பாரதி(ய மொழிகள்) தினம்

தன் தாய்மொழியான தமிழின் இனிமையை “யாமறிந்த மொழிகளிலே” என்று பாடி வெளிப்படுத்திய பாரதிக்கு சம்ஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி, மராட்டி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி போன்ற அன்னிய மொழிகளும் நன்கு தெரியும். ஆங்கிலத்தையும் அவர் வெறுத்தவரில்லை. .. நாட்டின் பிற மொழிகளை மதிப்பதோடு நேசிக்கும் அவரது உன்னத குணம்தான், அவரது பிறந்த தினத்தை (டிசம்பர்-11) பாரதிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவிக்கக் காரணமாய் அமைந்துள்ளது என்று கருதலாம். இதனை மேலும் அலசுவோம்..

View More பாரதி(ய மொழிகள்) தினம்

பாரதியாரும் காசியும்

பாரதி கல்லூரி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கங்கா நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு கவிதைகள் புனைவதிலும், இயற்கையழகை அனுபவிப்பதிலும், நண்டர்களுடன் படகில் உல்லாச யாத்திரை போவதிலுமாகப் பொழுதைக் கழிப்பார். அந்தணருக்கேற்ற ஆசாரமின்றி எல்லா ஜாதியாருடனும் கைகோர்த்துக் கொண்டு உலாவுவதும், நியம நிஷ்டையில்லாது எப்போதும் கோட்டும் சட்டையும் தலையில் முண்டாசும் காலில் பூட்ஸும் அணிந்திருப்பதும்… பாரதியின் காசி வாசம் மொத்தம் ஐந்தே ஆண்டுகள் தான். காசி வாசத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், திறப்புகளும், தரிசனங்களுமே எட்டையபுரத்தில் ‘இளசைச் சுப்பிரமணியன்’ என்று சம்பிரதாயமாக தமிழ்ப் பண்டித நடையில் கவிதை எழுதிக் கொண்டிருந்த சுப்பையாவை, மகத்தான இலட்சியங்களும், தேசிய உணர்வும், சுதந்திர சிந்தனைகளும் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற நவீனத் தமிழ்க் கவிஞராகவும், எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும் மாற்றின…

View More பாரதியாரும் காசியும்

பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?

புராணங்களும் சாத்திரங்களும் பொய் என்று பாரதியார் கூறுவதாக ஒரு இந்து விரோத பதிவில் மேற்கோள் காட்டியிருந்ததை நண்பர் கவனப்படுத்தினார்.. மகாபாரதம் பொய் என்று பாரதி கருதியிருந்தால், ஏன் பாஞ்சாலி சபதம் எழுத வேண்டும்? பீமனையும் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாக அவர் காண்கிறார்.. நிவ்ருத்தி எனப்படும் யோக, ஆன்மீக உயர்நிலையில் நின்று பாரதி அந்த வரிகளை எழுதுகிறார்..

View More பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் மகாகவி பாரதி

முழுமையான யாப்பு இலக்கணத்துடன் பொருந்திய கவிதைகள். அவை திரைப்பட இசையமைப்பாளர்கள் விரும்பும் தாளகதி, சந்தங்களுடன் இருப்பதும், உணர்ச்சி மிக்க சொற்களின் லயம் மிகுந்திருப்பதும் தான், அவரது கவிதைகளை நாடச் செய்திருக்கின்றன. திரைப்படத்தின் காட்சிகளுக்குத் தேவையான நவரசங்களை வெளிப்படுத்தும் பாடல் வரிகள் பாரதியின் கவிதைகளில் செறிந்திருப்பதால் தான் அவை, திரைப்படங்களிலும் வெற்றிகரமாக பவனி வருகின்றன.

