ஒரு நிஷ்காம கர்மி

உயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில் இளம் வயது தாகூர் தான்…. யமுனை நதியைக் கடந்தால் பட்பட் கஞ்சில் வீடு. தந்தை விட்டுப் போன லைப்ரரி. அது மட்டுமல்ல. புத்தகங்களோடும் சிந்தனை உலகோடும். கலைப் பிரக்ஞையொடும் வாழ்வதில் தான் அர்த்தம் உண்டு என்று நினைக்கும் கலாசாரம்….

View More ஒரு நிஷ்காம கர்மி

க.நா.சு.வும் நானும் – 3 [நிறைவுப் பகுதி]

க.நா.சு.வுக்கு என்று ஒரு சிஷ்யர் கூட்டம் கிடைத்திருக்கிறதே, வேதனை தான்… கலாநிதி கைலாசபதி, “என்னதான் இலக்கியக் கொள்கைகளை அள்ளி வீசினாலும், க.நா.சு.விடம் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற பாகுபாட்டுணர்ச்சி ஆழமாகப் பதிந்திருக்கிறது…” தமிழ்நாட்டு தெருக்களில் விழுந்து கிடப்பது க.நா.சு என்னும் ஒரு வயோதிகர் அல்ல. தமிழ் அறிவுலகம் விழுந்து கிடக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றும்… அந்த விமர்சனக் குரலால் அதன்பின் வந்த சீரிய படைப்பிலக்கியம் தன்னை நிறுவிக்கொண்டாலும்,. இன்றைய இதன் ஜீவிதம், மறக்கப்பட்ட அந்த விமர்சனக் குரல் தந்ததுதான் என்பதை அது உணர மறுக்கிறது. க.நா.சு.வா யார் அது?….

View More க.நா.சு.வும் நானும் – 3 [நிறைவுப் பகுதி]