Posts Tagged ‘ மாமிச உணவு ’

உடல்நலம், உணவு

பன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்

பன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்

பொதுவாக 60 காய்களைத் தரும் தென்னைகளில் கூட பிறகு 100க்கும் மேற்பட்ட தேங்காய்கள் காய்க்க ஆரம்பித்தன. ஏலக்காய் தோட்டங்களிலும் இதே முறையைப் பின்பற்ற ஆரம்பித்ததும் அங்கும் பசுமை தலைகாட்ட ஆரம்பித்தது. தோட்டங்கள், விவசாயப் பண்ணைகளின் ஓர் இன்றியமையாத அங்கமாக பசுப் பண்ணைகள், பன்றிப் பண்ணைகளை வைப்பதும்... ...கறி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்லோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்லோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்கு..

மேலும் »

உடல்நலம், உணவு, கேள்வி-பதில், பொது

ஹலால் கறியா ஜட்கா கறியா?

ஹலால் கறியா ஜட்கா கறியா?

ஆடுகளும் கோழிகளும் ஒரே வீச்சில் கழுத்து துண்டாக்கப்பட்டு கொல்லப்படுவதை ஜட்கா எனலாம். ஆனால், இஸ்லாமிய ஹலால் முறையில் ஆடுகளின் கழுத்து ஒரு கீறல் கீறப்பட்டு மெல்ல மெல்ல துடிதுடித்து சாகிறது...ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படும்போதும் அதிலிருந்து ரத்தம் வெளியேறும் போதும் அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து ஓரளவு வெளியேறினாலும், பல விஷங்கள் அதன் கறிப்பகுதிகளில் தங்குகின்றன.

மேலும் »

சமூகம், பொருளாதாரம்

திருவள்ளுவர் கண்டுபிடித்த துப்பாக்கி!

திருவள்ளுவர் கண்டுபிடித்த துப்பாக்கி!

பிட்ஸாவும் பர்கரும் உண்டு மேற்கத்தியமாகி நம் உயிர் வாழ்தலின் அடிப்படையான பண்பாட்டு மரத்தையே வெட்டி வீழ்த்தி நம்மை நாமே "நீருக்கான உலகப் போரில்" அழிக்கும் மேற்கத்திய நாகரிக தலைமுறையாக நாம் முழுமையாக மாறுவதற்கு முன்னால் "உணவாகும் நீரை" கட்டிக்காத்த பண்பாட்டின் சுவடுகளையும் சிறிது பின்நோக்ககிப் பார்ப்பது நல்லது... நம் பண்பாட்டின் ஆகப்பழமையான பொறியியல் கலையின்-அறிவியலின் அடிப்படை அமைப்புகளில் ஒன்றாக குளங்கள் மற்றும் ஏரிகளின் வடிவமைப்பையே குறிப்பிடலாம்.

மேலும் »

அரசியல், அறிவியல், பொருளாதாரம்

பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2

பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2

நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்தைத் தொடங்கினால், நீங்கள் இதுவரை சந்தித்துள்ள ஏழைகளில் பரம ஏழையாக உள்ளவருக்கு அதனால் பயன்கிடைக்குமா? என்று சிந்தித்து பார்த்து காரியத்தை தொடர்ந்து நிறைவேற்றுங்கள் என்பதுதான் மகாத்மா சொன்ன அறிவுரை ஆகும்... இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்..சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு மாறுபடும். இதில் நெகிழ்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

மேலும் »

கேள்வி-பதில்

இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?

June 14, 2008
-
இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?

மனிதருக்கிடையே பழக்க வழக்கங்களில் இருக்கும் நியாயமான வேறுபாடுகளை இந்து மதம் ஏற்கிறது. அதுவுமன்றி, மாமிசம்தான் காட்டில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதல் உணவாக இருந்தது. அவரவர் குடும்ப வழக்கப்படி மாமிசம் உண்ணுவதை இந்துமதம் அங்கீகரிக்கிறது. ஆனால், அஹிம்ஸையை ஏதோ சமணமும் பௌத்தமும் மட்டுமே கண்டுபிடித்தது போலப் பேசுவது ஒரு கண்கட்டு வித்தைதான். தொடக்ககால சமணமும் பௌத்தமும் துறவறத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டிருந்தன. இந்து மதத்திலும் நான்காவது ஆசிரமமான சன்யாசத்துக்குப் போகும்போது ஊனுண்ணாமை வற்புறுத்தப்படுகிறது என்பதை நாம் காண வேண்டும். (இரண்டு மதங்களுமே மதப் பரவலின் கட்டாயத்துக்காக இல்லறத்தாருக்கும், பெண்களுக்கும் தமது மதத்தின் கதவுகளைத் திறந்துவிட்டன.) திருவள்ளுவர் உட்பட இந்து...

மேலும் »