View More தமிழ்த் திரைப்படப் பாடல்களில் மகாகவி பாரதி

சூரிய தரிசனம்: பாரதியார்

நிலவின் முகத்தைக் காணவேண்டும் என்று தான் மானுட மனங்கள் பொதுவாக ஆசைப்படுகின்றன. “நிலவே முகம் காட்டு” என்கிறார் ஒருவர். “நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமுகத்தை” என்கிறார் இன்னொருவர். மெல்லிதயங்களும் நெகிழும் உள்ளங்களும் எழுப்பும் குரல்கள் இவை. ஆனால், உன் முகத்தைக் காட்டமாட்டாயா, நான் பார்க்கவேண்டும் என்று சூரியனை நோக்கி இறைஞ்சும் கவிமனம் இதனின்றும் முற்றிலும் வேறுபட்டது. பாரதியார் தனது பாடலொன்றில் அவ்வாறு வேண்டுகிறார். உண்மையில் சூரியனை முகம் காட்ட இறைஞ்சும் அந்தக் கம்பீரமான குரல் மிகவும் புராதனமானது. வேத ரிஷியின் குரல் அது…

View More சூரிய தரிசனம்: பாரதியார்

பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்

சோம்பலும், பயமும், தூக்கமும் தாமச குணத்தினின்று பிறப்பவை. பல மனிதர்களுக்கும் வாழ்க்கையில் பல சமயங்களில் தமோகுணத்தின் ஆளுகைக்குக் கீழ் சென்று மீளமுடியாதபடி அதில் உழலும் நிலை ஏற்படுகிறது. அதை உடைத்துக் கொண்டு வெளிவருவதற்கான உறுதியும் அருளும் தெய்வம் தரவேண்டும் என்று இங்கே வேண்டுகிறார்… சத்வ குணத்தால் தூண்டப்பட்டு நிகழும் செயல்கள் அனைத்தும் சாதாரணத் தளத்திலிருந்து உயர்ந்து யக்ஞமாக, வேள்வியாக, தெய்வத்தின் செய்கைகளாக, கர்மயோகமாக ஆகிவிடுகின்றன… மகாமாயையாகிய பராசக்தி. இவ்வுலகனைத்தும் அவள் விளையாட்டன்றி வேறில்லை. அவளே இப்பாடலில் பாரதி போற்றும் கண்ணம்மா…

View More பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்

பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்

பாரதியாரின் சீடரும் அவரால் பூணூல் அணிவிக்கப் பட்டு காயத்ரி மந்திர உபதேசம் செய்யப் பட்டவருமான கனகலிங்கம் (இவர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்), பாரதியாரின் மரணத்துக்குப் பின்னர் கிறுத்துவராக மதம் மாறினார் என்று ஒரு ஆதாரமற்ற பொய் உலவி வருகிறது. உண்மை என்ன? ரா கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர் பாரதியார்’ புத்தகம் வெளிவந்தது 1947ல். பாரதி இறந்தது 1921ல். அதாவது பாரதி இறந்து 26 வருடங்கள் கழித்து ரா கனகலிங்கம் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் ஒரு இடத்திலும் ‘நான் ஒரு கிறித்தவனாக மாறிவிட்டேன்’ என்றோ அல்லது அப்படியொரு தகவலை ஊகிக்கும் வகையிலோ கனகலிங்கம் ஒரே ஒரு வரியும் எழுதவில்லை. எழுதியிருக்கிறார் என்றால் எடுத்துக்காட்டவும். மாறாக, தனக்கு உபதேசிக்கப்பட்ட காயத்ரி மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்…

View More பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்

பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்

புற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது. வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது… கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும்… எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு சமயம் சக்தி சக்தீ என்கிறீர். இப்பொழுது கண்ணன் என்கிறீர். ஏதாவது ஒன்றை மாற்றாமல் உறுதியாகச் சொல்லுமே…

View More பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்

பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

சுவாமி விவேகானந்தரின் அழைப்பை ஏற்று, அயர்லாந்திலிருந்து பாரதம் வந்து, இந்நாட்டின் தவப்புதல்வியாகவே வாழ்ந்தவர் சகோதரி நிவேதிதை. அவரது 150-வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இந்த ஆண்டு  நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, தமிழகத்தில் ரத யாத்திரை நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.

கோவையில் ஜனவரி 22,2018 (இன்று) தொடங்கி, சென்னையில் பிப்ரவரி 22,2018 முடிவுபெறும் இந்த மாபெரும் ரத யாத்திரை,  30 நாட்களுக்கு 27 மாவட்டங்களின் வழியாக சுமார் 3,000 கி.மீ. தொலைவைக் கடந்து 2 லட்சம் மாணவிகளிடம் சகோதரி நிவேதிதை ஆற்றிய பணிகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரத யாத்திரையை ஒட்டி, சகோதரி நிவேதிதை குறித்த கட்டுரை இங்கு வெளியாகிறது…

View More பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும்.

View More மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்