Posts Tagged ‘ வணிகம் ’

அரசியல், தரவிறக்கம், பொருளாதாரம்

இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்

இந்திய சில்லறை  வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்

இந்திய சமூக, பொருளாதார, கலாச்சார யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு இப்பிரசினையை அணுக வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து ஹம்ஸா குரூப் தொழில் நிறுவனத் தலைவர் சேகர் சுவாமி ஒரு அருமையான பிரசண்டேஷனை உருவாக்கியுள்ளார். அதன் தமிழ் வடிவத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்... கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த பிரசினையில் தேச நலனை முன்வைத்து பா.ஜ.க எடுத்திருக்கும் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் பாஜவுக்கு ஆதரவாக நின்று....

மேலும் »

பொது

சுதேசி: புதிய தமிழ் வார இதழ்!

சுதேசி: புதிய தமிழ் வார இதழ்!

இந்திய தேசிய, கலாசாரத் தன்மையைத் தன் பெயரிலேயே தாங்கி “சுதேசி” என்ற புதிய தமிழ் வார இதழ் தொடங்கப் பட்டுள்ளது..அரசியல், ஆன்மீகம், அழகு, ஆரோக்கியம், கலாசாரம், தேசியம், உலகம், வெள்ளித்திரை, சின்னத்திரை, புத்தகம், இசை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, தொடர்கதை, சிறுகதை, சித்தம், மருத்துவம்.... செப்டம்பர் 8 முதல்...தமிழகம் முழுவதும்...ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்..

மேலும் »

சினிமா

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?... இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது....

மேலும் »

புத்தக விமர்சனம், வரலாறு

சில சரித்திர நூல்களைப் படிக்கையில்..

சில சரித்திர நூல்களைப் படிக்கையில்..

கடல் வழி வணிகம் முதல் நூற்றாண்டிலிருந்தே நன்கு அறியப்பட்டிருந்தது. சங்க நூல்களில் சிறப்பாக் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சங்க நூலினின்று, எவ்வாறு அரசு, வணிகப் பெருமக்களுக்கு உதவி செய்து அவர்கள்து பொருட்களை ஜாக்கிரதையாகப் பாதுகாத்ததென்பதும் தெரிந்து கொள்கிறோம். இது குறித்து இந்த நூலில் விவரம் கூறப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவர்கள் எவ்வாறு உதவினார்கள் என்று கூறப்பட்டுள்ளது... கோழிக்கோட்டிலிருந்த கப்பல்களைத் தன் வசமாக்கிக் கொண்ட பிறகு டி காமா அங்கிருந்த எண்ணூறு மாலுமிகளின் கைகளையும் கால்களையும் மற்ற அவயவங்களையும் வெட்டினான்.

மேலும் »

சமூகம், பொருளாதாரம், வழிகாட்டிகள்

பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்

பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்

சமுதாய பிரமிடின் அடித்தளத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு தேவைப்படும் சேவைகளையும் பயன்பாடுகளையும் அளிப்பதன் மூலம், கார்ப்ரேட் அமைப்புகள் இலாபம் பெற முடியும், அதே நேரத்தில் வறுமையை ஒழிக்கவும் முடியும் என்றார் உலகப் புகழ்பெற்ற பொருளாதார பேராசிரியர் சி.கே பிரகலாத்... பணத்தை அள்ளிக் கொடுத்து உருவாக்கும் தாராள மனப்பான்மையால் விளைந்ததல்ல ஜெய்ப்பூர் செயற்கை கால்கள்; மாறாக அடித்தள மக்களின் தேவைகளிலிருந்து, அதன் அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்து உருவானது.

