அடிபணிதல்

அடிபணிதல் (Submission) என்ற திரைப்படம் பற்றிய பதிவு இது. டச்சுத் தொலைக் காட்சியில் வெளியிடப் பட்டு பலராலும் பாராட்டப்பட்டு, அதே சமயம் இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பும் இத்திரைப்படத்திற்கு உண்டானது. அயான் ஹிர்ஸி அலியும், இயக்குனர் தியோடர் வான்-கோவும் இணைந்து எடுத்த படம். வான்-கோ 2004-ஆம் வருடம் நவம்பர் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆம்ஸ்டர்டாம் நகரத் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இஸ்லாமியத் தீவிரவாதியால் ஏழு முறை சுடப்பட்டு, பின் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொலையாளியால் வான்-கோவின் உடலில் சொருகப்பட்ட கத்தியில், அயான் ஹிர்ஸி அலியையும் கொல்லப்போவதாக விட்டுச் சென்ற எச்சரிக்கைக் குறிப்பினை அடுத்து ஹிர்ஸி அலி நெதர்லாந்தை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று…. அயான் ஹிர்ஸி அலி கூறுகிறார் – “அடிபணிதலின்” மையக்கருத்து, ஒரு தனி மனிதனுக்கும் கடவுளுக்குமான தொடர்பு பற்றிய ஒன்று. எவர் மனதையும் புண்படுத்தவோ அல்லது கோபம் கொள்ளச் செய்வதற்காகவோ இந்தத் திரைப்படத்தை நான் எழுதவில்லை. ஒரு முஸ்லிம் பெண்ணானவள், குரானில் கூறப்பட்டுள்ள வாசகங்களைப் பின்பற்றி, எதனைப் பற்றியும் கேள்வி கேட்காமல் எவ்வாறு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்து அடிபணிகிறாள் என்பதனைக் காட்டுவதற்காக மட்டுமே இத்திரைப்படம் எடுக்கப்பட்டது….

View More அடிபணிதல்