எனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை

புதிய கொள்கைகள், பெரிய திட்டங்கள், பெரிய கட்டமைப்புகள் மூலம் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வருவது ஒரு வழி.
சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும் அதை மக்களின் இயக்கமாக மாற்றி பெரும் அளவில் செய்வது இன்னொரு வழி. இரண்டு வழிகளும் வளர்ச்சியை கொண்டுவரும்… அரசில் இருக்கும் நாங்கள் எப்போதும் ஒரு கேள்வியை கேட்கிறோம், எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது. அதற்கு என்ன வகையான பலன் கிடைக்கிறது? இதற்கு அரசு அலுவலகங்கள் திறமையாக செயல்படவேண்டியிருக்கிறது. இதற்கு சில சட்டங்களை மாற்ற வேண்டி இருக்கிறது… முன்னேற்றம் என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் இருக்கவேண்டும். சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் என்பவை எல்லாம் வேலைவாய்ப்புகள் இல்லையேல் வெறும் வார்த்தைகளாகவே இருக்கும். நமக்கு உற்பத்தி மட்டும் தேவையில்லை, வெகுஜன மக்கள் செய்யும் பெரும் உற்பத்தி தான் தேவை…. பல நாடுகள் வருமானத்தால் பணக்கார நாடுகளாக இருக்கிற போதிலும் சமூக அமைப்பில் ஏழைகளாக இருக்கின்றன. சமூகத்தை ஒன்றாக பிணைக்கும் அவர்களின் குடும்ப அமைப்புகள், நம்பிக்கை முறைகள், சமூக உறவுகள் ஆகியவை சிதறியுள்ளன. நாம் அந்த வழியில் போகக்கூடாது. நமக்கு சமூகமும் பொருளாதாரமும் இணைந்து செயல்படுதல் வேண்டும்…

View More எனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை

பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்

எல்லாவிதமான தடுப்பு முயற்சிகளும் வேலை செய்யாத கடைசி நிலையில் மோடியின் பிருமாண்டமான கூட்டத்தை நிறுத்தும் கடைசி முயற்சியாக இஸ்லாமிய பயங்கரவாதத்தின் துணையை நாடியிருக்கிறார் நிதிஷ். பீஹார் மாநில போலீஸ் இப்படி அலட்சியமாக இருந்திருக்க நியாயமில்லை. எந்தவிதமான குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அளிக்க பிடிவாதமாக மறுக்கச் சொல்லி உத்தரவு இருந்திருக்கிறது….. அன்று மோதியும் பிற பா ஜ க தலைவர்கள் அவர்களுக்கு மேலாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் காட்டிய பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்தின் மீதும் அதன் மக்களின் மனப்பக்குவம் மீதும் மாபெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டன… மக்கள் எந்தவிதமான வன்முறையும் கலவரமும் இல்லாமல் அமைதியாக எவருக்கும் இடையூறு விளைவிக்காமல் பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என்று அக்கறையுடன் அவர் அன்று விடுத்த கோரிக்கை இந்தியாவுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்துள்ள ஒரு கொடை அவர் என்பது உறுதியானது. அவரையும் இந்தியா தவற விடுமானால் அதற்கு மன்னிப்பே இல்லாமல் போய் விடும். ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னும் வாராது போல வந்த மாமணியைத் தோற்பதற்கு இந்தியாவுக்கு நேரமும் வளமும் கிடையாது…

View More பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்

வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்

”.. ஸ்டீபனும், அருள்ராஜும் பழிப்பு காட்டிட்டுப் போறானுங்கம்மா.. நம்ப அவங்களை விட ரொம்ப ஏழைங்க தான? பின்ன ஏம்மா எனக்குப் பணம் தரல?” … இந்து மாணவர் சமுதாயத்திற்கு செய்யப்படும் இதுபோன்ற துரோகத்தை பாஜக ஏற்றுக் கொள்ளாது. மதமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் வாக்குகளை அறுவடை செய்ய திமுக தயாராக இருக்கிறது.. ஜூலை 25ம் தேதி கன்னியாகுமரியில் ஒரு லட்சம் பேர் திரளும் மிகப் பெரிய போராட்டம்…

View More வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்

பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்

சமுதாய பிரமிடின் அடித்தளத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு தேவைப்படும் சேவைகளையும் பயன்பாடுகளையும் அளிப்பதன் மூலம், கார்ப்ரேட் அமைப்புகள் இலாபம் பெற முடியும், அதே நேரத்தில் வறுமையை ஒழிக்கவும் முடியும் என்றார் உலகப் புகழ்பெற்ற பொருளாதார பேராசிரியர் சி.கே பிரகலாத்… பணத்தை அள்ளிக் கொடுத்து உருவாக்கும் தாராள மனப்பான்மையால் விளைந்ததல்ல ஜெய்ப்பூர் செயற்கை கால்கள்; மாறாக அடித்தள மக்களின் தேவைகளிலிருந்து, அதன் அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்து உருவானது.

View More பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்