ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்

போலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகள் ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். “நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்” என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; … ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள்…

View More ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்

இந்துத்துவ முத்திரை

‘உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி, அவர்கள் முதுகெலும்பை உடைத்து, அதன்மீது அவன் கட்டியவை இந்தக் கோயில் கோபுரங்கள்’… சாரு நிவேதிதா அப்போது முற்போக்கு முகாம்களால் இந்துத்துவ வாதி என்று வசைபாடப் பட்டார். காந்தி முதல் கண்ணதாசன் வரை எல்லாரும் கீதையைப் பற்றி எழுதியிருக்காங்களே? அவங்க எல்லாம் பார்ப்பனீயத்தின் பாதுகை தாங்கிகள்.. இந்துத்துவ முத்திரை என்பது ஒரு சர்வப்ரஹரண ஆயுதம் – இந்த அஸ்திரத்தால் குத்துப் படாத ஆளே இல்லை, அதை அவ்வப்போது எடுத்துப் பிரயோகிப்பவர்கள் உட்பட!

View More இந்துத்துவ முத்திரை

பெரியாரின் மறுபக்கம்- 20[இறுதிப் பாகம்]: வீரமணியின் முரண்பாடுகளும் மூடநம்பிக்கைகளும்

தாய்-தந்தையை இழந்தவர்கள்- சுயமரியாதைகாரர்களாக ஆன பிறகு அவரவர் தாய்க்கோ, தந்தைக்கோ ஆண்டுதோறும் நினைவு நாள் கொண்டாடுகிறார்களா? இல்லையே? இன்றைய சமாதிகள்தான் நாளைய கோவில்கள் என்கிற மூடநம்பிக்கை வளர்ச்சி வரலாற்றில் பாலபாடத்தை மறந்துவிட்டு, பெரியார் சமாதிக்கு மரியாதை, பெரியார் சிலைக்கு மலர் மாலை போடுகின்ற ஒருவன் எப்படி சுயமரியாதைக்காரன்?
– வே. ஆனைமுத்து, நூல்; பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்

View More பெரியாரின் மறுபக்கம்- 20[இறுதிப் பாகம்]: வீரமணியின் முரண்பாடுகளும் மூடநம்பிக்கைகளும்