ஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்

அதிகபட்ச விலைக்கும்(MRP) ஜிஎஸ்டிக்கும் என்ன வித்தியாசம்? ஏன் ஜிஎஸ்டியை சிலர் இப்படி எதிர்க்கிறார்கள்? பிஸ்கட் ஜிஎஸ்டி வரி 18% – உண்மை என்ன? ஜி எஸ் டியிலே சினிமா வரியிலே இவர்களின் கோரிக்கை தான் என்ன, அது நியாயமானதா? ஜிஎஸ்டியின் மிகப்பெரும் நன்மை என்ன?…. முன்னாடி மாநில வரி, மத்தியவரி, கலால் வரி, சுங்க வரின்னு நூத்துக்கணக்கிலே வரி தாக்கல் செய்யனும். இருந்தப்பவும் ஒண்ணும் சொல்லல. கணக்கு காட்டினால் தானே எத்துணை வரி, எம்புட்டு சான்றிதழ் என கவலைப்படணும். அதான் வரியே கட்டப்போறதில்லே. அப்புறம் எத்தனைன்னு எதுக்கு கவலைப்படணும்? இப்போ? வாங்கினாலும் வித்தாலும் எப்படியும் கணக்கு காட்டியே ஆகணும். இல்லாட்டி வாங்கினவரும் வித்தவரும் கணக்கு காட்டியாச்சுன்னா முடிஞ்சது சோலி…

View More ஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்

பட்ஜெட் மெய்ப்பட பதுக்கல் பணம் வேண்டும்

நேர்வழியோ நேர்மையற்ற வழியோ எவ்வழியில் பொருள் ஈட்டப்பட்டாலும் தமது பொருள் விரயமாவதை அல்லது தொலைந்து போவதையோ ஒருவரும் விரும்புவதில்லை. கருப்புப்பணமும் லஞ்சப்பணமும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. எனவே அரசின் சட்டத்திட்டங்க மூலம் அவற்றை பறிக்க முயன்றால் பதுக்கல்காரர்கள் தங்கள் பணபலத்தால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் மூலம் தப்பித்துவிடுவார்கள். அரசின் பணமும் விரயமாகும். அதை விடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகி அதன் அறிவுறுத்தலின் பேரில் SIT அமைப்பை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை அதிகாரபூர்வமாக கலைத்துவிட வேண்டும்.

View More பட்ஜெட் மெய்ப்பட பதுக்கல் பணம் வேண்டும்

பெட்ரோல் விலை உயர்வு – 2

இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 74 விழுக்காடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் அதே வேளை, மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணையை இந்திய அரசு தோண்டி எடுக்காமல் அதனையும் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளது. இவற்றின் நெருக்குதலுக்குப் பணிந்தே, இனிமேல் பெட்ரோல், டீசல் விலையினைத் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்றாடம் கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தாறுமாறான வரிகள் என்பதோடு அதனை இனிமேல் நிர்ணயிப்பது தனியார் நிறுவனங்களின் கைகளில்!..

View More பெட்ரோல் விலை உயர்வு – 2

பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் பதினோரு முறை பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளை விட ஏறக்குறைய நூறு சதவீதம் பெட்ரோல் விலை இந்தியாவில் தான் அதிகம். “இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாசமாக்காமல் ஓய மாட்டேன்” என சபதம் எடுத்துக் கொண்டு இருக்கும் சோனியா காங்கிரஸின் இன்னுமொரு பரிசு இது. கேளிக்கை, உற்சாக பானம், பெண்கள் என நடத்தப்படும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதோடு, அரசு செய்யும் அனைத்து ஊதாரித்தனமான செலவுகளுக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியங்களுக்கும் இந்தக் கடுமையான வரிகளையே அரசு சார்ந்திருக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது.

View More பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!

இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்

இந்திய சமூக, பொருளாதார, கலாச்சார யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு இப்பிரசினையை அணுக வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து ஹம்ஸா குரூப் தொழில் நிறுவனத் தலைவர் சேகர் சுவாமி ஒரு அருமையான பிரசண்டேஷனை உருவாக்கியுள்ளார். அதன் தமிழ் வடிவத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்… கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த பிரசினையில் தேச நலனை முன்வைத்து பா.ஜ.க எடுத்திருக்கும் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் பாஜவுக்கு ஆதரவாக நின்று….

View More இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்

சீனா – விலகும் திரை: ஒரு பார்வை

சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள்..அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை.. “அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை..

View More சீனா – விலகும் திரை: ஒரு பார்வை

இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 2

ஆப்பிரிக்க எண்ணெய் கிணறுகளின் பங்குகளை வாங்க இந்திய, சீன கம்பெனிகள் போட்டி போடுகின்றன. சீன அரசே தேவையான பணத்தை புரட்டி தருவதால் சீன கம்பெனிகளே போட்டியில் முதலிடம்… ராஜ தந்திரங்களும், தார்மீக நெறிமுறைகளும் ஒருசேர பின்பற்றப் படுவது சாத்தியமல்ல. இது யதார்த்தம்… வர்த்தகத்தின் இலாபத்தின் கணிசமான பகுதி ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதை இந்தியா உறுதி படுத்த வேண்டும்…

View More இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 2

பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்

சமுதாய பிரமிடின் அடித்தளத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு தேவைப்படும் சேவைகளையும் பயன்பாடுகளையும் அளிப்பதன் மூலம், கார்ப்ரேட் அமைப்புகள் இலாபம் பெற முடியும், அதே நேரத்தில் வறுமையை ஒழிக்கவும் முடியும் என்றார் உலகப் புகழ்பெற்ற பொருளாதார பேராசிரியர் சி.கே பிரகலாத்… பணத்தை அள்ளிக் கொடுத்து உருவாக்கும் தாராள மனப்பான்மையால் விளைந்ததல்ல ஜெய்ப்பூர் செயற்கை கால்கள்; மாறாக அடித்தள மக்களின் தேவைகளிலிருந்து, அதன் அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்து உருவானது.

View More பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்

சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள்.. சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும்.

View More சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

நம் முற்றங்களில் குவியும் சீனக் கூளம்

… இதே மாதிரி இந்தியத் தயாரிப்பு கிடைக்கிறதா என்று கடை முழுதும் வலைவீசித் தேடினோம். ம்ஹூம், ஒன்றும் அகப்படவில்லை….
இந்தியா, சீனாவுக்கிடையேயான வர்த்தகம் சமீபகாலமாக சராசரியாக ஆண்டுக்கு 50 சதவீதம் என்ற கணக்கில் வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த வர்த்தகம் சீனாவுக்கே முற்றிலும் சாதகமாக இருக்குமாறு சீனா காய் நகர்த்துகிறது. இந்தியா ஏற்றுமதி செய்து கணக்குத் தீர்க்கும் அளவை விட மிக அதிக அளவில் விலையும், தரமும் குறைந்த பொருட்களை சீனா இந்தியாவில் கூளமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

View More நம் முற்றங்களில் குவியும் சீனக் கூளம்