வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்

1925ல் வீர சாவர்க்கருக்கும் கிலாஃபத் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஷவுக்கத் அலிக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் முக்கியமானது. இந்த 2021ம் ஆண்டில் தாலிபானின் எழுச்சியை இந்திய முஸ்லிம்களில் கணிசமானவர்கள் வரவேற்றுள்ளனர் என்ற செய்தியின் பின்னணியில் வாசித்தால் இது நமக்குப் பல விஷயங்களை உணர்த்துகிறது. உரையாடல் நடந்தபடியே வருமாறு… “நேற்று வரை எல்லோரும் நல்லவரே என்று எங்கள் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தோம். உலகின் வேறு பகுதியிலிருந்து வந்த திருடர்கள் எங்கள் சொத்தைக் கொள்ளையடித்து விட்டனர். இன்று புத்தி வந்து, சற்றே ஜாக்கிரதையாக வீட்டைப் பூட்டுகிறோம். சில கொள்ளையர்கள் வந்து, “நாங்கள் பல காலமாகக் கொள்ளையடித்து வந்துள்ளோம். நீங்கள் வீட்டைப் பூட்டுவது அநியாயம். இது நம் உறவை பாதிக்கும்” என்றால் நாங்கள் என்ன சொல்வது? அப்படிப்பட்ட அபாயகராமான உறவை முறிக்க வேண்டிய நேரம் இது… ”

View More வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்

வன்முறையே வரலாறாய்… – 8

பாபா சாகேப் அம்பேத்கர் எழுதுகிறார் – “மாப்ளாக்களின் கையில் சிக்கிய இந்துக்கள் கொடூரமான முடிவைச் சந்தித்தார்கள். படுகொலைகள், கட்டாய மதமாற்றங்கள், இந்துக் கோவில்களின் மீதான தாக்குதல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவினைச் சிதைத்தல், கொள்ளை, தீ வைத்தல், பொது இடங்களை இடித்துத் தகர்த்தல்…. என வன் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். சுருங்கச் சொன்னால் மனிதர்கள் அறிந்த எல்லாவிதமான காட்டுமிராண்டித்தனமான செயல்களும் இந்துக்களுக்கு முஸ்லிம் மாப்ளாக்களால் செய்யப்பட்டது. இன்றுவரை அங்கு எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர்கள் காயம் பட்டார்கள் என்பதே அறியப்படவில்லை”… 1921 மாப்ளா கலவரம் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரானதாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் வாழும் பகுதியில் பிரிட்டிஷ்காரர்கள் எவரும் இல்லாததால், காலம் காலமாக தங்களுடன் வாழ்ந்த தங்களின் அண்டை வீட்டார்களான அப்பாவி இந்துக்களின் மீது மாப்ளா முஸ்லிம்களின் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது…

View More வன்முறையே வரலாறாய்… – 8

[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்

‘பாரத்’ என்ற சொல்லில் அம்பேத்கருக்கு அலாதியான பிரியமும் அன்பும் இருந்தது. அதனால்தான் தன்னுடைய வார இதழுக்கு ‘பகிஷ்கிரித் பாரத்’ என்று பெயரிட்டார்… தலித்துகள் தேசியக் கண்ணோட்ட இயல்பை வளர்த்துக்கொண்டு இதர சமூகத்தினரின் மற்றும் கட்சியினரின் பரிவைச் சம்பாதிக்க வேண்டும்…இஸ்லாமின் இரண்டாவது குறைபாடு அது ஸ்தல தன்னாட்சி முறையிலிருந்து மாறுபட்ட ஒரு சமூக தன்னாட்சி முறையாக அமைந்திருப்பதாகும். ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டின் மீதன்றி, தான் கடைப்பிடிக்கும் சமயத்தின்மீது விசுவாசம் கொண்டிருக்கிறான்…. முஸ்லீம் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்: உண்மையில், தீவிர சமயவெறி கொண்ட முஸ்லீம்கள் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் முஸ்லீம் சமய உட்பிரிவினர் பாதுகாப்பாக இருக்க முடியாது….

View More [பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்