மேலும் »

சினிமா

அங்காடித் தெரு – திரைப்பார்வை

அங்காடித் தெரு – திரைப்பார்வை

'அண்ணாச்சி' முருக பக்தர் என்றாலும், அவருக்கு வேலுக்கும் சேவல் கொடிக்கும் நடுவில் இருப்பது முருகன் அல்ல, லாபம் மட்டும்தான். சுபம் அல்லாத லாபம்.. இரக்கமின்றி கண்காணிக்கப்பட்டு வதைத்தே விலங்குகளாக வைக்கப்படும் அந்த இடத்திலும், அனைத்து இயந்திரத்தனமான மானுடம் மறந்த மனிதர்களின் சிறைகளை உடைத்துக் கொண்டு, உயிர்த் துடிப்பு தன்னை, தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

மேலும் »

பொது, பொருளாதாரம்

கூகுள் கொண்ட கோபம்

February 1, 2010
-
கூகுள் கொண்ட கோபம்

அரசின் சைபர் ஒற்று வேலைகள் இதில் 4-வது விஷயத்தில் கைவைப்பதாக கூகுள் நினைத்தால் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அதை வைத்துத்தான் மற்ற மூன்று விஷயங்களும் கட்டியெழுப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அந்த ஆதார உளியே களவாடப்பட்டால் கடையை மூட வேண்டியதுதான் ஆக, புதிய மாபெரும் சந்தை என்பதை விட, வாழ்வா சாவா பிரச்சனையாகவே இவ்வகை தாக்குதல்களையும் வேவு வேலைகளையும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பார்க்கும். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது ஒரு வியாபார அவசியமே ஒழிய மனித உரிமைமேல் வந்த திடீர் ஆர்வமெல்லாம் இல்லை.

மேலும் »

அரசியல், அறிவியல், பொருளாதாரம்

பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1

பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1

டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் எல்லாவற்றுக்கும் செலவு அதிகமாக ஆகும். புவி பாதுகாப்பு உச்சி மாநாடு காசபிளாங்காவிலோ அல்லது கொல்கத்தாவிலோ நடைபெற்றிருந்தால் செயற்கையாக வெப்பம் அளிப்பது மற்றும் ஒளி அளிப்பது ஆகியவற்றுக்காக மின்சாரத்தை அதிக அளவில் செலவிடவேண்டி இருந்திருக்காது..... அமெரிக்கா கடந்த 30 ஆண்டில் தனது நிலப்பரப்பில் அணுசக்தி ஈனுலைகளை ஒன்றைக்கூட அமைக்கவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் வளரும் நாடுகளுக்கு அணுசக்தி ஈணுலைகளை அமைத்துத் தருவதாக சொல்லி கோடிக்கணக்கான தொகையை அபகரிக்க முற்படுகின்றன. (மூலம்: எம்.டி.நளபத், தமிழில்: ஆழிநோக்கி)

மேலும் »

சமூகம், பொருளாதாரம்

வெளிநாட்டு நேரடி முதலீடும், இந்திய சில்லறை வியாபாரமும்

வெளிநாட்டு நேரடி முதலீடும், இந்திய சில்லறை வியாபாரமும்

பெருநிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று வாதிடுபவர்கள், இப்போதுள்ள சில்லறை வியாபாரிகள் இந்திய சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் நல்கியுள்ள, நல்கிவரும் பங்களிப்பை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டனர்... இந்தியாவில் சில்லறை வியாபாரம் அமைப்பு சாரா நிலையில் உள்ளது. இது பாரம்பரியமானது. சமூகம் சார்ந்தது. செலவு குறைவானது. உழைப்பு செறிவு மிக்கது.

மேலும் »

வரலாறு

இந்திய நாட்டின் அன்றைய கப்பல் மேலாண்மையும் துறைமுகங்களும்

August 7, 2009
-
இந்திய நாட்டின் அன்றைய கப்பல் மேலாண்மையும் துறைமுகங்களும்

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் கடல் வழி வணிகம் குறித்தும், அதைச் சீராக வைத்திட பின்பற்றப்பட்ட விதி முறைகளும் விளக்கப்பட்டுள்ளன - இன்றைய முறைகள் போல...பலதரப்பட்ட வணிகச்சரக்குகள், பெரிய, விரைந்து செல்லக்கூடிய 'வங்கம்' என்ற வகைக் கப்பல்களில், வந்திறங்குகையில், எழும் ஓசையை வர்ணிக்கும் சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியின் பாட்டு ...

மேலும் »