காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு

காட்டுமிராண்டி என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் எங்காவது வருகிறதா என்று பன்மொழிப் புலமையும் வேத சாஸ்திரப் பயிற்சியும் கொண்ட அறிஞர், நண்பர் கேட்டார். கொஞ்சம் யோசித்து விட்டு, இல்லவே இல்லை, இது பிற்காலச் சொல் என்று கூறினேன். தமிழ்க்களஞ்சியம் ஹரிகியிடம் கேட்டபோது, அவரும் அதனை வழிமொழிந்தார். தமிழ் உரைநடையில் 19ம் நூற்றாண்டில் தான் இந்தச் சொல் நுழைந்திருக்க வேண்டும் என்பதாக நாங்கள் முடிவு செய்தோம்.. முக்கியமாக, இப்படி ஒரு சொல்லை உருவாக்க வேண்டிய தேவை என்ன என்பது தான் இங்கு சிந்திக்க வேண்டியது. ஏன் இத்தகைய ஒரு சொல் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமும் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் மொழியில் இல்லை என்ற கேள்வி எழுகிறது…

View More காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3

அவர்கள் திருந்தி வாழவேண்டும் என்று சொல்வதைவிட்டு அந்த உரிமை பெண்களுக்கும் வேண்டும் என்ற திசையில் சென்றுகொண்டிருக்கிறது இன்றைய பெண்களின் சம உரிமைக் கோரிக்கை… இவற்றை எல்லாம் எந்தப் பெண்ணியவாதிகளோ அல்லது தங்களை அப்படிச் சொல்லிகொள்கிறவர்களோ சுட்டிக் காட்டியதும் இல்லை; அவர்கள் கண்களில் இவை படுவதும் இல்லை. அவர்களுக்குத்தான் கணவனுக்கும் மாமியாருக்கும் காபி போட்டுக் கொடுக்கும் பெண்ணடிமைகளை மீட்கவேண்டிய நெருக்கடி இருக்கிறதே… பெண்கள் தங்கள் நளினத்தையும், எழிலையும், கம்பீரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.

View More சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3