Posts Tagged ‘ மொழியாக்கம் ’

இலக்கியம், நிகழ்வுகள், வரலாறு

செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்

செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்

தனது வாழ்க்கையையே சிந்து சமவெளி இலச்சினைகளை விளக்கிட செலவழித்த மகாதேவன், ஹரப்பா பண்பாடு வேதப் பண்பாடு என்று சொல்வதை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் ஒரு இனவாதச் சட்டகத்தில் அந்த பண்பாட்டின் வரலாற்றை விளக்கி அதனை இன்றைய அரசியலுடன் முடிச்சு போடக்கூடியவர்களிடம் எவ்விதம் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் விழா மதிப்பு பெறுகிறார்?... பழந்தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டின் இந்த மைய அச்சுக்கள், பழந்தமிழரை பாரதப் பண்பாட்டுச் செழுமையுடன் இணைக்கும் இப்பாவுகள் - காட்டப்பட்டனவா இம்மாநாட்டில்? வலியுறுத்தப்பட்டனவா? (மூலம்: டாக்டர் எஸ்.கல்யாணராமன்)

மேலும் »

கேள்வி-பதில், சமூகம், வரலாறு

சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?

May 20, 2010
-
சாதிகள்  வக்கிரமடைந்தது எப்படி?

(மூலம்: ராம் ஸ்வரூப்) பண்டைய இந்தியாவில் சாதி கூட்டுறவு சித்தாந்தமாகவும், கலாசார அடையாளமாகவும் இருந்தது. ஆனால் இன்று அது மாபெரும் சமூக மோதல்களுக்கான சித்தாந்தமாக உருமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது... தற்போதைய தோட்டி சாதியினரின் பெயர்களையும், அவற்றின் உட்பிரிவுகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கையில், இந்த சாதியின் உருவாக்கம் முகமதிய ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது...

மேலும் »

கவிதை, வேதம்

பூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு

April 28, 2010
-
பூமி சூக்தம் –  பூமிக்கு வேதத்தின் பாட்டு

பூமி, உன்னிடமிருந்து எதைத் தோண்டினாலும் அது விரைவில் வளரட்டும். உனது இதயத்தையும், மர்மஸ்தானங்களையும் நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக... ஆழ்ந்த கவித்துவமும், ஆன்மிகமும் ததும்பும் மொழியில், இன்றைக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், புவிநேசர்களும் கூறும் சூழலியல் கருத்தாக்கங்களுடன் இயைவதாக வேத ரிஷிகளின் இந்தக் கவிதை விளங்குகிறது என்றே சொல்லலாம்.

மேலும் »

இலக்கியம், சைவம், பிறமதங்கள்

ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்

ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்

மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்... ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

மேலும் »

இந்து மத மேன்மை, சமூகம், வழிகாட்டிகள்

இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை

இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை

உலத்தாருக்குத் தொண்டு செய்ய நான் உனக்குச் சுதந்திரம் கொடுத்தேன். நீ வெளியே போய் இந்த சமாச்சாரத்தைச் சொல். இந்தியா விருத்திக்கு வரும்போது ஸனாதன தர்மம்தான் முன்னுக்கு வரும் என்பதைச் சொல். இந்தியா மேன்மையையடையுமென்று சொல்லும்போது ஸனாதன தருமந்தான் விருத்தியடையுமென்பது கருத்து; இந்தியா பிரவிருத்தியாகுமென்று சொன்னால், உலகத்தின் கண் ஸனாதன தருமம் பிரவர்த்திக்குமென்று பொருள்...

மேலும் »

இலக்கியம்

மருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி

மருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி

... ஏனெனில், உலகிலுள்ள அனைவருக்கும் பொது உரிமையான கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக நான் மன்றாடுகிறேன். கருத்துச் சுதந்திரத்தின் பகுத்தறிவுத் தன்மையைவிட, அது மனித இயல்பின் இதயமாக இருப்பதே எனது செயல்களுக்குக் காரணம் என்று என் மனசாட்சி சொல்லுகிறது. (”மிட்நைட் டையஸ்பரா: என்கவுண்டர்ஸ் வித் சல்மான் ருஷ்டி” புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்)

மேலும் »

சமூகம்

அந்த அடக்குமுறையாளர்கள் !

அந்த அடக்குமுறையாளர்கள் !

மூலம்: தருண் விஜய், மொழியாக்கம்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன் நல்ல நோக்கங்களுடைய நமது அன்பிற்குரிய பல ஹிந்துக்கள், சிறிதும் வெட்கமில்லாமல், தாங்கள் ஒரு கிருத்துவ பள்ளியில் படித்திருந்தாலும், கிருத்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று பல முறை பீற்றிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மேன்மையாளர்களின் பட்டியலில் எனது பேரையும் நான் சேர்க்கச் சொல்லவா? நான் ஒரு கிருத்துவப் பள்ளியில்தான் படித்தேன். எனது ஆசிரியர்களான ஜேக்கப் சார், மற்றும் ஃபாதர் பெஞ்சமின் மீது அன்பு கொண்டுள்ளேன். ஆனால், அவ்வன்பு, "சார், ஒரு ஹிந்துவாக, நான் மதிக்கிற, நீங்கள் சார்ந்துள்ள மதத்தின் பெயரால் சிலர் செய்யும் செயல்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை" என்று கூறுவதைத் தடுக்கலாமா?ஜனநாயகமும் பன்மையும்...

மேலும் »

கவிதை

விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

August 14, 2008
-
விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

மீண்டும் எழுவாய் இது உறக்கம்தான் மரணமல்ல புது வாழ்வில் விழித்தெழும் துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன் கமலமலர் விழிகளின் சிறு அயரல் ஓ சத்தியமே! உன்னை வேண்டி நிற்கும் உலகம் உனக்கென்றும் அழிவில்லை

மேலும் »

கவிதை

அன்னை காளி – கவிதை

June 24, 2008
-
அன்னை காளி – கவிதை

(மூலம்: சுவாமி விவேகானந்தர்) நண்பா துக்கத்தையும் துணிந்து காதலி பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள் அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு தாய் உன்னிடம் வருவாள்.

மேலும் »