Posts Tagged ‘ மலர்மன்னன் ’

இலக்கியம், கலைகள், வழிகாட்டிகள்

நமக்கு எதற்கு வெ.சா.?

நமக்கு எதற்கு வெ.சா.?

வெசாவின் கட்டுரைகளில் நம் தலையில் அடித்து விழிப்புறச் செய்வது ‘பான்:ஸாய் மனிதன்’; 1964 இல் எழுத்து இதழில் வெளியானது. இறுதியாக இப்படி முடியும்: “ஒரு அடிப்படையான சாதாரண கேள்வி கேட்க எனக்கு உரிமை அளிப்பீர்களா? எருமைக்கு எதற்கு நீச்சுக்குளம்?” அந்தக் கட்டுரைக்குள் இருக்கும் கோபம் ஆதங்கம் பரவலாக தமிழனது மூளையில் இன்னும் இயங்கும் பாகங்களை சென்று சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டு ரசனை கொஞ்சமாவது ஏற்றமடைந்திருக்கும்.

மேலும் »

அரசியல், புத்தக விமர்சனம்

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்

ஈ.வே.ரா என்றோ, கருணாநிதி என்றோ அவரவர் பெயரிலேயே குறிப்பிடுவது பண்பாடற்ற செயலாக தமிழர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பட்டங்களைத் தாண்டி மனிதர் அறியப்படுவது தடைப்பட்டுள்ள சூழலில் சரித்திரமும் உண்மையும் செலாவணியற்றுப் போயுள்ளன. யாரும் எப்படி அறியப்படவேண்டும் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது

மேலும் »

சமூகம்

கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

கதாநாயகன் பிர்ஸா முண்டா தன்னை 'மலையிலிருந்து வந்தவன்' என்று சொல்லிக் கொள்கிறான். உலகத்தில் உள்ளவற்றில் சிறந்தவை எல்லாமே மலையிலிருந்துதான் வரும்... கடற்கரையில் காலார நடந்து பின் வீடுவந்து கால் அலம்பிய பின்னும் விரலிடுக்கில் சிக்கி உறுத்தும் மணல்போல, கதாபாத்திரங்கள் படித்து முடித்த பின்னும், நம்மனதில் புகுந்து உறுத்துகின்றன.

மேலும் »

இலக்கியம்

கலை, இலக்கியம்: மரபு மீறலும் மரபு சிதைத்தலும

திண்ணை (டிசம்பர்-27, 2007) இதழில் முதுபெரும் எழுத்தாளர் மலர்மன்னன் அவர்கள் எழுதிய அருமையான கட்டுரையை இங்கே மீள்பதிப்பிக்கிறேன். மரபு மீறல் என்பது எப்படி செய்யப்பட வேண்டும், எப்படிச் செய்யப் படக்கூடாது என்பதை தனது ஆழ்ந்த கலை, இலக்கிய அனுபவங்களின் அடிப்படையில் மிக அழகாகக் கூறியிருக்கிறார். இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும் மலர் மன்னன் மிகச் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது சொன்னேன்: மரபை மீறலாம்; மரபைச் சிதைக்கத்தான் கூடாது. இதை அங்கு லேசாகக் கோடிட்டுத்தான் கூற முடிந்தது. என்னதான் இருப்பினும் இடம் பொருள் ஏவல் என்றெல்லாம் பார்க்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் ஒன்று...

மேலும் »