Posts Tagged ‘ மலேசியா ’

அறிவிப்புகள்

மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்

மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்

இந்து தர்மத்தின் அடிப்படைகளையும் சைவசித்தாந்த நெறிமுறைகளையும் குறித்த ஆரம்ப நிலை வகுப்புகள் மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறுகின்றன. அறிமுக வகுப்பு 30-நவம்பர்-2011 மாலை 7:30 முதல் 9 வரை. சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞர் சிவ.பரமசிவம் அவர்கள் இவற்றை நடத்துகிறார். வகுப்புகள் தமிழிலும், ஆங்கிலத்திலுமாகக் கலந்து நடத்தப் படும். கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும். No. 9-2-S, Tingkat 1, Kawasan Perniagaan Nilam, 43000 Kajang, Selangor. (Next to Sri Murugan Centre) FOR MORE INFO, PLEASE CALL: 012-3915643, 016-2230905, 012-2325254 மேலும் விவரங்கள் கீழே (படத்தின் மேல் க்ளிக்...

மேலும் »

வரலாறு

இராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்

August 25, 2010
-
இராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்

ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன்தான் அவர்களது கடல்வழிப் பயணம் ஆரம்பமாகும். தை மாத ஆரம்பத்தில் வடக்கிலிருந்து வங்காள விரிகுடாவில் கடல் நீரில் தெற்கு நோக்கி ஓட்டம் இருக்கும் அதைப் பயன்படுத்திக் கொண்டு,... நாடு கடந்து அச்சமின்றி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நம் வணிகர்கள் தமது வணிகத்தை நிலைநிறுத்தினது மட்டுமன்றி, அரசு மாறினாலும் அதனால் அவர்களுக்கு ஒருவிதக் குறையுமின்றி வணிகம் நடத்துவதற்கு உண்டான உபாயங்களையும் செய்து கொடுத்த மன்னன் இராஜராஜன்...

மேலும் »

சமூகம், பொது, மகளிர்

இரு பெண்களின் கதை

இரு பெண்களின் கதை

ஜூலியா ராபர்ட்ஸ்களின் பேட்டிகளில் போகிறபோக்கில் அவர்கள் காட்டும் ஒரு வரி அங்கீகாரங்களால் அல்ல; ஊடக ஒளிவட்டங்கள் விழாத பல இலட்சம் பங்காரம்மாக்கள் அறத்துக்காகப் படும் வேதனைகளாலும் கண்ணீர் வெள்ளங்களாலும் தான் ஹிந்து தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.... படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும்.

மேலும் »

சமூகம், புத்தக விமர்சனம்

தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி

தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி

வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?... இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது....

மேலும் »

சமூகம், மகளிர்

அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி

அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி

இது வெறும் செய்தியல்ல. ஒரு அரசின் மதவெறிக்கு எதிராக போராடும் ஒரு இளம் பெண்ணின் உண்மைக் கதை... ங்காரம்மா இஸ்லாமியர் என ஷரியா நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும் பட்சத்தில் அவர் ஹிந்துவானது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரித்து இஸ்லாமிய சீர்திருத்த நிலையத்தில் அடைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுவார். பலவித மன-சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவார்.

மேலும் »

அரசியல், சமூகம், பொது

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

September 12, 2009
-
கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் மதவெறி கோஷங்களை எழுப்ப தலைவரான ஹாஜி சொன்னார் - “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்” ... தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர்? இந்துக்கள் படும் காயங்கள் பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன. ஏன்? (மூலம்: தருண் விஜய், தமிழில்: ஜடாயு)...

மேலும் »

நிகழ்வுகள்

ஸ்ரீலங்காவில் படுகொலை செய்யப்படும் தமிழ் இந்துக்கள்

ஸ்ரீலங்காவில் படுகொலை செய்யப்படும் தமிழ் இந்துக்கள்

இலங்கைவாழ் தமிழனின் கதை மிகத் துயரமானது. நெடுங்காலமாக நடந்து வருவது. கண்ணீர்த்துளி வடிவிலிருக்கும் இலங்கை அங்குள்ள தமிழர்களின் குருதித் துளியாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆம், அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது இனப்படுகொலை!

மேலும் »

ராமாயணம்

ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!

ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!

மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் "இஸ்லாமுக்கு எதிரானவை" என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன...

மேலும் »