Posts Tagged ‘ முக்தி ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)

ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)

உலகு உண்மை ஒருவிதம், ஞானிகளின் உலகமோ வேறு விதம் "பந்தன் நான் எனும் மட்டே பந்த முக்தி சிந்தனைகள்" என்பார் ரமணர். அந்த "நான்" இல்லாதவனுக்கு பந்தம் எப்படி வரும்? ருமதி. கனகம்மாள் எழுதிய "ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை"யின் துணை கொண்டு எழுதப் பட்ட அற்புதமான தொடரின் நிறைவு பகுதி இது...

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தொடர்

ரமணரின் கீதாசாரம் – 11

ரமணரின் கீதாசாரம் – 11

ரமணர் காலத்தில் அவரது ஆஸ்ரமத்திற்கு அருகே குடி கொண்டிருந்த பலவித மிருகங்களும் அவரிடம் அன்யோன்யமாகப் பழகி இருக்கின்றன. குரங்குகள், அணில், காக்கை, பாம்பு, மயில், பசு, மான் மற்றும் ஒரு சிறுத்தை கூட அவர் முன்னிலையில் சகஜமாக இருந்திருக்கின்றன என்றால் அந்த சீவ ராசிகளுக்குக் கூட நாம் இப்போது சொன்ன சமநோக்கு இருந்திருக்கின்றன என்றுதானே பொருள்?

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், தத்துவம்

அறியும் அறிவே அறிவு – 8

December 11, 2010
-
அறியும் அறிவே அறிவு – 8

மதங்கள் பல விதம். ஆத்மா உண்டென்கிறது ஆஸ்திகம், இல்லை என்கிறது நாஸ்திகம். உருவம் உண்டு என்கிறது சகுண உபாசனா மார்க்கம், நிர்குண உபாசனை ஒன்றே என்பது அத்துவித உண்மை. இரண்டென்பது துவிதம். பலவிதம் என்கிறது விசிஷ்டாத்வைதம். இங்கு அத்துவிதமென்றது மதத்தின் அடிப்படையில் அல்ல. அனுபவ உண்மையே சொல்லப்பட்டது. அத்துவிதம் மதம் அல்ல, அது அனுபவமே.

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம், சைவம், தொடர்

தலபுராணம் என்னும் கருவூலம்-4

தலபுராணம் என்னும் கருவூலம்-4

நிலையாமையே உண்மை. எனினும் இந்தத் தத்துவம் எல்லோருக்கும் உரியதன்று. அதற்குரிய தீவிரதர மனப் பக்குவம் உடையவருக்கே இந்தத் தத்துவத்தின் பொருள் விளங்கும். அத்தகைய தீவிரதர மனப்பக்குவம் இல்லாதவருக்கு இந்த தத்துவத்தைக் கூறல் கேலிக் கூத்தாகிவிடும். அருச்சுனனையும் இராமனையும் போல உலகியற் கடமைகளைக் குறைவறச் செய்து முடித்தலே பிற அனைவருக்கும் உரியதாகும்.

மேலும் »

ஆன்மிகம்

ஜோதியில் கலந்தோர்

ஜோதியில் கலந்தோர்

கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் மின்னல் போன்ற ஒரு சுடர் தென் திசையிலிருந்து சிவ பெருமான் வீற்று இருக்கும் திசை நோக்கிச் செல்கிறது. அதைக் கண்டதும் முனிவர் கை கூப்பித் தொழுது நிற்கிறார்... இப்படியான நிகழ்ச்சிகள், மனிதனாகப் பிறந்தாலும் ஒருவன் உயர் நிலைக்குச் சென்று உண்மை நிலையை உணரும்போது இறைவனுடன் ஒளியாக ஐக்கியம் ஆகிறான் என்பதைக் காட்டுகிறது.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்

வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்

வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ...

மேலும் »

ஆன்மிகம், பிறமதங்கள்

கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

... இந்த ஓவியத்தில் உள்ளது போன்றதொரு காட்சியை அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் வருணித்துவிட்டு இத்தகைய சாவு எனக்கு வாராமல் அருளவேண்டும் என முருகப்பெருமானிடம் வேண்டுகிறார். இயேசு கிறிஸ்துவின் இறுதி உயிர்களுக்கு இன்பம் விளைவிப்பதற்கு மாறாக அவலமே விளைத்ததால் அதனைத் தமிழ் இந்துக்கள் மதிக்காததில் வியப்பொன்றும் இல்லை. இது துர்மரணமே.

மேலும் »