும்பத்தை மட்டுமின்றி இந்த சமூகத்துக்கேப் பெரிய உதவி புரிகின்றாள். நல்மக்களை வளர்ப்பதன் மூலம் நாட்டையே உயர்த்துகின்றாள். [மேலும்..»]

மகளிர்

பெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்

பெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்

பாண்டிய நாட்டின் அரசியாக ஆட்சி புரிந்த தேவி மீனாட்சி முதல் மதுரையை ஆண்ட பெண்ணரசிகள் பலர் இருந்திருக்கின்றனர். இந்துமதத்தில், கலாசாரத்தில் பெண்கள் ஒருநாளும் சிறுமை அடைந்திருக்கவில்லை. பெருமையாகவே இருந்திருக்கின்றார்கள்... [மேலும்..»]

மகளிர்

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்!

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்!

பெண்கள் இன்றைய காலகட்டத்தில் போகப் பொருளாகவும், பொழுதுபோக்குச் சாதனமாகவும், விளம்பரங்களுக்குத் தேவைப்படும் மாதிரிகளாகவுமே நினைக்கப் படுகின்றனர். சரித்திர காலங்களில் பார்த்தோமானால், நிறையப் பெண்கள் தைரியம், வீரம், சொல்லாற்றல் நிரம்பியே இருந்து வந்திருக்கின்றனர்... [மேலும்..»]