சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்

ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய ஸ்தோத்திரங்களில் உன்னத இடத்தை வகிப்பவை சுவாமி விவேகாநந்தர் அருளியவை. கேட்பதற்கே மிகவும் எழுச்சியூட்டும் துதியாக அமைந்தது ‘கண்டன பவ பந்தன’ என்னும் துதி. பெரும் சமுத்திர அலைகளின் அணி போல் திரண்டு எழும் நாத அலை போன்றே பாடுங்கால் அமைவது… வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவருக்கு நீஞ்சிக் கரை சேரும் படியாக ஒரு புணை ஒன்றைக் கொடுத்தால் அதைக் கொண்டு கரையை நோக்கி நீஞ்சாமல் அடித்துப் போகும் வெள்ளத்தின் ஓட்டத்தின் வழியிலேயே போவது சுலபமாக இருக்கிறது என்று கொண்டு அப்படியே கடலில் போய் மூழ்கிவிடும் அபத்தமாகத்தான் இந்த ஜீவன் தனக்கு இயற்கையில் கொடுக்கப்பட்ட திறமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது…

View More சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்

[பாகம் 22] அமுதாக மாறிய மது

ஒருவனிடத்துள்ள அறிவு, அவன் அடைந்துள்ள பண்பாடு யாவும் அவன் பழகும் நண்பரையும், அவன் வாழும் சூழ்நிலையையும் பொருத்து உருவாகின்றது… தான் தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்பதை மனிதன் தெரிந்து கொள்ளுவதில்லை. மனிதனிடத்து மறைந்து கிடக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்த உதவுவதே சமயம்… காந்தத்தைச் சார்ந்த இரும்பானது காந்தமயமாக மாறியமைவதைப் போல, சான்றோரைச் சார்ந்த கொடியவனும் நாளடைவில் சான்றோனாக மாறியமைகின்றான்… கிரீச சந்திரகோஷரிடம், “நீ செய்யும் செயல்கள் அனைத்தையும் நினைவு வரும்பொழுது மட்டும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு” என்றார் ராமகிருஷ்ணர்…

View More [பாகம் 22] அமுதாக மாறிய மது

எழுமின் விழிமின் – 10

ஜாதிப் பிரச்னைக்கு நாம் காணும் மாற்றம் ஏற்கனவே மேல் நிலையிலிருப்பவர்களைத் தாழ்த்துவது அல்ல; அன்றி அளவின்றி உண்டு, குடிப்பதன் மூலம் மூளை தடுமாறி ஓடுவதல்ல. வரம்பு மீறிப் போகங்களை அனுபவிப்பதற்காக முன்னோர் வகுத்த எல்லையைத் தாண்டிச் செல்லுவதுமல்ல… மனித குலம் முழுவதையும் மெல்ல மெதுவாக உயர்த்தி, எதையும் எதிர்க்காத, அமைதியான, உறுதியான, வழிபாட்டுத் தன்மையுள்ள தூய தியான வடிவான ஆன்மிக மனிதனாக ஆகும் லட்சிய நிலைக்கு ஏற்றி வைக்க வேண்டும். அந்த லட்சியத்திலேயே தெய்வமுள்ளது… உருவ வழிபாட்டால் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்களை உண்டாக்க முடியுமானால் மேற்கொண்டு ஆயிரம் உருவங்களைக் கொண்டு போங்கள். இறைவனருளால் உங்களுக்கு வெற்றி கிட்டட்டும்.

View More எழுமின் விழிமின் – 10

[பாகம் 9] வாழ்ந்து காட்டியவரோடு மேலும் சில சம்பவங்கள்…

அன்பு சகோதர்களே! நீங்கள் நன்றாக இந்து மதத்தை விமர்சனம் செய்து விட்டீர்கள். நன்றாக சாடியும் உள்ளீர்கள். அதாவது, மதத்தலைவர்களின் கருத்துக்கு எல்லோரும் வாய்பொத்தி, கைகட்டி ஏற்றுகொள்வதாக கூறுகிறீர்கள். ஆனால் இந்து மதத்தில் அப்படி ஏற்றுகொள்ளப்படுவதில்லை. உண்மைதான். முற்றிலும் உண்மைதான். என்னசெய்வது சகோதரர்களே! பகுத்தறிவும், சுயசிந்தனையும், கொள்கை தெளிவும் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாதம் இருக்கும்; பிரதிவாதம் இருக்கும்; மோதல்கள் இருக்கும் மேற்சொன்ன பண்புகள் இல்லாத இடங்களில் ……..

View More [பாகம் 9] வாழ்ந்து காட்டியவரோடு மேலும் சில சம்பவங்கள்…

[பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்

இதனை நாம் எவரிடமிருந்தும் கடன் பெறவில்லை, பெறவேண்டிய அவசியமும்
இல்லை.இப்படித்தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கட்டப்பட்ட குருகுலம்
இது. தவிர உழைப்பின் மாண்பினை(Dignity of Labour) இந்திய மக்களுக்க உணர்த்திய
வகையில் இப்பெருமை காந்திடிகளுக்கு உண்டு. காந்தியடிகள் இதை
நடைமுறைப்படுத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே பரமஹம்ஸர் இச்செயலைச்
செய்து காட்டியிருக்கிறார். குலத்தால் அந்தணராகிய ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்ஸர்
உண்மையான தொண்டு என்ன என்பதைத் தம் வாழ்வின் மூலமாக உணர்த்தியருளினார்

View More [பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்

[பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி

1000 சித்பவானந்தர்கள் வந்தாலும் தமிழ் மண்ணில் சம்ஸ்க்ருதத்தை வளர்த்து விட முடியாது என்று ஈவெரா கர்ஜித்தார். சுவாமிகளின் துறவு சீடர்களில் ஒருவர் சமஸ்கிருதத்தையும் வேதத்தையும் பரப்புவதற்காகவே சுவாமிகள் பெயரிலேயே ஆஸிரமம் அமைத்து தம்மை
அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்.

View More [பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி

[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா!

தபோவனம் கட்டத் தேவைக்கு மேற்பட்டும் நிதி வரத்துவங்கியது. உடனடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார்:

“தாயுமானவர் தபோவனத்திற்குத் தேவையான நிதி சேர்ந்து விட்டது. இனி அன்பர்கள் நிதி அனுப்பவேண்டாம். அனுப்பினால் திருப்பி அனுப்பப்படும்”.

View More [பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா!

[பாகம் 2] குதி. நீந்தி வா !

சுவாமியிடம் பெற்ற வைராக்கிய உணர்வினால்தான் திண்டுக்கல்லில் ஒரு மில்லாக இருந்த செளந்தரராஜா மில்லை 6 மில்களாக உயர்வடையச் செய்ய என்னால் முடிந்தது. சாதாரண ஆபீஸ் பையனாக உள்ளே வந்த நான் முதலாளிக்கே Special Advisor -ஆக முடிந்தது.

View More [பாகம் 2] குதி. நீந்தி வா !

வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1

காலதாமதமாக வந்தார் ஒரு பிரதம விருந்தாளி. வந்தவர் சாதாரணமானவர் அல்ல. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சித்பவானந்த சுவாமியோ நேரத்தை மிக முக்கியமானதாகக் கருதுபவர். எதையும் யாருக்காகவும் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காத உறுதிப்பாடு உடையவர். எம்.ஜி.ஆர். வந்தவுடன் மேடையில் எல்லார் முன்னிலையிலும் வைத்தே கேட்டு விட்டார் [..]

View More வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1